Get Nandalaalaa atom feed here!

Tuesday, April 26, 2005

கடவுள் நிராகரித்த பாப்பரசர் பிரார்த்தனை

பெனடிக்ட் பதினாறு, பாப்பரசரானதுமே, ஆளாளுக்கு என்னென்னமோ எழுத ஆரம்பிச்சுட்டாங்க. பிளாக் திண்ணு கொட்ட போட்டவங்கள்ளேருந்து, நேத்து வந்த நந்தலாலா வரை எழுதியாச்சி. இனி என்ன மிச்சம்னு பார்த்தா, புதுசா ஒரு கதை இப்போ. அதக்கேளுங்க;

பாபர்சாருனா கடவுளோட ரெப்ரசன்டேடிவ் , அவ்ங்ககுள்ள ரொம்ப குளொஸ் கான்டீக்ட் அப்டினு நினைச்சுகினுருந்தா, நம்ம பேனட்டு கத வேற மாறி போவுது. புச்சா ஒரு மனுசனை கடவுளாக்க அல்லாரும் கூடசொல்லோ, நம்ம பேனட்டு அய்யா, அப்போ அவரு பேரு இன்னாமோ சிங்கர்பா, சரி அத்த வுடு, கடவுளான்ட ஒரு பெட்டிசன் போட்டுக்கீறாரு. அதுல பாபர்சாரு பதவின்றது கயுத்த வெட்டுற கில்லட்டினு, அத்தொட்டு எனக்கு வானா, என்னய உட்டுறுன்னு. அதுக்கு வேற ஆள, நல்லா எளசா புச்சா பாத்து புடிச்சுக்கோன்னும் சொல்லிப்பார்த்துருக்காரு. நான் எங்கினா போயி அமைதியா சொச்ச காலத்தை போக்கிடறேன், என்ன உட்டுரு உட்டுருன்னு மன்னாடிருக்காரு பாவம் மனுசன்.

அனாக்க கடவுள், இப்போ உலகம் கெட்டு பூடிச்சு, ஆம்பள ஆம்பளய கண்ணாலங்கட்டுறான், பொம்பளயும் பொம்பளயும் கூடி வாயுது, கண்ணாலம் கட்டாமலே குடித்தன நடத்துது, இத தனி மனுச உரிமன்னு வேற குரலுடுதுங்கோ நம்ம கஸின் சாத்தான் பார்ட்டிங்கோ, நம்ம பொலிடீக் ரெபரசன்ட் புஷ்ஷு வார இன்னும் நிறையா இடத்துல அமைதிய நில நாட்ட வேண்டிக்கீது, அத்தொட்டு ராக் மீசிக் கேட்டு குட்டிச்சுவரா போன உலக காப்பத்த நீ தாம்பா நம்ம சாய்ஸ் அப்டீனு அடிச்சு சொல்லிருக்காரு.

சொன்னது கடவுளாக கண்டி, கல்லு முல்லு காலுக்கு மெத்தைனு பாடிகினே, (இல்லேபா, அய்ப்ப சாமிக்கிலாம் மால பொடலபா) பதினாறாம் வார்டா, அடச்சே பதினாறாம் பேனட்டா ஆயிக்கீறாரு நம்ம சிங்கரு.

அதுக்கு இன்னா இப்போன்றியா? நம்ம பாயின்டு இதாம்பா. இந்த பாபர்சாரு வெச்ச மொத கோரிகையே கடவுளு ரிஜெக் பன்ன சொல்லோ, நமக்கு இன்னா வொர்ரினா, இந்த மனுசன், சாரிபா, இப்போ அவரு யாரு, ஆங் பாபாண்டவரு, அவரு கடவுலான்ட வெச்ச அடுத்த ரெக்விஸ்டு இன்னா தெர்மா? உலோகத்துல அமேதி வர்னும்னு. இப்போ கடவுளு இந்த ரெக்விஸ்டயும் ரிஜெக் பன்னுவாரோன்னு ஒரே பேஜாராக்கீதுபா. அம்புட்டுத்தான்.

