புட்டபர்த்தி சாய்பாபா கைது?
தலைப்பு செய்தியாக எட்டு காலத்தில் இருந்த சாமியார் கைது மேட்டர், எல்லா அந்தஸ்தையும் இழந்து எட்டாம் பக்கத்தில் துணுக்கு செய்தியாகி போனதால் புலம்புகிறார் பத்திரிக்கையில் தினசரி திருமேனியை தரிசித்து பரவசிக்கும் பரம்பறை பக்தர் ஒருவர்.
கைது செய்த போது வந்த வெளி நாட்டு டீவியில் சிரித்தது தெய்வாம்சமாய் இருந்ததாக சொன்ன அயல் நாட்டு வசி பக்தையை மனதில் இருத்தி, தெய்வீக சிரிப்பை முகத்தில் தேக்கி, டீவி கேமராக்களை தேடியிருக்கிறார், கை நாட்டு போட காவல் நிலையம் சென்ற துறவி. அங்கே இருந்ததோ ஒரே ஒரு நிருபர் மட்டும் தான். அவரும் வந்தது சாராய கேஸ் செய்தி சேகரிக்க என்றறிந்த போது பக்கத்திலிருப்பவரிடம் சொன்னாராம் "ஹும், கலி முத்திடுத்து" என்று தேவபாஷையில். (யாருடையன்னு அவரும் கேக்கலியாம், யாருடையன்னு இவரும் சொல்லலியாம்.)
இப்போதெல்லாம் ஜெயேந்திரர் படத்தை அட்டையில் போட்டாலோ, கவர் ஸ்டோரினாலோ பத்திரிக்கை விற்பனை குறைகிறதாம், புலம்புகிறார் ஒரு முன்னனி புலனாய்வு பத்திரிக்கையின் விற்பனை மேலாளர்.
வேறு ஏதாவது புது விவகாரம் நாட்டில் வெடித்தால் தான் பத்திரிக்கை வியாபாரம் பெருகும் என கூறுகிறார் நாட்டுப்பற்றுடைய மற்றொரு பரபரப்பு பத்திரிக்கை இணை ஆசிரியர்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை புலனாய்ந்து பணம் பார்த்த பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பே தராமல் இன்ன தேதியில் இப்படி வருவேன் என வெளிப்படையாய் சொன்ன விஜய்காந்த் மேலும் இவர்களுக்கு ஒரு வருத்தம் தான்.
எதனால் இப்படி என சிந்தித்து கொண்டிருந்த போது அச்சமயத்தில் அங்கே வந்தார் நண்பர் ஒருவர். அவர் முன்பு சினிமா நிருபராக வடபழனியை சுற்றிக்கொண்டு இருந்தவர். தற்போது தமிழகத்தின் நாடித்துடிக்கும் புலனாய்வு பத்திரிக்கை ஒன்றில் துணை ஆசிரியராக உயர்ந்திருக்கிறார்.
அவரிடம் இது பற்றி கேட்டேன். அவர் (பழைய நினைப்பிலேயே) கூறுகிறார்:
நம்ம தமிழ் சினிமால எப்படி கதை டிரெண்ட் முக்கியமோ அப்படித்தான் பத்திரிக்கைகளின் செய்திக்கும்.
ஒரு படம் நல்லா ஒடினா ஐம்பது படம் அதே கதையோட வரும். அதுல காப்பி ரைட் சண்டையும் கூடவே வரும். சில சண்டை 12 வருஷம் கழிச்சும் வரும். எல்லாம் சுடற நேரத்தை பொறுத்தது.
இப்போ விஷயத்துக்கு வரேன். பத்திரிக்கைய தியேட்டர்னு வெச்சுகிட்டா, இந்த மேட்டர், விவகாரம்லாம் தான் சினிமா.
இந்த சாமியார் டிரெண்டை ஆரம்பிச்சு வச்சது பிரேமானாந்தா தான்னு எல்லாரும் நினைக்கிறாங்க. அது தப்பு. அதுக்கும் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே மெய்வழிச்சாலை வந்தது. அதுதான் டிரெண்ட் செட்டர். இப்போ அது மக்களுக்கு மறந்திடுச்சு.
