Get Nandalaalaa atom feed here!

Tuesday, May 10, 2005

தலாக்…தலாக்…தலாக்!

இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்(AIMPLB), தனது 18வது கூட்டத்தை ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் போபாலில் நடத்தியது. கூட்டத்தின் முடிவில், மாதிரி நிக்காநாமா என்ற ஒரு இஸ்லாமிய திருமண வரைவை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, வரவேற்றும், ஏமாற்றம் தெரிவித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, குமுக சிந்தனையுடைய இஸ்லாமிய பெண்கள் மற்றும் அமைப்புகள் ஏமாற்றக்குரலையே எதிரொலிக்கின்றன.

இந்த வாரியத்துக்கு எவ்விதமான, சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லையென்பதையும், இஸ்லாமிய சட்ட முறைக்கு விளக்கம் கூறும் ஒரு (பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டு) அமைப்பாக மட்டுமே செயல் பட்டு வருகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

போபாலில் கூடிய, முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் 18வது கூட்டம், சில சிறப்புகளை கொண்டிருந்தது.

1. இந்தியாவில் உள்ள ஷியா முஸ்லீம்கள், தங்களுக்கென தனியான ஒரு சட்ட வாரியம் அமைப்பது குறித்து பேசி வரும் வேளையில், இக்கூட்டத்தில் பங்கேற்க ஷியா முஸ்லீம் தலைவர்களையும் அழைத்திருந்தது;

2. மாதிரி நிக்காநாமா வடிவைக்கப்படும் என்ற அறிவிப்பு, இஸ்லாமிய திருமண நடைமுறையில் உள்ள குறைகளை களையக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு;

3. மேலும், இஸ்லாமிய குமுகத்தினரிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் பல பிற்போக்கு வழக்கங்கள் கண்டிக்கப்படும், அவற்றுக்கு ஒரு மாற்று முன் வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு;

இத்தகைய எதிர்பார்ர்ப்புகளுக்கு, இக்கூட்டத்தின் தொடக்க நாள் நிகழ்ச்சியிலேயே, பலத்த அடி கிடைத்தது.

இந்த அமைப்பின் தலைவர், மௌலானா ராபெ ஹஸ்னி நடாவி, தனது துவக்க உறையில், குடும்ப கட்டுப்பாடு என்பது, இஸ்லாத்தின் பார்வையில் தவறு என அறிவித்தார்.

::உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். அவர்களை பற்றி கவலை கொள்ள நானிருக்கிறேன்:: என்ற அல்லாவின் வசனத்தை கூறி, இந்திய இஸ்லாமியர்களின் வறுமைக்கு, அதிக குழந்தைகளை கொண்ட இஸ்லாமிய குடும்பம் காரணம் என்ற கருத்தை மறுத்தார்.

வறுமையால், தகுந்த மருத்துவ சிகிச்சையின்றியும், பசியாலும் வாடி இஸ்லாமிய குழந்தைகள் மரணமடைவதை, நியாயப்படுத்தவும் அல்லாவின் வேறொரு வசனம் நடாவிக்கு தெரிந்திருக்க கூடும்.

[இவ்வமைப்பின் துணைத்தலைவர், மௌலானா சையத் கால்பே சாதிக் சென்ற ஆண்டு, குடும்ப கட்டுப்பாடுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து, இஸ்லாமிய தலைவர்களின் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது]

இஸ்லாமிய சட்டங்கள், கருத்தரிப்பை தவிர்க்கும் தற்காலிக முறைகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆணுறை, கருத்தடை மருந்து உட்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும். ஆனால், கருக்கலைப்பு, மலடாக்கும் அறுவை சிகிச்சை ஆகியன இஸ்லாத்துக்கு எதிரானதாக நோக்கப்படுகிறது.

இஸ்லாமிய திருமண நடைமுறையில், வரதட்சனைக்கு இடமில்லை. மாறாக ஆண் தான் மணம் செய்யும் பெண்ணுக்கு மெஹர் என்ற மணத்தொகை அளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், இந்திய முஸ்லீம்கள் மத்தியிலும் வரதட்சிணை முறை புரையோடியுள்ளது என்பதே உண்மை. வரதட்சணை கொடுமை இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை என்பது உண்மைக்கு மாறான தகவல் மட்டுமே. மற்ற எல்லா சமூகங்களைப் போலவும் இஸ்லாமியரிடையேயும் இப்பழக்கம் உள்ளது. இதையொட்டி, வரதட்சனையை கண்டித்துள்ளதுடன், மெஹர் தொகை வழங்குவதற்கு கால அளவையும் நிர்னயம் செய்துள்ளது.

போபால் கூட்டத்தின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்ட மாதிரி நிக்காநாமா எனும், இஸ்லாமிய திருமண வரைவு இவற்றை கொண்டிருந்தாலும், ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

அதில்,
பல தார மணத்திற்கு கன்டனமோ தடையோ விதிக்கப்படவில்லை. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க, தன்னை மணமுடித்தபின், தன் கணவன் மற்றொரு மணம் புரிவதை தடுக்க, ஒரு ஒப்பந்தந்தை நிக்காநாமாவில் அப்பெண் ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது எந்தளவு கடைபிடிக்கப்படும் என்பதும், பலனளிக்கும் என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை.

இத்தகைய ஒரு ஒப்பந்தம் மீறப்பட்டால், ஆணுக்கு என்ன தண்டனை என்பதோ, பெண்ணுக்கான பதுகாப்பு குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. இந்த ஒப்பந்தம், பேணப்படுவதையும், மீறப்படுவதையும் கண்கானிக்கப்போவது, அவர்கள் வாழும் பகுதியிலுள்ள ஜமாத் எனும் அமைப்பு. அது முழுக்க முழுக்க ஆண்களை மாத்திரமே கொண்ட ஒரு அமைப்பாகும். இதனிடமிருந்து பெண்களின் உரிமையை உறுதி செய்யும் வகையிலான தீர்வு கிடைக்குமா என தெரியவில்லை. இந்த ஜமாத்துகளின் ஆணாதிக்க, பெண்கள் விரோத போக்கு குறித்து, புதுக்கோட்டை STPES அமைப்பின் நிறுவனர் தாவுத் செரிபா கனம் என்ற முஸ்லீம் பெண் ஆர்வளர் சமீபத்தில் தெரிவித்து வரும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குழந்தைகள் மணம், அதாவது ஆறு, ஏழு வயது பெண்களை மணம் முடிக்கும் வழக்கம் இக்குமுகத்தில் இல்லாவிட்டாலும், பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட பெண்களை (பருவமடைந்த) மணம் முடிக்கும் வழக்கம் இந்திய இஸ்லாமியரிடையே பரவலாயிருக்கிறது. இந்நிலையில், இப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படாதது வருத்தத்திற்குறியதே.

இறுதியாக, இஸ்லாமிய மண முறிவு முறை பற்றியது.

இஸ்லாத்தில், மணமுறிவு வழங்கும் அதிகாரம், ஆணுக்கு மட்டுமே உள்ளது. பெண்ணுக்கு ஆணைப்போல அதிகாரமல்ல, அடிப்படை உரிமைக்கூட மறுக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கணவனிடமிருந்து, மணமுறிவை யாசித்து பெறும் நிலையே இஸ்லாமிய பெண்களுக்கு உள்ளது.

நடாவி இதை நியாயப்படுத்தி, ஆண், பெண் இருவருக்கான உரிமைகளை அல்லாவே வரையறுத்துள்ளதாக கூறுகிறார். மேலும், ஆண்களுக்கு அல்லாவால் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் உரிமையானது, அவர்களின் அதிகப்படியான பொறுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

ஒரு கணவன் தன் மனைவியை விலக்க தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும் என்பது இனியும் நீடிக்கும். ஆனால், மூன்றையும் ஒரே நேரத்தில் சொல்வது மட்டுமே இப்போது கண்டிக்கப் பட்டுள்ளது.

மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு, கணவனிடமிருந்து உதவி பெறுவதற்கு(ஜீவனாம்சம்) இஸ்லாத்தில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு காரணமாக, திருமணத்தின் போது மணமகனால், மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் மெஹர் என்ற தொகை ஈடாக சொல்லப்படுகிறது.

ஆனால்,மஹர் என்பது, நடைமுறையில் வழங்கப்படும் தொகை மிக குறைவானது, அல்லது அப்படி ஒரு தொகையை திருமண ஒப்பந்தத்தில் எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டு பின் வழங்கப் படுவதில்லை, அல்லது வழங்கப்பட்டும், கணவனால் பிற்காலத்தில் அத்தொகை கைக்கொள்ளப் படுகிறது. இதற்கு மாறாக சொற்ப எண்ணிக்கையில் சிலர் இருக்கலாம்.

இந்நிலையில் தலாக் என மூன்று முறை கூறி ஒரு பெண்ணை நிர்கதியாக்கும் கணவனுக்கு உள்ள வசதி, பெரும்பாலும், தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தலாக் முறை, முஸ்லீம்களால் பின்பற்றப்படும் வேதநூலான குரானில் சொல்லப்பட்ட முறை அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனாலேயே பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளால் இந்த முறையை தடை செய்ய முடிந்துள்ளது. இந்திய இஸ்லாமியர்களிடையே இன்னும் அந்த துணிவு வராமையும், பழமை நோக்கும், பெண்ணியம் குறித்து பிற்போக்கு நிலையே நீடித்து வருவது வருந்தத்தக்கது.