போகசொல்லோ ஒரு பிளாஸ் மேட்டரு: நம்மோ பாபாண்டவர கண்டுக்க அவ்ரு பேட்டக்கார சனம்லாம் வந்துக்கிதுபா. அப்போ லேட் விசிட் குடுத்துருக்காரு பாபாண்டவ்ரு. பெரீய மனுசன்னா சொம்மாவா? ஒரு இது வானா அதான் அப்டினு பேட்ட சனம் சொம்மா இருக்க சொல்ல இவ்ரா எடுத்து உட்ருக்காரு. இன்னான்னு? நம்ம பேட்ட சனம்னாலே பங்சுவலு. அனாக்க நா இப்போ இட்லி பேட்டக்காரனா மாறிக்கினேன், அத்தொட்டு எனக்கு லேட் விசிட்டு பயக்கமா பூடிச்சுனுருக்காருபா. இதுல யென்னா அவரு பேட்ட சனம்னா உசத்தி இட்லி பேட்டனா இன்சல்டானு அப்டினு கேட்டு நல்லா 'பேட்ட வெறி பாபர்சாரு'ன்னு நாலு பிளாக் உடுங்கப்பா சொல்றென். அஆங்.

6 Comments:

At Tue Apr 26, 09:06:00 PM 2005, Anonymous Anonymous said...

ஊடு கட்டி அடிச்சிருக்கியப்பா - நல்லா கீது நைனா.

 
At Tue Apr 26, 10:17:00 PM 2005, Blogger Narain said...

சோக்கா அடிச்சாரு பாரு பல்டி பென்டிக்ட். ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணக் கூடாது. ஆம்பளையும் பொம்பளையும் கல்யாணம் பண்ணக் கூடாது. ஆம்பளைங்க வுட்டுக்கு போக கூடாது, சர்ச்சே கதியாக் கீறணும். பொம்பளங்க, வூடே கதியா கீறணும், சர்ச்சுக்கு போக கூடாது. யாரும் ஒண்ணுக்கு போகக் கூடாது. யாரும் ஸ்கூலுக்கு போக கூடாது. கடவுளுதான் உலகத்தை அவரோட சொந்த லேப்ல டிசைன் பண்ணாரு. அவர் கொடுத்த ப்ளாக்பஸ்டர் பொருள் தான் கிறிஸ்துவம், அதுவும் பாதிரிமாருங்கோ. அவங்க சொன்னா தான் எல்லாம் நடக்கும். நம்ம இரட்சகர் அடச்சே, இரட்சிங்கர் சொன்ன போதும், அமெரிக்கா ஈராக் மேல போருக்கு போகாது ஆனா, வடகொரியா மேல, துருக்கி மேல, சூடான் மேல, எத்தியோபியா மேல, ஈரான் மேல போருக்கு போகும். கேட்டா,
மேல இருக்கற பெரியவன் சொல்றான். பென்டிக்ட் முடிக்கிறான்.

இன்னாபா, பஞ்ச் டைலாக் செட்டாவுதா! ;)

 
At Tue Apr 26, 10:44:00 PM 2005, Blogger Thangamani said...

//இத தனி மனுச உரிமன்னு வேற குரலுடுதுங்கோ நம்ம கஸின் சாத்தான் பார்ட்டிங்கோ, நம்ம பொலிடீக் ரெபரசன்ட் புஷ்ஷு வார இன்னும் நிறையா இடத்துல அமைதிய நில நாட்ட வேண்டிக்கீது, அத்தொட்டு ராக் மீசிக் கேட்டு குட்டிச்சுவரா போன உலக காப்பத்த நீ தாம்பா நம்ம சாய்ஸ் அப்டீனு அடிச்சு சொல்லிருக்காரு.//

:)))

 
At Tue Apr 26, 10:51:00 PM 2005, Anonymous Anonymous said...

þôÀ ±øÄ¡Õõ ºí¸Ã¡º¡Ã¢Â ¯ðÎðÎ þÅÕìÌ ¾÷Á «Ê¡?

 
At Tue Apr 26, 10:55:00 PM 2005, Anonymous Anonymous said...

எல்லாரும் சங்கராச்சாரிய உட்டுட்டு இப்ப இவருக்கு தர்ம அடியா?
புதியவன்.

 
At Wed Apr 27, 02:49:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

அனானி, நாராயணன், தங்கமணி, புதியவன் வந்து வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!

//பெரியவன் சொல்றான். பென்டிக்ட் முடிக்கிறான்.

இன்னாபா, பஞ்ச் டைலாக் செட்டாவுதா! ;)//

சூப்பர் செட் நய்னா.

 

Post a Comment

<< Home