Get Nandalaalaa atom feed here!

Wednesday, April 20, 2005

புதிய பாப்பரசர் - தொடரும் ஏமாற்றம்!

265வது பாப்பரசராக, 78 வயதான ஜோஸப் ரட்சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கூடிய 117 கர்தினல்களுள், ஜெர்மானியரான இவரே மூத்தவர். மற்ற அனைவரும் மறைந்த பாப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். மறைந்த இரண்டாம் ஜான் பால் அவர்கள் கர்தினலாக இருந்த காலத்திலேயே இவரும் கர்தினாலாக இருந்தவர்.

இவர் மறைந்த பாப் ஜான் பாலுக்கு நெருக்கமானவர். அவரின் பல்வேறு பழமைவாத முடிவுகளுக்கு பின்னணியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாற்றங்கள் குறித்து எவ்விதமான சமாதானத்திற்கும் இடங்கொடுக்காமல் எதிர்த்து வந்தவர். கத்தோலிக்க திருச்சபைக்குள் மாற்றத்தை எதிர்ப்பவர்களுள் முதன்மையானவர்.
பழமையை போற்றுபவராகவும், கட்டிக்காப்பவராகவும் அறியப்படுபவர்.

இவர் கடுமையாக எதிர்ப்பவைகள்:

1.கன்னியாஸ்திரிகளுக்கு குருமார் அந்தஸ்து.
2.பாதிரியார்களை திருமண பந்தந்திற்கு அணுமதிப்பது.
3.மீளமுடியாத கடும் நோயுற்றோரை இறக்க அனுமதிப்பது. (கருணை கொலை)
4.கருத்தடை.
5.கருக்கலைப்பு.
6.ஓரினச் சேர்க்கை.
7.திருமண பந்தமின்றி ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தல்.
8.ராக் இசை.
9.க்ளோனிங்.
10.உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.

இந்த முறை கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் தென் அமெரிக்கா அல்லது ஆப்ரிக்க, ஆசிய நாட்டவர் பாப்பரசராக ஆக தேர்ந்தெடுக்க படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அது பொய்யாக்கப்பட்டு மீண்டும் ஒரு ஐரோப்பியர் ஒருவரே வாடிகன் தலைமையை ஏற்கிறார்.

பல்வேறு மாற்றங்களுக்கான கோரிக்கைகள் கத்தோலிக்கர்களால் எழுப்பப்பட்டு வரும் இவ்வேலையில், ஒரு பழமைவாதியை பாப் ஆக தெரிவு செய்ததிலிருந்து, எவ்வித மாற்றங்களுக்கும் திருச்சபை தயாரில்லை என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஏமாற்றமே என்ற போதும், பழமைவாதிகளுடன் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுகிறது.

இப்போதைய கால கட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையை எவ்வித மாற்றமும் இன்றி வழி நடத்தி செல்லக்கூடிய ஒருவர் தேவை என்பதால், 78 வயதான இவர் தெரிந்த்டுக்கப்பட்டுள்ளார். மிக அதிகமாக ஓர் 10 ஆண்டுகள் வரை பதவி வகிக்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே (வயது காரணமாக) இருக்குமென்பதால், மாற்றங்களை பற்றி இவர் காலத்துக்கு பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற சமாதானம் பழமைவாதிகளுக்கும், மாற்றம் வேன்டுவோருக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவரது தேர்வுக்கு பிற்போக்கு கிருத்துவரான அமெரிக்க அதிபரின் ஆதரவும் இருந்ததாக தெரிகிறது. கிருத்துவ நாடுகளுக்கும், இஸ்லாமிய நாட்டு மக்களுக்கும் இடையே ஓர் சரியான புரிந்துணர்வு தேவைப்படும் இக்கால கட்டத்தில், ஒரு பழமைவாதி வாதிகனுக்கு தலைமை ஏற்பது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனபது போகப்போக தெரியும்.

10 Comments:

At Wed Apr 20, 02:28:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

This comment has been removed by a blog administrator.

 
At Wed Apr 20, 02:46:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

மூர்த்தி,
புதிய பாப்பரசர் எதிர்ப்பவை குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி, நான் வேறுபட்டபோதும்.

//அதுசரி புஷ்ச ஏனுங்க பிற்போக்குன்னு சொன்னீங்க.. ஏதும் வயித்துக்கோளாறாங்க அவருக்கு?//

இது நானாக கண்டுபிடித்து சொன்ன ஒன்றல்ல. ஆகவே என் மீது கோபம் வேண்டாம்.

புஷ்சை பிற்போக்குவாதி என்றதில் அவருக்கே கோபம் வர வாய்ப்பில்லை. ஏனெனில் புஷ்சே பல சந்தர்ப்பங்களில் அவரின் மத அடிப்படைவாத கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையிலேயே நான் எழுதினேன்.
அன்புடன்,
நந்தலாலா.

 
At Wed Apr 20, 03:43:00 PM 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

நன்றி மூர்த்தி!
உங்கள் பொன்னான கருத்துக்களைக் கொட்டியதற்கு.
ஒரேயொரு சந்தேகம் தான்.
அந்த 45 வயதுக்கு மேல் என்று சொல்வதின் காரணமென்னவோ?
அவர்கள் கூறும் அதே மாதவிடாயைத்தான் நீங்களும் கருதுகிறீர்களோ?
பதில் கட்டாயம் சொல்லவேண்டுமென்றில்லை. சும்மா அறிந்துகொள்ளும் அவல்தான்.

 
At Wed Apr 20, 03:43:00 PM 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

அறிந்துகொள்ளும் ஆவல்தான்.