வறுமையும், குறைவான கல்வி அறிவையும் கொண்ட பிற்பட்ட நிலையிலுள்ள இந்திய இஸ்லாமிய குமுகாயமானது, பெண்ணுரிமையை மறுப்பதன் மூலம், மேலும் தன்னை பின் தள்ளிக்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும்.

மதங்கள் பெயர்களாலும், சடங்குகளாலும் மாறுபட்டுள்ளதே தவிர, பிற்போக்குத்தனங்களை தாங்கி பிடிப்பதில் ஒன்றை ஒன்று விஞ்சுவதாகவே உள்ளன.

வெகு விரைவில் இந்திய இஸ்லாமிய குமுகாயம், பலதார மணத்திற்கும், தலாக் மூலம், ஒரு தலை பட்சமாக பெண்களை மணவிலக்கி நிர்கதியாகுவதற்கும், இறுதியாக ஒரு முறை 'தாலாக் தலாக் தலாக்' சொல்ல வேண்டும். இதன் மூலமே தன்னை சார்ந்த பெண்களுக்கும், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பதாக இருக்க முடியும்.

60 Comments:

At Tue May 10, 10:39:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

This comment has been removed by a blog administrator.

 
At Tue May 10, 11:41:00 AM 2005, Blogger Voice on Wings said...

நல்ல அலசல், சில விவரங்கள் தவறாக இருந்தாலும். 'தலாக்' முறை விவாகரத்து இருபாலாருக்கும் உள்ள ஒரு உரிமையென்றே நானறிந்த வரையில் தெரிகிறது. மேலும், பெண்களுக்கு சொத்துரிமை, திருமணங்களில் சீதனமின்மை போன்ற அம்சங்களால் இந்து மதத்தை விட பெண்களுக்கு அதிக உரிமை தரும் ஒரு சமயமாகவே எனக்குப் படுகிறது. 'தலாக்' உச்சரிப்பும் ஒரு மதத்தலைவர் முன்னிலையில் கூறினாலே செல்லுபடியாகுமென அறிகிறேன். தோன்றும்பொழுது 'தலாக்' என்று விட்டு கைகழுவி விடமுடியாது.

எனக்கு விந்தையாக இருக்கும் ஒன்று - இஸ்லாத்தில் பெண்ணுரிமையில்லை என்று இஸ்லாமிய பெண்களை விட மற்றவர்கள் அதிகம் குறைபடுவதைப் போல் தெரிகிறது.
எனக்குத் தெரிந்த இஸ்லாமிய பெண் நண்பர்கள் யாரும் பெரிதாகக் குறைபட்டுக் கொண்டதில்லை. உண்மையிலேயே நிலமை மோசமாக இருந்தால் அவர்களே பொங்கியெழுவார்கள். அதுவரை, மற்றவர்கள் கொஞ்சம் விலகிக் இருந்தால் நல்லது எனப் படுகிறது.

 
At Tue May 10, 12:19:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

//உண்மையிலேயே நிலமை மோசமாக இருந்தால் அவர்களே பொங்கியெழுவார்கள்//
இதோ பொங்கியெழுந்துள்ளார்கள்.
கடந்த வெள்ளியன்று மும்பையில் நடந்த 12 பெண்கள் அமைப்பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில், ஹுக்கு-கே-நிஸ்வன் என்ற அமைப்பின் முஸ்கான் என்ற பெண் AIMPLBன் மாதிரி நிக்காநாமா " இரண்டாந்தர குடிகளாக பார்ப்பதால் பெண்கள் இதை ஏற்க மாட்டோம்" என்று கூறி, நிக்காநாமா காகிதங்களை கிழித்தெறிந்திருக்கின்றார்.

அதில் பங்கேற்ற சில பெண்கள், அவர்கள் சந்திக்கும் கொடுமைகளையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

//போன்ற அம்சங்களால் இந்து மதத்தை விடபெண்களுக்கு அதிக உரிமை தரும் ஒரு சமயமாகவே எனக்குப் படுகிறது//

எந்த ஒன்றையும், அதற்கு கீழான ஒன்றுடன் ஒப்பிடலாம். கீழான ஒன்று இருப்பதினாலேயே மற்றது சிறப்பானது என்று ஆகி விடாது.

//'தலாக்' உச்சரிப்பும் ஒரு மதத்தலைவர் முன்னிலையில் கூறினாலே செல்லுபடியாகுமென அறிகிறேன். தோன்றும்பொழுது 'தலாக்' என்று விட்டு கைகழுவி விடமுடியாது//

அது இஸ்லாமிய சட்டங்களின் படி சரியானதாக இருக்கக்கூடும்.
ஆனால் நடைமுறையில் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதே உண்மை.
பெண்ணின் சம்மதமின்றியே, வெளிநாட்டிலிருக்கும் கணவன் தொலைபேசியில் தலாக் கூறி மணமுறிப்பதும் நடந்து வருகிறது.

//அதுவரை, மற்றவர்கள் கொஞ்சம் விலகிக் இருந்தால் நல்லது எனப் படுகிறது.//

இது ஆதிக்க வெறியர்களின் வழமையான குரல். பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் தலையிட கூடாதென்பது, பாதிப்புக்கு உள்ளாக்குவோரின் சுயநலம் மட்டுமே இத்தகைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இப்படி சொல்பவர்கள் பாதிப்படையும் பெண்களைவிட, அதை நிகழ்த்தும் அமைப்பை பாதுகாக்க நினைப்பவர்கள்.

இது தனிப்பட்ட மதத்தினுடைய சீர்கேடு மட்டுமல்ல. ஓட்டு மொத்த பெண்ணுரிமை சம்பந்தப்பட்டது. இதில் யார் பேசுவது, அல்லது யார் பேசக்கூடாது எனும் தீண்டாமக்கு இடமில்லை.

 
At Tue May 10, 02:01:00 PM 2005, Blogger Voice on Wings said...

என்னை ஆதிக்க வெறியனென்று அடையாளம் காட்டியதற்கு நன்றி :)

நான் கூறியது எனக்குத் தெரிந்த அளவில், மதரீதியான விதிமுறைகளைப் பற்றி. நடைமுறையில் அவை வேறுபடுகின்றன என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்தால் அது நலமே. (எனக்குத் தெரியாது)

பொங்கியெழுகிறார்களென்றால் அதுவும் நன்றே. எழுந்து ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ச்சியடையட்டும், பெறக் கூடிய உரிமைகளைப் பெறட்டும். இன்றளவில் ஏதோ அரசல் புரசலாக ஆங்காங்கே சில ஓசைகள் மட்டுமே கேட்கின்றன. அவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வருவதற்கு என்னால் இயலாது.

Regarding who can raise the issue and who cannot, there's no hard and fast rule. But the conscience keepers within the community (both from the oppressed and oppressing sections i.e. women and men respectively) enjoy better credibility to raise the issue. If you are one of them, hats off to you for highlighting this issue. The rest are better off staying away, especially since there are too many eager souls to fish in troubled waters.

 
At Tue May 10, 03:28:00 PM 2005, Anonymous Anonymous said...

**அதுவரை, மற்றவர்கள் கொஞ்சம் விலகிக் இருந்தால் நல்லது எனப் படுகிறது.**

V.O.W,

You said the right thing. Nandalala can write about the status of women in hinduism. Islam is clear about the rights of muslim women. What hinduism has to offer to their women? Sati is not a muslim practice!

 
At Tue May 10, 05:28:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

//என்னை ஆதிக்க வெறியனென்று அடையாளம் காட்டியதற்கு நன்றி :)//

உங்களை யார் என்று அடையாளம் காட்டுவதோ, உங்கள் மீதான தீர்ப்பை வாசிப்பதோ எனது நோக்கமுமல்ல, அதை நான் இங்கு செய்யவும் இல்லை.

//நிலமை மோசமாக இருந்தால் அவர்களே பொங்கியெழுவார்கள். அதுவரை, மற்றவர்கள் கொஞ்சம் விலகிக் இருந்தால் நல்லது எனப் படுகிறது. //

உங்களுக்கு பட்டதாக மேலே நீங்கள் சொன்னது, எனக்கு, ஏன் எவர்க்குமே ஒரு ஆதிக்க குரலாகத்தான் படும்.

//பொங்கியெழுகிறார்களென்றால் அதுவும் நன்றே. எழுந்து ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ச்சியடையட்டும், பெறக் கூடிய உரிமைகளைப் பெறட்டும். இன்றளவில் ஏதோ அரசல் புரசலாக ஆங்காங்கே சில ஓசைகள் மட்டுமே கேட்கின்றன. அவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வருவதற்கு என்னால் இயலாது.//

இப்படியான சிறு சிறு அக்னிகுஞ்சுகள் தான் பின்னர் காட்டை அழிக்கும். இதை வெறும் ஓசையாக மட்டுமே நினைத்துக்கொள்ள உங்கள் மனம் விரும்பி, அப்படியே நீங்கள் நினைத்துக்கொள்வதை யார் என்ன செய்ய முடியும்?