நீண்ட இடவெளிக்கு பின் பிரேமானந்தா புண்ணியத்தில் மறுபடியும் ஆரம்பித்தது இது டிரெண்டாக அமைய காரணம் அந்த படம் ஒரு சூப்பர் ஹிட்டானதுதான்.
அப்புறமா வந்தது கல்கி பகவானின் சஸ்பென்ஸ் படம், யாகவா முனிவர் காக்கா குருவி கிராபிகஸ் படம், சிவசங்கர் பாபா கவர்ச்சி குத்து டான்ஸ் படம், குட்டி சாமியாரின் மழலை மகாத்மியம், நடு ரோட்டில் மதுர இளைய மடம், கொலை முயற்சியில் இளைய மடம் - கடும் சிறை இப்படி இதெல்லாம் சுமாரா ஓடிச்சு, அதே சமயம் கையையும் கடிக்கல.
அடுத்து வந்த சதுர்வேதி சாமியாரின் காம சதிராட்டம் படம் நல்லா போயிருக்க வேண்டியது, ஆனா அடுத்த படம் உடனே ரிலீஸ் ஆக இதை தியேட்டரை (முதல் பக்கத்தை) விட்டு தூக்கிட்டாங்க.
அந்த அடுத்த படம் தான் எதிர்பாராத அதிரடி ரிலீஸ் சங்கர மட சாமியார்களின் காம லீலை கம் கிரைம் காமெடி. ரொம்ப வருஷமா எல்லாரும் எதிர்பார்த்தது தான். அதனாலெயே நல்ல ஓபனிங். உலகம் முழுக்க (லோக்கல் கேபிள் முதல் BBC,CNN, இணையதளம் வரை ) பரபரப்பு ரிலீஸ்.
"மட சாமியார்களின் காம லீலை கம் கிரைம் காமெடி" படம் எல்லாம் கலந்து கட்டிய சூப்பர் தெலுகு மசாலா போல இருந்திச்சு. இது சூப்பர் டூப்பர் ஹிட். எல்லா பழைய ரெக்கார்டும் பிரேக் பண்ணின படம் இது. இதுக்கப்புறம் இந்த சாமியார் டிரண்ட்ல இன்னொரு படம் மக்களிடம் எடுபடுமான்னு தெரியவில்லை.
காரணம் ஒரு 100 திரைப்படத்தின் அத்தனை அம்சங்களையும் தன்னுள் அடக்கிய படம் தான் மட சாமியார்களின் காம லீலை கம் கிரைம் காமெடி.
இப்போ அந்த படத்தை பத்தி விவரமா சொல்றேன். (ஆகா நம்ம பிளாக்குலேயும் ஒரு திரை விமர்சனம் ;)
படத்துல காமெடிக்கு ஜெயேந்திரரின் பேச்சுக்கள், ஆவேசத்துக்கு இராம கோபாலன், தொகாடியா, சிங்கால், பரிதாபத்துக்கு தமிழக பா.ஜ.க, பிசினுக்கு பந்த் - போராட்ட அறிவிப்புகள், கவர்ச்சிக்கு திருவரங்கம் உஷா, அனுராதா ரமணன், விவாகரத்து புகழ் சொர்ணமால்யா.
அடிதடி ஆக்ஷனுக்கு அப்பு, கதிரவன் கோஷ்டி, பிளாஸ் பேக் என்ட்ரிக்கு ரவி சுப்ரமணியன், குணசித்திர நடிப்புக்கு ரகு, மேம்பட்ட நடிப்புக்கு விஜயேந்திரர் என சூப்பர் காம்பினேசன்.
இதிலேயே, கவர்ச்சியாக அறிமுகமான உஷா, கண்ணாம்பாள் ரேஞ்சுக்கு கண்ணீர் உஷாவாகி பார்வையாளர்களை உருகவைத்தது எதிர்பாரா திருப்பம்.
மேலும் மசாலா கூட்ட ஸயன்ஸ் பிக்ஸன் வேறு. அது "மட அவதாரங்களின் மிஸ்ஸிங் லிங்க்". செல் பேசியிலேயே பேசி கான்சர் டிரீட்மென்ட் கொடுத்து அசத்தினார் ஜெயேந்திரர்.