 
At Wed Apr 20, 09:24:00 PM 2005, Blogger ஒரு பொடிச்சி said...

6.ஓரினச் சேர்க்கை.== தப்பு தப்பு ரொம்ப தப்புங்க.. இழுத்து வெச்சி ஒரே வெட்டா வெட்டி பொலி போடனுங்க..

நன்றி நந்தலாலா..
மூர்த்தி,

4.கருத்தடை==இது அவுகவுக சொந்த முடிவுங்க.. ஒன்னுக்கு மேல பெத்தா ஆரு சோறு போடுறது.. வெரலுக்கு தக்கனதாங்க வீக்கம் வேனும்.

இது அவுகவுக சொந்த முடிவுவென்றால்

"உடம்புத் திமிரால் வாங்கி வந்து நிப்பதும்"

"ஓரினச் சேர்க்கை"யும்
அவரவரர் உரிமைதானே?
அதிலும் -சிலர் தவிர- ஓரினச்சேர்க்கையாளராய் இயல்பிலேயே இரக்கிறபோது.. இப்படிச் சொல்லுவது எவ்வளவு மனிதமற்று இருக்கிறது தெரியுமா?
உடன்பாடு இல்லாமலிருப்பது வேறு, அதை -கேள்வியேதும் அற்று- கேலிக்குட்படுத்துவது சரியில்ல.

 
At Wed Apr 20, 09:40:00 PM 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

மூர்த்தி!
மீண்டும் வாசித்தபோது உங்களைவிட பாப்பரசரே மேல் போலத் தெரிகிறது.
சிலவேளை கணக்காக 10 வரவேண்டுமென்பதற்காக எழுதினீர்களா?
பொடிச்சியின் கேள்விகள்தான் எனக்கும்.
அவற்றை அனுமதித்த நாடுகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

 
At Thu Apr 21, 07:00:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

//ஓரினச் சேர்க்கை.== தப்பு தப்பு ரொம்ப தப்புங்க.. இழுத்து வெச்சி ஒரே வெட்டா வெட்டி பொலி போடனுங்க..

நன்றி நந்தலாலா..//

பொடிச்சி,
இதை சொன்னது நான் அல்ல.
மூர்த்தி அவரின் கருத்தாகவே சொல்லியுள்ளார்.
நன்றி,
நந்தலாலா

 
At Thu Apr 21, 09:59:00 AM 2005, Anonymous Anonymous said...

//ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் படைத்து புகுந்து விளையாடு என ஆண்டவனே சொன்னபோதும்//

மூர்த்தி!
மத அடிப்படை வாதத்தின் வேரில் நின்றுகொண்டு கருத்துச் சொல்கிறீர்கள். ஏற்றுக்கொள்ள கடினமாயிருந்தாலும் சொல்கிறேன், பாப்பரசருக்கும், ஜோரஜ் புஸ்ஸின் மத அடிப்படை வாதத்துக்கும் (பரணாமக் கொள்கை பற்றிய அமெரிக்க நிலைப்பாடு) உங்களுக்கும் என்னால் பெரிதாக வித்தயாசம் காணமுடியவில்லை. அதே கடவுள் கோட்படுகளை வைத்துத்தான் அவர்கள் மற்றவை பற்றியும் கருத்துச் சொல்கிறார்கள் (கருணைக்கொலை உட்பட).

மாதவிடாயைச் சம்பந்தப்படுத்தி பெண்குருத்துவத்தை நோக்கும்போதே நீங்கள் அவர்களுக்கு மிகவும் நெருங்கி வந்துவிட்டீர்கள்.

 
At Fri Apr 22, 10:51:00 AM 2005, Anonymous Anonymous said...

பதிலுக்கும் தெளிவுக்கும் நன்றி மூர்த்தி!
ஆனால் பெண் குருத்துவம் ஆண்களுக்கான அதே வயதில் கொடுக்கப்பட வேண்டும். இரு பாலாருக்கும் ஒரே கல்வி, ஒரே சேவை. பிறகேன் அவர்கள் மட்டும் படிப்படியாக வளர வேண்டும். ஆணொருவன் சரியாகப் படித்தால், செயற்பட்டால் 7 வருடத்தில் குருவானவர். அதேதான் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். கன்னியாஸ்திரி சேவை, இறை சேவையெல்லாம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட பின்னரும் செய்வதுதானே? ஆண்களுக்கு மட்டும் இவையெல்லாம் தேவையில்லையென்றால் எப்படி?
25 வயதில் ஆண் குருவானவராகலாமென்றால் அதே வயதுதான் பெண்ணுக்குமிருக்க வேண்டும். மனமுதிர்சியும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமிருக்கும்போல் தோன்றுகிறது.

ஆனால் ஒன்று, படிப்படியான மாற்றங்கள்தான் நிகழும். இறந்த பாப்பரசர் திருச்சபையின் கடந்தகால தவறுகளுக்கு பகிரங்க மன்னிப்புக் கேட்டதுகூட படிப்படியான மாற்றத்தின் பலனே. (துருக்கியில் கேட்டது மிகமுக்கியமானது) அதுபோல்தான் இந்த மாற்றங்களும் நடக்கும். முதலில் பெண்களுக்கே இதுபற்றித் தெளிவில்லாமலிருப்பது கவலைதான். மாலனின் பதிவிலும் இரு இடங்களில் இதுபற்றி எழுதியுள்ளேன்.

 
At Sat Apr 23, 02:54:00 AM 2005, Anonymous Anonymous said...

இது எல்லாம் 2005 ம் ஆண்டில் கதைக்கிற கதையா.... ஆண்டவா உன் பெயரில் இவ்வளவு மூடர்களா...?

 

Post a Comment

<< Home