இஸ்லாமிய பெண்களுக்கு எல்லா உரிமையும் இருப்பதாக நம்பும் உங்களுக்கு, இந்து பெண்களைவிட அதிக உரிமையுள்ளது என்ற தகுதியே இஸ்லாமிய பெண்களுக்கு போதும் என்று நினைக்கும் உங்களுக்கு, உண்மை தெறியாமல் போவதில், எனக்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

//Regarding who can raise the issue and who cannot, there's no hard and fast rule. But the conscience keepers within the community (both from the oppressed and oppressing sections i.e. women and men respectively) enjoy better credibility to raise the issue. If you are one of them, hats off to you for highlighting this issue.//

உங்கள் 'கான்ஸியஸ் கீப்பர்கள்' யார் எந்த வகையென்பது புரிகிறது.
இஸ்லாமிய ஆண்கள் & பெண்கள் தவிர மற்றவர்கள் இதில் தலையிட கூடாது என்பது நியாமாக படுபவர்களுக்கு என்ன கான்ஸியஸ் இருக்க முடியும் என்று தெளிவு படுத்தினால் நல்லது!
நான் அவர்களில் ஒன்றாக இல்லையென்பதால் எனக்கு எப்படி தகுதிக்குறைவு ஏற்படுகிறது என்பதையும் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

//The rest are better off staying away, especially since there are too many eager souls to fish in troubled waters//

குறையை தன்னுள் வைத்துக்கொண்டு, அதை நீடிக்க நினைத்து, குறைகளை சுட்டுபவரின் உள் நோக்கம் குறித்து பேசுவது, திசைதிறுப்பல் அல்லாத்ய் வேறு என்ன?

ஒடுக்குபவனும், ஒடுக்கப்பட்டவனும் தவிர மற்றவர்களை விலகி இருக்க சொல்வது ஆதிக்க வெறி இல்லை என்றால் வேறு என்ன என்பதையும் சொல்லுங்கள்.

 
At Tue May 10, 05:35:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

மிக்க நன்றி Anonymuos.

//Islam is clear about the rights of muslim women.//
சரியாக சொன்னீர்கள். இஸ்லாம் பெண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கியே வந்துள்ளது, மிகத் தெளிவாகவே.

//Nandalala can write about the status of women in hinduism.What hinduism has to offer to their women?
அது பற்றியும் நிச்சயம் எழுதுகிறேன். கூடிய விரைவில் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.

//Sati is not a muslim practice! //
தகவலுக்கு மீண்டும் நன்றி அனானிமஸ்.

 
At Tue May 10, 08:19:00 PM 2005, Blogger Voice on Wings said...

நந்தலாலா, 'ஒடுக்குபவனும்' 'ஒடுக்கப்படுபவளும்' சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் மற்றவர் அதில் தலையிட்டு என்ன சாதித்துவிட முடியும்? சதாம் உசேன் ஆட்சியில் மனித உரிமை நிலவரம் சரியில்லையென்று அமெரிக்கா உள்ளே புகுந்த கதைதான்.

இஸ்லாமில் நீங்கள் குறிப்பிட்டது போன்ற பிற்போக்குகள் இந்துமதத்திலும் ஏகத்துக்கு இருக்கின்றன. நாட்டில் உள்ள 80 - 85% பெண்களின் நிலையை விட்டுவிட்டு முதலில் 10 - 12% உள்ளவர்களின் நிலையைத் தொட்டதன் காரணமென்னவோ (அதுவும் முன்னவர்களின் நிலை பின்னவர்களை விட மோசமென்று நீங்களே ஒப்புக்கொண்டபின்)?

Conscience Keeperஆகும் தகுதி ஏன் உங்களுக்கு இல்லயென்ற கேள்விக்கு விடை 'conscience' என்ற சொல்லின் பொருளிலுள்ளது. Outsiderஆக இருந்து கொண்டு எவ்வாறு உங்களால் இஸ்லாத்தின் மனசாட்சியாக செயல்படமுடியும்? உள்ளிருந்து கொண்டு "நம் வீடு சரியில்லை"யென்று கூறுவதெப்படி, வெளியிலிருந்து "உங்கள் வீட்டைப்போலொரு அவலத்தைக் கண்டதில்லை"யெனக் குற்றம் சாட்டுவதெப்படி? (இரண்டாமவருக்குக் கிடைக்கும் விடை என்னவாக இருக்குமென்று ஊகத்துக்கு விட்டு விடுகிறேன். )

I'm not denying that there is injustice in the case of Muslim women or Hindu women as well. (And I disagree with your statement - "இஸ்லாமிய பெண்களுக்கு எல்லா உரிமையும் இருப்பதாக நம்பும் உங்களுக்கு,") But my thinking is that they themselves are best positioned to sort out their problems without external interventions. Let them come out in force and fight for their rights. At best we can keep the conscience for our own communities and that is the best we can do to help their cause.

 
At Wed May 11, 06:52:00 AM 2005, Blogger மாமன்னன் said...

இஸ்லாம் என்ற "இனிய மார்க்கத்தில்" ஆண்களுக்கே சுதந்திரம் கிடையாது. இங்கு பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்!

எந்த இஸ்லாமிய நாட்டில் முஸ்லீம் ஆண்களுக்கு கூட, சுதந்திரமாக இஸ்லாத்தையோ வேறொரு மார்க்கத்தையோ தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது என்று சொல்லுங்கள் நண்பர்களே!

Ennamo poongal

ஆரோக்கியம்

 
At Wed May 11, 10:34:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

Voice of wings,
//நந்தலாலா, 'ஒடுக்குபவனும்' 'ஒடுக்கப்படுபவளும்' சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில்//

நல்ல கற்பனை, நகைச்சுவையும் கூட.

//இஸ்லாமில் நீங்கள் குறிப்பிட்டது போன்ற பிற்போக்குகள் இந்துமதத்திலும் ஏகத்துக்கு இருக்கின்றன. நாட்டில் உள்ள 80 - 85% பெண்களின் நிலையை விட்டுவிட்டு முதலில் 10 - 12% உள்ளவர்களின் நிலையைத் தொட்டதன் காரணமென்னவோ (அதுவும் முன்னவர்களின் நிலை பின்னவர்களை விட மோசமென்று நீங்களே ஒப்புக்கொண்டபின்)?//

இந்துமதம் பிற்போக்கானது என்பதால் தான், இஸ்லாமும் பிற்போக்கான ஒன்றாய் ஆனதா?
குரான், ரிக் வேத அடிப்படை கொண்டதா?
இந்து மதம் முற்போக்காக மாறும் வரை இஸ்லாம் மாற்றங்களை ஏற்காதா?
இஸ்லாம் சுயமற்ற, இந்து மதம் சார்ந்த இயக்கத்தை மட்டுமே கொண்டதா?

இதற்கு உங்கள் பதில் 'ஆம்' எனில், நானும் தவறிழைத்ததாக ஒப்புக்கொள்கிறேன்.

//எவ்வாறு உங்களால் இஸ்லாத்தின் மனசாட்சியாக செயல்படமுடியும்?//

எனக்கு அப்படிப்பட்ட தேவை இல்லை. நான் பேசுவது மனிதமே. மனிதத்திற்கு மதங்கள் எல்லையாகாது என்பது என் புரிதல்.

//உள்ளிருந்து கொண்டு "நம் வீடு சரியில்லை"யென்று கூறுவதெப்படி, வெளியிலிருந்து "உங்கள் வீட்டைப்போலொரு அவலத்தைக் கண்டதில்லை"யெனக் குற்றம் சாட்டுவதெப்படி?//

கொல்லப்பட்டவன் குற்றம் சாட்டினால் தான் கொலை செய்தவனை தண்டிக்க முடியும் என்பது தான் உங்கள் நீதியெனில், அங்கே நீங்கள் சொல்லியது தான் சரி. வெளியிலிருப்பவர், அல்லது பாதிக்கப்படாதவர் வாய்மூடித்தானிருக்க வேண்டும்.

மற்றபடி ஆதிக்கம் காக்கும் நிலையே உங்களின் தொடர்ந்த பின்னூட்டங்களில் காணப்படுகிறது.

தங்களை முற்போக்குவாதிகளாக நினைத்துக்கொள்ளும் இஸ்லாமியர்கள் பலர், மதம் என்றவுடன் முக்காடிட்டுக்கொள்வது வழமையே.

 
At Wed May 11, 10:50:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

voice of wings,

//சதாம் உசேன் ஆட்சியில் மனித உரிமை நிலவரம் சரியில்லையென்று அமெரிக்கா உள்ளே புகுந்த கதைதான்.//

இராக்கியர்கள் இப்போது தான் சந்தோசமாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
இராக்கில் பெரிய எதிர்ப்பு ஒன்றும் இல்லையென்றும், அங்கே நடப்பது சிறு சலனம் என்றே அமெரிக்கா கூறுகிறது.

அனால், இதை நீங்கள் (நானும் தான்) ஏற்க மாட்டீர்கள்.

அமெரிக்கரோ, இராக்கியரோ அல்லாத ஒருவர் இது பற்றி விவாதிப்பதை ஒரு குற்றமாக காண மாட்டீர்கள். நீங்களே அமெரிக்காவை திட்டி தீர்ப்பீர்கள்.

அமெரிக்காவை குற்றஞ்சாட்டினால் கை தட்டுவீர்கள்.

காரணம் பாதிக்கப்படும் இராக் ஒரு இஸ்லாமிய நாடு. அதற்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் நியாயம் கேட்கலாம்.

இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றி யாராவது வருத்தப்பட்டால் மட்டும் 'நீ யார் இதை கேட்க?' என்ற கேள்வியுடன்
//10 - 12% உள்ளவர்களின் நிலையைத் தொட்டதன் காரணமென்னவோ// என்று உள் நோக்கத்தை சந்தேகிப்பீர்கள். காரணம் இதனால் பாதிக்கப்படுவது இஸ்லாமிய அடிப்படைவாதம்.