"ஜெயிலுக்கு அனுப்பாதே, நீதிபதி குடியிருப்பிலேயே வை" என்று உருகும் ஐகோர்ட்டு நீதிபதி, "நாங்களும் மனிதர்கள் தான்" என கண்ணீர் சொரிய பேசிய இன்னொரு ஐகோர்ட்டு, பாஞ்சாலியும் ஜெயேந்திரரும் ஒன்று என்று செப்பிய ஐதராபாத் கோர்ட்டு, என வித்தியாசமான பல கோர்ட்டு சீன்கள்.
கடைசி வரை வந்து கவர்ச்சி விருந்து படைப்பார் என எதிர்பார்த்த சொர்ணமால்யா "சாரி, எனக்கு கல்யாணமாயிடுச்சு" னு திடீர் என மறைந்தது கவர்ச்சி ரசிகர்களுக்கு வருத்தம் தான். இந்த இடத்தில் தான் இயக்குனர் ப்ரேம்குமார் தடுக்கிவிட்டார்.
நாட்டுப்புற கலைக்கு வீரமணி கோஷ்டியின் ஆனந்த கூத்து அமர்க்களம்மாக அமைந்து விட்டது.
கருணாநிதி வேறு வித்தை காட்டி குட்டி கரணம் அடித்தது அனைவராலும் ரசிக்கப்பட்டது.
"உலக திரைப்பட வரலற்றில் முதல் முறையாக" சூப்பர் கிராபிக்ஸில் சுனாமி வரவழைத்து தனக்கு ஆதரவு தராத மக்களை கொல்லுவதாக வரும் காட்சிதான் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் வெளி நாட்டு மக்களுக்கு வேறு பாதிப்பு. (இது வெளிநாட்டில் படம்பிடிக்க வேண்டிய வியாபார நிர்பந்தத்தால் தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை மக்களையும் கொல்லும் படி காட்சி அமைந்திருக்கலாம். அதிக பாதிப்பு தமிழர்களுக்கு என்பதால்) "அவர்கள் பாவிகள்" என்று ரஜினி வாய்ஸ் விட்டதால், தமிழக மக்கள் மரபு படி அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஜெயேந்திரர் கோஷ்டி சொன்னது போல் விளக்கேத்தி கும்பிடறது தான் படத்துல கொஞ்சம் இழுவை.
மொத்தத்துல ஜெயேந்திரர் என்ற ஆளுமையை முழுமையாக புரிந்து, அதற்கேற்ப திரைக்கதை எழுதியுள்ளார் ஜெயலலிதா.
அவரே ஒரு காட்சியில் டெல்லி பத்திரிக்கையாளர் மத்தியில் வருத்தம் தெரிவித்து பேசுவது போல் ஒரு காட்சியையும் சேர்த்து விட்டது திரிக்கதையின் தனி சிறப்பு.
இப்படியாக இது ஒரு மக்களுக்கான படம். தந்திருப்பது ஆன்மீகத்துல அடிய தொட்ட ஜெயேந்திரர்.
இதை ரசிக்கும் தமிழக மக்களை "இப்படி ஒரு இழிவான ரசனையா" ன்னு கீழ்தரமா பேசினாலோ, எழுதினாலோ அதை வரலாறு "எலீட் வயலன்ஸ"னு பதிவு செய்யும். இதுல வெளியிலிருந்து தமிழ் நாட்டு மக்களை குறை சொன்னா அதே வரலாறு இதை அவர்களின் பாசிசமா தான் பார்க்கும். இதுல தமிழ்ன் வேற ஆளுன்னுலாம் பார்க்க முடியாது என ஆவேசப்பட்டார் நண்பர்.
"முடிவா இதுதான் இந்த டிரெண்ட்ல கடைசி படம். இனிமே சாமியார் படம்னாலெ பாபா ரேஞ்சுக்கு படுத்துரும்.
இதே தான் பத்திரிக்கைக்கும்", என்றும் முடித்தார்.