உங்கள் நியாய நிலைப்பாடு புல்லரிக்கிறதய்யா.

 
At Wed May 11, 11:44:00 AM 2005, Blogger Voice on Wings said...

நந்தலாலா, நேரமின்மையால் என்னால் விரிவாக விடையளிக்க முடியவில்லை. சுருக்கமாக, முடிந்த அளவு தெளிவாக விடையளிக்க முயற்சிக்கிறேன்.

முதலில், அமெரிக்கா - ஈராக் பிரச்சனை. சச்சரவு நிலை இருப்பது அனைவருக்கும் தெளிவு. நிச்சயமாக ஈராக்கின் sovereignity மீறப்பட்டிருக்கிறது. ஆகவே, என் கண்டனங்களும் அமெரிக்காவுக்கு உண்டு. ஈராக் இஸ்லாமிய நாடு என்பதற்காக அல்ல. Btw, it was one of the world's few secular nations having a Muslim majority and was not an Islamic nation.

இரண்டாவது, நான் ஒரு இஸ்லாமியன் கிடையாது, ஆகவே எந்த ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதத்தையோ / பிற்போக்கையோ / ஆட்சியையோ / நாட்டையோ ஆதரிக்கும் தேவை எனக்குக் கிடையாது.

'சந்தோஷமாக' இருக்கிறார்கள் என்று பாதி நகைச்சுவையோடுதான் கூறினேன், இருந்தும் கற்பனையாக அல்ல. "ஒடுக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள்!" எனும் குரல்கள், "ஒடுக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம்" எனும் குரல்களை விட வலுவாவாக ஒலிப்பதேன் என்ற எனது நியாயமான ஐயத்தை இங்கு்கு வெளிப்படுத்தினேன். மேலும் உங்கள் பதிவிலிருந்த சில பிழைகளை சுட்டிக்காட்டினேன். இதனால், நான் ஒரு ஆதிக்கவாதி என்று நீங்கள் கருதுவீர்களானால் அதுவும் நலமே.

கொலை / கொள்ளை பற்றி கேட்டிருந்தீர். Civil code / Criminal code என்று இருவகை சட்டம் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கொலை / கொள்ளை ஆகியவை criminal வகை. நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயங்கள் civil வகை.

பெரும்பாலோரின் அவலத்தை விட்டு, சிறுபான்மையினரின் நிலை குறித்து (அவர்களே பெரிதாக கவலைப்படாத நிலையில்) பூதக் கண்ணாடி கொண்டு் பார்த்து விட்டு நீங்கள் படும் வருத்தத்தின் காரணமென்ன என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை, என்றுமே விளங்காது போகலாம்.

 
At Wed May 11, 03:17:00 PM 2005, Anonymous Anonymous said...

இந்து மதத்தை குத்தம் சொல்றவங்க எல்லாம் இப்ப வாயும் அதையும் மூடிக்கிட்டு இருக்காங்கல்லா அது தான் மதசார்பின்மை.என்னா சரிதானா மக்களே?

 
At Wed May 11, 04:28:00 PM 2005, Anonymous Anonymous said...

இந்து மதத்தில் கண்டிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு இதை எழுதுகிறேன்.

"சதி"யை ஒழிக்க சட்டம் வந்து,அதை அனைவரும் ஏற்றுக்கொண்டாகி விட்டது.

தீண்டாமையும் சட்டத்தின் மூலம் குறைந்துள்ளது.

இதையெல்லாம் காலத்தின் கட்டாயமாக இந்துக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

முஸ்லீம் சகோதர, ச்கோதரிகள் மட்டும் மாற்றத்தை ஏற்காமல் பிடிவாதமாக இருப்பது ஏன்?

எனது கல்லூரி தோழி ஒருத்தி, நாங்கள் ஒன்றாக கல்லூரியில் படிக்கும் போது எல்லோரையும் போலவே உடை உடடுத்தி வருவார்.

இப்போது ஒரு அழுவலகத்தில் வேலை பார்க்கிறார். வேலைக்கு போகும்போது கறுப்பு மேலாடை அனிந்து முழுசாக மறைத்து கொண்டு செல்கிறார். நான் கேட்டதர்க்கு, "என் கனவ்ர் கன்டிப்பானவர், அவர் சொல்வதை என்னால் மீற முடியாது" என்கிறார்.

வேலைக்கு போகும் நிறய இந்து பென்கள் பொட்டு, தாலி இல்லமலே கூட செல்கின்றனர்.

முஸ்லீம்கள் Mஅற வேண்டும். அதை மற்றவர்கள் சொல்வது சரியா என்பது எனக்கு தெரியவில்லை. நான் எழுதியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
லோகி.

 
At Wed May 11, 04:43:00 PM 2005, Blogger பாபு said...

//இஸ்லாமிய சட்டங்களின் படி சரியானதாக இருக்கக்கூடும்.
ஆனால் நடைமுறையில் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதே உண்மை//

உண்மை!
இஸ்லாம் பெண்களை அடக்கி வைக்கிறது என்று சொல்லாமல் முஸ்லிம் ஆண்கள் அடக்கி வைக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.
உதாரணத்துக்கு, இஸ்லாமிய சட்டப்படி ஆண்கள் தான் பெண்ணுக்கு தட்சணைத் தந்து மணம் முடித்துக் கொள்ளவேண்டும்.அப்படி அவர்கள் சரியாக நடந்துக் கொன்டால், முன்கூட்டியே 'மஹர்' தொகைப்பெற்றுக்கொள்கிற பெண், அப்புறம் ஆண் முத்தலாக் என்ன, ஆயிரம் தலாக் சொன்னாலும் கவலையில்லை என்று போய்விடுவாள். ஏன், அந்த ஆணுடன் வாழப் பிடிக்காத பட்சத்தில், பொருளாதார சுதந்திரத்தை கருத்தில் கொண்டு அவளே 'தலாக்' சொல்லி விடுவாள். (அதற்கும் அனுமதி உண்டு).

(மேலும், இஸ்லாமிய போதனை பிரகாரம், மனைவி சம்பாதித்து செலவுச்செய்வதில் கணவன் உரிமை எடுக்க முடியாது என்பதும் கவனிக்க வேண்டியது).

ஆனால், இந்தியாவில் மற்றவர்களின் கலாச்சாரத்துக்கொப்ப 'வரதட்சணை' வாங்குகிற ஆண்கள் தான் முஸ்லிம்களிலும் நிறைய! அது தான் பிரசினையே!

நான் சொல்ல வருவது, பெண்ணுக்கு 'மஹர்' கொடுக்க வேண்டுமே தவிர நீ (ஆண்) அவளிடமிருந்து வரதட்சணை வாங்கக்கூடாது என்ற போதனையை இந்த முஸ்லிம் ஆண்கள் எதிர்மறையாக கடைப்பிடிப்பதால் தான் இஸ்லாமே பெண்ணை அடக்கி வைக்கிறது போல பேச்சு.

 
At Wed May 11, 06:02:00 PM 2005, Anonymous Anonymous said...

oru talit sangaraacaari aagumboodu muslim peNgkaL vidutalai adaivaarkaL aakavee naNbarkalee, udanadiyaaka oru dalitai sangarachaari aakkungkal.

 
At Wed May 11, 06:46:00 PM 2005, Anonymous Anonymous said...

//இப்போது ஒரு அழுவலகத்தில் வேலை பார்க்கிறார். வேலைக்கு போகும்போது கறுப்பு மேலாடை அனிந்து முழுசாக மறைத்து கொண்டு செல்கிறார். நான் கேட்டதர்க்கு, "என் கனவ்ர் கன்டிப்பானவர், அவர் சொல்வதை என்னால் மீற முடியாது" என்கிறார்.//

Did they reduce her salary for this reason? Did she lose anything because of it? only one thing is the lusty sights of b.males.

It is better to leave her as she and her husband's wish. Let us not impose any of our //wishes// on her.

Atleast to avoid onemore sarikasha!
- Aarooran

 
At Wed May 11, 06:50:00 PM 2005, Anonymous Anonymous said...

ஒரு தலித் சங்கராச்சாரி ஆகும் போது முஸ்லிம் பெண்கள் விடுதலை அடைவார்கள். ஆகவே நண்பர்களே, உடனடியாக ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்குங்கள்.

மேலே ஒரு அனானிமஸ் அண்ணன் இங்கிலீஸ்ல போட்டதை தமிழ்ல தட்டி போட்டிருக்கேன். ஏதோ நம்மால ஆனது.

-அனானிமஸ் தம்பி.

 
At Wed May 11, 07:40:00 PM 2005, Anonymous Anonymous said...

மெஹர் என்பது வெறும் சடங்கு. வரதட்சணை கொடுமை இஸ்லாமில் தலைவிரித்து ஆடுகிறது. கணவன் மனைவியை தலாக் செய்யலாம், மனைவி செய்ய முடியாதாமே? ஆனால் அனைத்து சமூகத்திலும், நாட்டிலும் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களே.

 
At Wed May 11, 08:11:00 PM 2005, Anonymous Anonymous said...

அய்யா ஆரூராரே,
//the lusty sights of b.males.//
அல்லா படைத்த எல்லா ஆண்களுமே lusty sights கொண்ட b.males தானா?

//It is better to leave her as she and her husband's wish.//
"என் கனவ்ர் கன்டிப்பானவர், அவர் சொல்வதை என்னால் மீற முடியாது" என்று சொல்லுவதிலேயே தெரியுதே அந்தம்மாவுக்கு இதுல விருப்பமில்ல, கணவர்தான் கட்டாயப்படுத்துரார்னு.
விருப்பமில்லாமல் மற்றவர் கட்டாயத்துக்காக செய்யிறத அல்லா ஏத்துக்குவாரா?
தலாக் இருக்கட்டும்யா டிரஸ்ல கூடவா?
என்னத்த நான் சொல்றது?
-கோவூரான்.

 
At Thu May 12, 02:54:00 PM 2005, Anonymous Anonymous said...

அய்யா கோவூராரே!

//அல்லா படைத்த எல்லா ஆண்களுமே lusty sights கொண்ட b.males தானா?//

எல்லோரும் lusty sights இல்லை. b.males மட்டுமே!
சரிகா ஷாக்களிடம் கேட்டுப்பாருங்களேன்.நன்றாக விளக்குவார்கள்.

//
"என் கனவ்ர் கன்டிப்பானவர், அவர் சொல்வதை என்னால் மீற முடியாது" என்று சொல்லுவதிலேயே தெரியுதே அந்தம்மாவுக்கு இதுல விருப்பமில்ல, கணவர்தான் கட்டாயப்படுத்துரார்னு.//

ஆரூரானுக்கும் கோவூராருக்கும் அந்தப் பெண் மீது இருக்கிற உரிமையை விட கணவனுக்குத்தானே அதிக உரிமை. அப்படியும் கணவன் தன் மீது உரிமை எடுப்பதை விரும்பாத பெண்ணுக்கு அவளே கணவனை -குலா- தலாக்கின் பெண்மொழி சொல்லித் தள்ளி வைக்கவும் அனுமதி இருக்கிறது.
அதுவும் இஸ்லாமிய முறைப்படி மஹர் வாங்கி கல்யானம் செய்துக்கொண்ட பெண்ணயிருந்து விட்டால் 'எதிர்காலப் பொருளாதரத்தைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

சகொதரி லோகி,

//சதி"யை ஒழிக்க சட்டம் வந்து,அதை அனைவரும் ஏற்றுக்கொண்டாகி விட்டது.

தீண்டாமையும் சட்டத்தின் மூலம் குறைந்துள்ளது.

இதையெல்லாம் காலத்தின் கட்டாயமாக இந்துக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.//

இஸ்லாத்தைப் பொருத்தவரை புதிதாக சட்டங்கள் கொண்டுவரத்தேவைப்படாத அளவுக்கு,ஏர்கனவே சட்டங்கள் உள்ளன.'பெண்ணுக்கு மஹர் கொடுத்துத் தான் செய்ய வேண்டும்' என்று.

முஸ்லிம்களை அவர்களுடைய சட்டத்தை முறையாகப் பின்பற்றும்படி நாம் சொல்லுவதே பொதும்-இத்தகையப் பிரட்ச்னைகளுக்கு முடிவு கட்ட!

வேண்டுமானால் மஹர் தந்து கல்யானம் செய்யாத - வரதட்சணை வாங்குகிற முஸ்லிம் ஆண்களுக்கு தலாக் செய்யவும் உரிமையில்லை என்பதை உணர்த்தலாம்.
- Aarooran.

 
At Thu May 12, 05:35:00 PM 2005, Anonymous Anonymous said...

அன்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,
மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கலாமா? கூடாதா?

 
At Thu May 12, 06:38:00 PM 2005, Anonymous Anonymous said...

//'ஒடுக்குபவனும்' 'ஒடுக்கப்படுபவளும்' சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் மற்றவர் அதில் தலையிட்டு என்ன சாதித்துவிட முடியும்?//

V.O.W அண்ணாச்சிதா அப்டி சொல்றாருல்லா, பின்ன ஏம்லே அலட்டிக்கிறவோ? பேசாத போங்களே.

 
At Thu May 12, 08:08:00 PM 2005, Anonymous Anonymous said...

//அன்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,
மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கலாமா? கூடாதா?//
இந்துக்களை விமர்சிக்க மட்டும் யார் பெர்மிஸனும் தெவையில்ல. இஸ்லாத்தை விமர்சிக்க மட்டும் விசா வாங்கனுமோ?
வாழ்க இந்தியாவின் மதச்சார்பின்மை.

 
At Thu May 12, 10:03:00 PM 2005, Anonymous Anonymous said...

அறிந்து கொள்ளவே கேட்கிறேன்.
இஸ்லாம் பற்றி, இஸ்லாம் அல்லாதோர் விவாதிப்பது கூடாது என அண்ணல் நபியவர்களாலோ, 'திருக்குரான்'ல் உள்ள ஒரு இறை வசனத்தினாலோ தடுக்கப்பட்டுள்ளதா?

தயவு செய்து இஸ்லாமிய நெறிகளை அறிந்தவர்கள் பதிலிருக்கவும்.
புதியவன்.

 
At Thu May 12, 10:57:00 PM 2005, Anonymous Anonymous said...

தடுக்கப்பட்டதா இல்லையா என்பது இருக்கட்டும்.
மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடுவது நாகரீகமா என சொல்லுங்கள்.

 
At Thu May 12, 11:26:00 PM 2005, Anonymous Anonymous said...

இது உள்விவகரமா, நாகரீகமா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
மற்றவர்கள் தலையீடு பற்றி, நபி அவர்களின் கருத்து, திருக்குரான் வழிகாட்டுதல் என்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.
யாரவது விளக்க முடியுமா?
புதியவன்.

 
At Fri May 13, 10:51:00 AM 2005, Anonymous Anonymous said...

மதத்தின் பெயரால் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது எந்த மதத்திலிருந்தாலும் கண்டிக்கப்படுவேண்டியது தான். என்னைப்பொறுத்தவரை இது இஸ்லாமிய சமூகத்தில் மிக மிக அதிகம். உடைகளிலுருந்து அத்தனையிலும் ஆணாதிக்கமே. சரிகாஷா விவகாரத்தை இதில் இழுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, இங்கே குறிப்பிட்டிருப்பதை பார்த்தால் ஏதோ பெண்கள் ஆபாச உடை அணிந்து அது ஆண்களை தூண்டி அதுவே பிரச்சினைக்கு காரணம் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆபாச எண்ணோத்தோடு பார்க்கும் ஆடவர்களை கண்டிக்காமல் பெண்டிரை முழுவதும் போர்த்திக்கொண்டு வா என்பது ஆணாதிக்க சமுதாயத்தின் அசிங்கமான வெளிப்பாடு.

-தெருப்பாடகன்-

தவறு எங்கிருந்தாலும், உரிமை மீறல் எங்கிருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான், இதற்கு இந்துவாகவீ, இசுலாமியராகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

பெண்கள் பொங்கியெழும் அளவுக்கு இசுலாமிய சமூகத்தில் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதா? இசுலாமிய சமூகத்தில் எத்தனை பெண்கள் படிப்பறிவோடு சொந்த காலில் நிற்கின்றனர் எண்ணிக்கை அதிகமில்லையே, இந்த நிலையில் எப்படி அவர்கள் உரத்து குரல் கொடுப்பது.

 
At Fri May 13, 07:47:00 PM 2005, Blogger அபூ முஹை said...

/*அறிந்து கொள்ளவே கேட்கிறேன்.
இஸ்லாம் பற்றி, இஸ்லாம் அல்லாதோர் விவாதிப்பது கூடாது என அண்ணல் நபியவர்களாலோ, 'திருக்குரான்'ல் உள்ள ஒரு இறை வசனத்தினாலோ தடுக்கப்பட்டுள்ளதா?

தயவு செய்து இஸ்லாமிய நெறிகளை அறிந்தவர்கள் பதிலிருக்கவும்.
புதியவன்.*//

இஸ்லாத்தை எவர் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், விமர்சனம் உண்மையாகவும் - நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்குப் பார்க்க..
http://abumuhai.blogspot.com/2005/05/1.html

 
At Fri May 13, 08:42:00 PM 2005, Anonymous Anonymous said...

நந்தலாலா,
ஆழமான, விளக்கங்களுடன் உள்ள கட்டுரை.நேர்மையாக எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை மத அடிப்படைவாதிகளால் நேரடியாக எதிர்கொள்ள முடியாது.

 
At Sun May 15, 01:28:00 PM 2005, Blogger Voice on Wings said...

Reply to your latest post. (Comment feature is not working there) :

நந்தலாலா, மறுபடி உங்கள் பழைய 'தலாக்' விவாதத்தை தொடர்ந்துள்ளீர். அதிலும், 'பெரும்பாலோர்' என்று குறிப்பிட்டு என் நிலைபாட்டினை விமர்சித்துள்ளதால் இந்த விளக்கத்தை அளிப்பது தேவையென்று நினைக்கிறேன்.

எனது பின்னூட்டங்களின் எண்ணம் உங்களுக்கு நீதி போதிப்பதல்ல. இஸ்லாம் மீதான உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு மாற்று கருத்தை முன்வைப்பதே என் நோக்கம். "தலையிடலாமா, வேண்டாமா" என்று ஒட்டுமொத்தமாக முடிவு செய்யக் கூடிய ஒன்றல்ல இது. உடைகளைக் களைவது, குடும்பத்தார் மானபங்கப் படுத்துவது, சிகரட் நெருப்பால் மார்பகத்தை சுடுவது போன்ற பெண்ணுக்கெதிரான குற்றங்களை / வன்முறைகளை கண்டிப்பாக தலையிட்டு பாதிக்கப் பட்டவரைக் காத்தல் நன்நெறி பின்பற்றும் அனைவரின் கடமையாகும். இவ்விஷயங்களில் நீங்கள் கூறுவதோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன்.