என்னுடன் பேசியதில் இழந்ததை ஈடுகட்ட, நண்பரை அண்ணா சிலை அருகில் உள்ள டாஸ்மாக்கில் இறக்கிவிட்டு, அரசினர் தோட்டத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் நுழைந்தேன்.
அங்கே, எல்லோராலும் ம/மிதிக்கப்படும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர், இவர் பல பத்திரிக்கைகளிலும் ஆசிரியராய் பணியாற்றி, பின்னர் அவர்களாலேயே விரட்டியடிக்கப் பட்டவர்.
அவரிடம் இந்த சாமியார்கள் விவகாரம் முக்கியத்துவம் இழந்து வருவது பற்றியும், இப்போது மக்களின் சுவரசியம் குறைந்து விட்டது பற்றியும் கூறி, இனிமேல் இப்படிபட்ட சாமியார்கள் பற்றின செய்திகளின் எதிர்காலம் குறித்து கேட்டேன்.
அவர் சாமியார் விவகாரம் மதிப்பிழந்த மாதிரிதான் தெரியும். ஆனால் புதிசா வேற ஒன்னு, பழசை விட பெரிசா ஒன்னு - சுயம்பா - வந்தா அந்த சமயத்தில், அது தான் பத்திரிக்கையும் மக்களும் சுவாசிக்கும் விஷயமாகும் என்றார். இது ஏதோ நீர்க்குமிழி தத்துவம்னு லேசா புரிஞ்சாலும், புதிசா பெரிசான்னா என்னமாதிரி? என கேட்க அவர் சொன்னது கொட்டை எழுத்துக்களில் கீழே:
"18 வயது அழகிய இளைஞனை கற்பழித்து கொன்ற புட்டபர்த்தி சாய்பாபா கைது!"
12 Comments:
கலக்கல் நையாண்டி.
கலக்கிட்டீங்க !!!
ஒரே நேரத்தில் பல பேரை இப்படி ரவுண்டு கட்டி போட்டுத் தாக்கிட்டீங்களே நந்தலாலா...
யப்போய்ய்ய்ய்ய்ய்ய் ஒரு நல்ல படம் பாத்த திருப்தி!!!
"புட்டபர்த்தி சாய்பாபா கைது?"
இந்த தலைப்பு உண்மையாவது நிச்சயம்.
இந்த இணய தளத்தை பாருங்கள் சாயிபாபா பற்றிய பல
அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உள்ளன. { www.exbaba.com }
இந்த இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது.
சாய்பாபா பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கமாகும். ஏழு முதல் முப்பது வயது வரையுள்ள அவருடைய ஆண் பக்தர்களுடன் சாய்பாபா வைத்திருந்த பாலியல் உறவுகளைப்பற்றி நிறையச் செய்திகள் காணப்படுகின்றன.
இவை தவிர பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்க ளின் குடும்பத்தினர் என ஏராள மானவர்களின் குற்றச்சாட்டுகள் இணையதளத்தில் குவிந்துள்ளன. அத்தனையும் எழுத பக்கங்கள் போதாது. என்றாலும் உண்மை தொடர்ந்து அவைகளை வெளி யிடும்.
வெகு மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் இது போன்ற உண்மைகளை வெளியிடத் தயங் குகின்றன. டெகல்கா.காம் இணைய தளம் பா.ஜ.வினர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சியை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல் இந்த சாய்பாபா முன்னாள் சீடர்களின் இணையதளமும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம கலக்கல் மச்சி!!!
;)))
படித்து முடித்த பின்பும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது. நன்றி.
கலக்கலக்கலக்கலோ கலக்கல்...
எல்லாரையும் சேத்து வச்சு கும்மினா பேரை போட்டு பாராட்ட முடியுமா?
அதான் அனானிமசா முதல் பின்னூட்டம் ;)
பாராட்டுக்கள்!
superb..
classic....thank you n expect more like this
அல்வாசிட்டி.விஜய், துளசி கோபால், புதியவன்,கிறுகன்,மூர்த்தி, மற்றும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி!
வந்து வாசித்த அனைவருக்கும் நன்றி.
Post a Comment
<< Home