உங்களுடன் மாறுபடுவது நீங்கள் சென்ற பதிவில் இஸ்லாம் மதத்துக்கெதிராக அளித்த தீர்ப்பை - அது பிற்போக்கான, பெண்ணுரிமை மறுக்கும் ஒரு மதமே என்று நீங்கள் எடுத்த முடிவை. "கண்ணாடியறையிலிருப்பவர் கல்லெறியக்கூடாது" என்று கூறுவதைப்போல், எல்லா மதத்திலும் பெண்ணுக்குப் பாதகமான அம்சங்கள் இருக்கையில் இஸ்லாம் ஏதோ மற்றதுகளை விஞ்சும் ஒருவகையென சித்தரித்திருந்தது என்னை மறுமொழியிடத் தூண்டியது. உண்மையிலேயே அது அத்தகைய ஒன்றா என்ற கேள்வியும் சேர்ந்துகொண்டது. எனவே, (so-called) பாதிக்கப் பட்டவரை விட மற்றவர்கள் எழுப்பும் இந்த ஓசையின் காரணமென்ன என்ற ஐயமும் எழுந்தது.

"அநீதியை, பாதிக்கப் பட்டவரைத் தவிர மற்றவர்கள் எதிர்க்கக் கூடாது" என்று நானோ மற்றவரோ 'போதித்ததாக' நீங்கள் திரித்துக் கூறுவது வருத்தமளிக்ககிறது.

 
At Sun May 15, 03:07:00 PM 2005, Blogger அபூ முஹை said...

//*மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்து::தலாக்::*//

நந்தலாலா, மொட்டையடித்து, நிர்வாணப்படுத்திய.. பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை அதை இங்கே வைக்கிறேன், நன்றி

உங்கள் பதிவில் எழுதியுள்ள வன்கொடுமை மிக வன்மையாக் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தலைப்பில் ''தலாக்'' என்ற வார்த்தையையும் சேர்த்துள்ளீர்கள், இது எந்த அளவுக்கும் இந்தப் பதிவோடு பொருத்த முடியும் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

அநீதி இழைக்கப்பட்டப் பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டதாக, நீங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. திருமணமாகாதப் பெண்ணுக்கு ''தலாக்'' எப்படி விளக்க முடியுமா?

 
At Sun May 15, 03:40:00 PM 2005, Blogger சுட்டுவிரல் said...

அன்புள்ள நந்தலாலா!

பெண்கள் மீதான வன்கொடுமைகள் பற்றி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் பதிவுகள் பாராட்டத்தக்கன.
நீங்கள் ஒரு சீக்கியப் பெண்ணையோ ராஜ்புத் பெண்ணையோ குறித்து எழுதும் போது அது ஒரு சமூகக் கொடுமையாகவே அணைவராலும் கருதப்படுகிறது.(அங்கு அந்தப் பெண்ணின் மதம் விமர்சிக்கப்படுவதில்லை). ஆனால் ஒரு முஸ்லிம் பெண்னின் பாதிப்பை எழுதும்போது தான் 'இஸ்லாமே தவறானது' எங்கிற தொனியுடன் பின்னூட்டங்கள் வருகின்றன. 'தலாக்' பற்றிய இப்பதிவில் பரிவார வாடை சுமந்து வந்த பின்னூட்டங்களும் அதற்கு எதிர்வினை என்ற பெயரில் உணர்ச்சி வசப்பட்ட சில பின்னூட்டங்களும் வந்துள்ளதைக் காணலாம்.


பர்த குறித்த ஒரு பின்னூட்டத்தில் முஸ்லிம் பெண்ணின் பர்தா பற்றி பேசும் போதே அந்தப்பெண் வேலைக்குச் செல்வதற்கு 'பர்த' ஒரு தடையாக இருக்கவில்லை என்பதும் புலப்பட்டது. மற்றப்படி பர்தாவை அணிவதா வேண்டாமா என்பதை அந்தப் பெண்ணிடமே விட்டு விடலாம் தானே!
நன்றி. - சுட்டுவிரல்

 
At Mon May 16, 09:53:00 AM 2005, Blogger Abu Umar said...

அன்பின் நந்தலாலா,
எனது கீழ்கண்ட பதிவை பார்வையிடவும். செய்திகள் நீளமாகிவிட்ட காரணத்தினால் தனிப்பதிவு இடவேண்டிய சூழ்நிலையாகிவிட்டது. வருத்தம் வேண்டாம்.

http://nihalvu.blogspot.com/2005/05/blog-post.html

 
At Mon May 16, 11:59:00 AM 2005, Blogger ஜோ/Joe said...

//மற்றப்படி பர்தாவை அணிவதா வேண்டாமா என்பதை அந்தப் பெண்ணிடமே விட்டு விடலாம் தானே!//
அந்த பெண் அணிய தேவையில்லை என்று நினைத்தாலும் அவர் கணவர் விட்டு விடுவாரா?...ம்...அதை அவர் கணவரிடமே விட்டுவிடலாமே?...அட போங்கப்பா..

 
At Tue May 17, 11:05:00 AM 2005, Blogger ROSAVASANTH said...

அன்புள்ள நந்தலாலா,

வேலை மற்றும் குடும்ப அழுந்தங்கள் காரணமாய் வலைப்பதிவு விவாதங்களில் இருந்து விலகியிருக்கிறேன். ஆனாலும் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். உங்களின் இந்த குறிப்பிட்ட மற்றும் இதை தொடர்ந்த பதிவுகளுக்கும் என் ஆதரவை தர மட்டுமே இதை எழுதுகிறேன். இதை முக்கியமாய் நினைத்து செய்ய காரணம் பொதுவாய் முற்போக்கு என்று சொல்லி கொள்பவர்கள் பலரும் இஸ்லாம் குறித்த வெளிப்படையான விமர்சனத்தை செய்ய தயங்குவதும், அந்த வேலையை இந்துத்வ சார்புடையவர்கள் மட்டுமே செய்யும் அவலம் காரணமாகவும், உங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதை முக்கியமானதாய் நினைக்கிறேன்.

நேசக்குமாருடன் எனக்கு பெரிய அளவில் உடன்பாடுகள் கிடையாது என்றாலும் அவர் இஸ்லாம் குறித்து ஒரு விவாதத்தை தொடக்கியபோது என் ஆதரவை தெரிவித்தேன். அவரை விட உங்களுடன் பெருமளவில் உடன்படுகிறேன். நான் சொல்லும் முறையும் வார்த்தைகளும் வேறுபடுமே தவிர கிட்டதட்ட நீங்கள் உங்களுடன் முற்றிலுமே உடன்படுகிறேன். இஸ்லாம் மீதான விமர்சனபூர்வமான பார்வையின்மை இந்துத்வத்திற்கு உதவுமே தவிர எந்தவிதத்திலும் எதிர்க்க உதவாது. அதற்கான தார்மீகத்தையும் சந்தேகத்திற்குள்ளாக்கும். அந்த வகையில் ஒரு இந்துத்வவாதியில்லாத உங்கள் பார்வைக்கான ஆதரவை தர மட்டுமே இந்த பின்னூட்டம். சில மாதங்களில் என் கருத்துகளை விரிவாய் எழுத உத்தேசமுள்ளது. நன்றி.
(உங்கள் அடுத்த பதிவு காணாமல் போய்விட்டது. நீண்ட தலைப்பு வைக்காதீர்கள்.)

 
At Tue May 17, 02:35:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

புதியவன், பாபு, ஆரோக்கியம், பரதன், லோகி, ஆரூரான், கோரூரான், VOW, சுட்டுவிரல், ஜோ, anonymousகள், அபுமுகை, அனைவருக்கும் நன்றி.

உங்கலின் கேள்விகளுக்கு பதிலிருக்க தாமதாகும். நேரப்பற்றாக்குறையே காரணம்.

புதிய பதிவில் இது குறித்து எழுதியுள்ளேன்.
நன்றி.

 
At Tue May 17, 02:42:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

ரோசாவசந்த்,
வந்து வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
நீங்கள் சொல்லியிருப்பதுடன் உடன் படுகிறேன்.

இரண்டு விளிம்புக்கும் இடைப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை பதிப்பது முக்கியம் என்றே நானும் நினைக்கிறேன்.

பெரும்பாலோனோர் ஏதோ தயக்கத்துடன் விலகியிருக்கும் சூழலில் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

விரைவில் உங்கள் கருத்தை பதியுங்கள்.

 
At Tue May 17, 06:02:00 PM 2005, Blogger சுட்டுவிரல் said...

இது ஜோவுக்கான பதில்:
//மற்றப்படி பர்தாவை அணிவதா வேண்டாமா என்பதை அந்தப் பெண்ணிடமே விட்டு விடலாம் தானே!//
அந்த பெண் அணிய தேவையில்லை என்று நினைத்தாலும் அவர் கணவர் விட்டு விடுவாரா?...ம்...அதை அவர் கணவரிடமே விட்டுவிடலாமே?...அட போங்கப்பா.. //

பர்தாவைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்துக்கொண்டு கருத்து சொல்வதாக கருத முடியவில்லை.
கண்ணியமான எந்த ஆடைக்கும் பர்தா என்று சொல்லலாம். அது கருப்பாகவோ (அ) வெள்ளையாகவோ த்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உதாரணம்: நமது முன்னாள் கவர்னர் ஃபாத்திமாபீவி அணிந்திருந்ததும் பர்தா தான். (அவருடைய பிற இஸ்லாமிய புரிந்துணர்வுகள் பற்றி நான் அறிய மாட்டேன்).

பர்தா என்பதன் நோக்கம் மறைக்கப்பட வேண்டிய அங்கங்கள் மறைக்கப்படவேண்டும் என்பதே. திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அணிந்திருந்ததும் பர்தாவை ஒத்த ஒரு ஆடையே!

மேலும், கணவன், மனைவி மீது உரிமை எடுப்பதிலும் அதேபோல மனைவி, கணவன் மீது உரிமை எடுப்பதிலும்-அவர்கள் அதை ஒருவருக்கொருவர் அனுமதித்துக்கொள்ளும் நிலையில் - கவனிக்க- ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அனுமதித்துக்கொள்ளும் நிலையில் - என்ன தவறு காண்கிறீர்கள்? (மூன்றாம் நபர்களான சுட்டுவிரலும் ஜோவும் தான் அவள் மீது கருத்துத் திணிப்பு செய்யக்கூடாது).

''அவர்கள் (பெண்கள்) மீது உங்களுக்கிருக்கும் உரிமைகளைப் போலவே உங்கள் (ஆண்கள்) மீதும் அவர்களுக்கு உரிமைகள் உள்ளன'' என்கிறது குர் ஆன்.

'புல்லானாலும் புருஷன் கல்லானாலும் கணவன்' என்கிற பெண்ணடிமைத்தனத்தை இஸ்லாம் போதிக்கவில்லை என்பதையாவது உணருங்கள்.

 
At Wed May 18, 07:15:00 AM 2005, Blogger ஜோ/Joe said...

சுட்டுவிரல்,
பதிலுக்கு நன்றி.
பர்தா தரும் கண்ணியத்தை பற்றி நான் அறியாதவனல்ல .கத்தோலிக்க கன்னியர்கள் அணியும் உடை கூட அத்தகையது தான் .அதற்கான காரணங்கள் கூட இஸ்லாமில் கூறப்படும் காரணங்கள் என்றே வைத்துகொள்வோம்.

பெண்களின் உரிமைகள் பற்றி ஆழமாக செல்வதற்கு முன் முன்பொருமுறை நான் கேட்ட ,பதில் வராத கேள்விக்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

ஆண்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக பெண்களின் ஆடை இருப்பதை தவிர்க்க ,உணர்வுகளைத் தூண்டும் பாகங்களை மறைக்க வேண்டும் ..இது ஒரு வகையில் சரி தான்..ஆனால் 3 வயது குழந்தை இதை அணிவதும்,80 வயது பாட்டி இவ்வாறு அணிவதும் எதனால்..ஆண்கள் அவ்வளவு வக்கிரமாகவா போய்விட்டார்கள்?

ஆக பெரும்பான்மையினர் பர்தாவிற்குரிய உண்மையான தேவையும் காரணத்தயும் உணர்ந்து அணிவதாக தெரியவில்லை .பெரும்பாலும் தங்களை முஸ்லிமாக காட்டிக் கொள்ள ஒரு குறியீடாகவும் ,ஆண்கள் தம் சமுதாயத்தில் இஸ்லாம் மீதுள்ள உறுதியை மேம்போக்காக காட்டி பெருமை கொள்ள தம் வீட்டு பெண்களை கருவிகளாக பயன்படுத்தி கொள்ளவுமே அணியப்படுகிறது (விதிவிலக்குகள் உண்டு)

 
At Wed May 18, 12:08:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

*/பர்தா தரும் கண்ணியத்தை /*
= ?

 
At Wed May 18, 12:29:00 PM 2005, Blogger நல்லடியார் said...

அரை குறை ஆடையுடன் வலம் வருவதுதான் பெண்ணுரிமை எனில் அத்தகைய உரிமை தன் வீட்டு பெண்ணுக்கு முதலில் கொடுக்கப் படட்டும்.

தன் மணைவியின் உடல் அழகை தான் மட்டுமே ரசிக்க வேண்டும் என எண்ணும் கணவன் எந்த வகையில் பெண்ணுரிமையை மீறிவிட்டான்?

நந்தலாலா அவர்களே, //எந்த ஒன்றையும், அதற்கு கீழான ஒன்றுடன் ஒப்பிடலாம். கீழான ஒன்று இருப்பதினாலேயே மற்றது சிறப்பானது என்று ஆகி விடாது// கீழான ஒன்று என்பதற்க்கு தங்களின் அளவீடு என்ன?


//அதில் பங்கேற்ற சில பெண்கள், அவர்கள் சந்திக்கும் கொடுமைகளையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளனர்// அப்படியெனில், அவர்களுக்கு முழு உரிமையை வழங்கி ::அழகு பார்க்கும்:: தங்களுக்கு பிடித்தமான மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டுமே?

//இஸ்லாம் என்ற "இனிய மார்க்கத்தில்" ஆண்களுக்கே சுதந்திரம் கிடையாது. இங்கு பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்! எந்த இஸ்லாமிய நாட்டில் முஸ்லீம் ஆண்களுக்கு கூட, சுதந்திரமாக இஸ்லாத்தையோ வேறொரு மார்க்கத்தையோ தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது என்று சொல்லுங்கள் நண்பர்களே! //

நண்பர் ஆரோக்கியம் அவர்களே எந்த வகையான சுதந்திரம் இஸ்லாமிய ஆண்களுக்கு வழங்க வேண்டுமென்று நினைக்கிறீர்? எனக்குத் தெரிந்து முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடு என்று ஒன்று இல்லை. ஏனெனில் அது ஆதிக்க உலகத்தால் அங்கீகரிக்கப் படுவதில்லை. அல்லது தீவிரவாத, பழைமைவாத முத்திரை குத்தப் படும்.

உரிமை என்பது வழங்கப்பட்டதை மறுக்கும் போது போராடி பெற வேண்டியது. இஸ்லாம் பெண்களை சரி சமமாக அல்ல ஆண்களை விட ::சில:: சலுகைகளுடன் கண்ணியம் வழங்கியே வருகிறது.

இஸ்லாத்தைப் பொருத்தவரை ஆனை விட பெண்ணோ அல்லது பெண்ணை விட ஆனோ சிறந்தவர் இல்லை. இருவரும் சமமே. ஆனால் ஒன்றல்ல!!!

 
At Wed May 18, 12:52:00 PM 2005, Blogger ஜோ/Joe said...

நந்தலாலா,
"பர்தா அணிவதால் கிடைக்கும் கண்ணியமான தோற்றம் என்று முஸ்லிம்கள் குறிபிடுவதை" என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

நல்லடியார்,
அப்படியே என்னுடய கேள்விக்கும் பூசி மெழுகாமல் பதில் தந்தால் நன்றாக இருக்கும்.

 
At Wed May 18, 02:04:00 PM 2005, Blogger ஜோ/Joe said...

நேச குமார்,
நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
சுட்டுவிரல் அவர்கள் பர்தா பற்றி நான் அறியாமலே வினா எழுப்பியதாக கூறி 'பர்தா' -ன் நோக்கம் தான் ஒன்றே தவிர ,அதை பலர் பல முறைகளில் அணிகிறார்கள் என்றார் .அதை நான் விளங்கியிருக்கிறேன் என்று காட்டவே கத்தோலிக்க கன்னியரை குறிப்பிட்டேன் .மற்றபடி கத்தோலிக்க கன்னியர் அணிவதற்கான காரண்ங்கள் ,விதிமுறைகள் சார்ந்த வேறுபாடுகளை ஒரு கத்தோலிக்கன் என்ற முறையில் அறிந்தே வைத்திருக்கிறேன்.

//கத்தோலிக்க கன்னியர் இம்மாதிரியாக உடையணிய வேண்டும் என்று கடவுள் இயேசுவிடம் வந்து சொன்னார் என்ற நம்பிக்கை எதாவது கத்தோலிக்க கிறித்துவத்தில் இருக்கிறதா? //

இயேசு எந்த மதத்தை பற்றி பேசவோ ,நிறுவவோ இல்லை எனும்போது இந்த கேள்விக்கே இடமில்லை.

மற்றபடி பர்தாவை நான் நியாயப்படுத்தவில்லை ..மாறாக பலமுறை கேட்ட கேள்விக்கு இஸ்லாமிய அன்பர்கள் பதிலும் தரவில்லை .."பர்தா என்பது ஆண்களின் பார்வையிலிருந்து பாலுணர்வு தூண்டும் அங்கங்களை மறைப்பதற்கான விஷேச ஆடை என்றால் ,3 வயது சிறுமியும் ,85 வயது மூதாட்டியும் எதற்காக அணியவேண்டும் ..ஆண்கள் அவ்வளவு வக்கிரமானவர்களா?"..என்ற என் கேள்விக்கு உங்களின் கருத்து என்ன?

 
At Wed May 18, 03:22:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நல்லடியார்,
உங்களின் இந்த கருத்தில், ஆணாதிக்க வெறியும், மத வெறியும் தான் இருக்கிறது.

//நந்தலாலா அவர்களே, //எந்த ஒன்றையும், அதற்கு கீழான ஒன்றுடன் ஒப்பிடலாம். கீழான ஒன்று இருப்பதினாலேயே மற்றது சிறப்பானது என்று ஆகி விடாது// கீழான ஒன்று என்பதற்க்கு தங்களின் அளவீடு என்ன?//

மேலான ஒன்று என எதையும் தாங்கிப் பிடிப்பவருக்கு, அதற்கு எதிர் கருத்து எல்லாமே கீழானதாக தெரியும்.

குறிப்பாக இதை நான் சொன்னது,
"மேலும், பெண்களுக்கு சொத்துரிமை, திருமணங்களில் சீதனமின்மை போன்ற அம்சங்களால் இந்து மதத்தை விட பெண்களுக்கு அதிக உரிமை தரும் ஒரு சமயமாகவே எனக்குப் படுகிறது" என voice of winngs எழுதியதற்கு எனது பதிலாக.

இந்த இடத்தில், மேல்/கீழ் என்பதற்கான எனது அளவீடு பற்றி என்ன என்பதை அறிய வேண்டிய தேவை எங்கே வந்தது?

//அப்படியெனில், அவர்களுக்கு முழு உரிமையை வழங்கி ::அழகு பார்க்கும்:: தங்களுக்கு பிடித்தமான மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டுமே?//

"பிடிக்காவிட்டால் வெளியே போ" என்று நீங்கள் சொல்வது, நிதானமில்லாமல் எழுதப்பட்ட ஒரு ஆதிக்க வெறியனின் கூச்சலாகத்தான் எனக்குப் படுகிறது.

"இந்தியாவில் மசூதிகளை இடித்து கோவில் கட்டுவோம். பிடிக்காதவர்கள் வேன்டுமென்றால் இந்தியாவை விட்டு வெளியேறட்டும்" என்று சொல்லும் இந்துத்துவ வெறிக்கும், நல்லடியார், உங்களுக்கும் என்ன வேறுபாடு?

மதவெறியர்கள் ஒன்றினையும் புள்ளி இது.

மற்றவர்களின் கருத்துக்கான உங்களின் கேள்வி/பதிலுக்கு அவர்களே பதிலளிப்பார்கள் என நம்புகிறேன். இல்லவிட்டால் நேரமிருப்பின் எழுதுகிறேன்.

 
At Wed May 18, 04:28:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நேசகுமார்,
//ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக//

பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட சித்தாந்தம் ஒன்று பிணம் எரியும் நெறுப்பில், உயிருடன் பெண்ணை வீசிக் கொல்லச் சொல்கிறது.

1400 ஆண்டுகளுக்கு முன்னாள் நிறுவப்பட்ட ஒன்று வெறுமனே அடிக்க சொல்கிறது.

கால ஓட்டத்தில், மனிதம் சிறிது சிறிதாய் புரிபட, புரிபட்ட அளவுக்கு பெண்ணுக்கெதிரான கொடுமையின் அளவும் குறைவாக போதிக்கப் பட்டதேயல்லாமல், முற்றாக நீங்கிவிட வில்லை. அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்துவிடவில்லை. அவ்வளவுதான்.

எறியும் கொள்ளி - இதில் எந்த கொள்ளியாய் இருந்தால் என்ன?
புனையப்பட்ட சித்தாந்த புளுகு எதுவாய் இருந்தால் என்ன?

 
At Wed May 18, 04:37:00 PM 2005, Blogger நல்லடியார் said...

//பர்தா என்பது ஆண்களின் பார்வையிலிருந்து பாலுணர்வு தூண்டும் அங்கங்களை மறைப்பதற்கான விஷேச ஆடை என்றால் ,3 வயது சிறுமியும் ,85 வயது மூதாட்டியும் எதற்காக அணியவேண்டும் ..ஆண்கள் அவ்வளவு வக்கிரமானவர்களா//

ஏன் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது பற்றியும், 80 வயது மூதாட்டியை கற்பழித்த கயவர்கள் பற்றியும் நீங்கள் எங்குமே படித்ததில்லையா?

சகோதரர் நேசகுமார், நீங்கள் குறிப்பிட்டுள்ள திருக்குர் ஆன் வசனம் 38:44 முஹம்மது நபிக்கு பல ஆண்டுகள் முந்தைய அயூப் நபி அவர்கள் பற்றியது. அவர்களின் முழு வரலாற்றையும் அறிந்திருந்தால் உங்கள் கேள்விக்கு அவசியம் இருக்காது. எனினும் அவர் கடும் தொழு நோயில் துன்பப் பட்ட போது அவருடன் கூட இருந்து பணிவிடை செய்த ஒரே ஜீவன் அவரின் மணைவி மட்டுமே. ஒரு சந்தர்ப்பதில் அவர் மணைவியை 100 முறை சாட்டையால் அடிப்பதாக இறைவன் மீது சத்தியமிட்டு விடுகிறார். பிறகு அவர் குணமாகிய உடன் தான் செய்த சத்தியத்தால் அவர் மணைவி துன்பப் படுவாளே என வருந்துகிறார். அதற்கு அல்லாஹ் 100 குச்சிகளை கொண்ட ஒரு புல் கட்டால் உம் மணைவியை அடித்து உங்கள் சத்தியத்தை காப்பற்று! என்கிறான்.

மேலும் பெண்களுக்கு ஆண்களை விட சில சலுகைகள் உண்டு என்பதற்கு சில உதாரணங்கள்:

1) மஹர் (வரதர்சினை)பெறுவது மணப்பெண்ணின் உரிமை.
2) தனக்கு பிடிக்காத கணவனை பெண் :: ஒரே:: தவணையில் விவாகரத்து செய்யலாம்.
3) போரில் பங்கெடுப்பது அவள் மீது கட்டாயம் இல்லை.
4) எதிரி வீட்டு/நாட்டு பெண்கள், குழந்தைகள் ஆகியோரை போரில் கொள்வது/துன்புறுத்துவது இஸ்லாமிய போர் வீரனுக்கு தடை (ஹராம்) செய்யப் பட்டது.


சகோதரர் நேச குமார், மனித இயல்புக்கு எதிரான இறை கட்டளையை அல்லது இஸ்லாமிய சட்டத்தை உங்களால் சொல்ல முடியாது. மேலும் குர்ஆன் ஹதீஸ் இவற்றிலிருந்து மேற்கோல் காட்டும் போது தங்களுக்கு தோதான வரிகளை மட்டும் காட்டாமல் அதன் முழு விபரத்தையும் பதித்தால் நல்லது.

//தயவு செய்து எக்காரணத்தை முன்னிட்டும் இந்த பர்தாவை நியாயப்படுத்தும் கருத்துக்களை வெளியிடாதீர்கள்.// பார்வையில் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய கூட மனமில்லையா?

நந்தலாலா அவர்களே, என்னை மத வெறியன் என நீங்கள் முத்திரை குத்துவது சகிக்க முடியவில்லை. கருத்துக்களுக்கு எதிர் கருத்து இடுவது எப்படி மத வெறியாகும்?

குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளதை பின்பற்றினால்தான் உண்மையான முஸ்லிம். வருனாசிரம கொள்கையிலிருந்து பிடிக்காமல் வெளியேறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தானே அராபியர் அல்லாத முஸ்லிம்கள்.

அன்பு நந்தலாலா, உங்களின் இஸ்லாமிய(ர்) விரோதம்/குரோதம் சிலநேரங்களில் பெண்ணுரிமையை சொல்கிறேன் என்ற பெயரில் உங்கள் வார்த்தைப் பிரயோகத்தில் வெளிப்படுகிறது.

சகோதரர்கள் நேசகுமார்,நந்தலாலா, ஜோ அனேகமாக நான் பூசி மெழுகவில்லை என்று நம்புகிறேன்.

(எனக்கும் முழு நேரம் தங்கள் கேள்விகளுக்கு பதிலலிக்க நேரமில்லை. எனினும் அதிகபட்சம் முயற்சிக்கிறேன்.)

 
At Wed May 18, 05:00:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நல்லடியார்,

//நந்தலாலா அவர்களே, என்னை மத வெறியன் என நீங்கள் முத்திரை குத்துவது சகிக்க முடியவில்லை.//

நீங்கள் சொன்ன கருத்தில் உள்ள மதவெறி, ஆணாதிக்க வெறியை குறிப்பிட்டேனே அல்லாது, உங்களின் மீதான தீர்ப்பாக அதை சொல்லவில்லை.
அப்படி சொல்ல வேண்டிய தேவையும் *எனக்கு* இல்லை என்பதை அறிக.

நான் சொல்லாத ஒன்றை, உங்களால் *சகிக்க* முடியாமல் போனால் நான் என்ன செய்ய?

//கருத்துக்களுக்கு எதிர் கருத்து இடுவது எப்படி மத வெறியாகும்?//

மீண்டும் சொல்கிறேன்,என் கருத்துக்கு எதிர் கருத்து இடுவது பற்றியல்ல நான் சொல்வது. நீங்கள் வைக்கும் கருத்தின் தன்மையை தான் சொன்னேன், சொல்கிறேன் மதவெறி, ஆணாதிக்க வெறி கொண்ட கருத்துக்கள் என்று.

//அன்பு நந்தலாலா, உங்களின் இஸ்லாமிய(ர்) விரோதம்/குரோதம் சிலநேரங்களில் பெண்ணுரிமையை சொல்கிறேன் என்ற பெயரில் உங்கள் வார்த்தைப் பிரயோகத்தில் வெளிப்படுகிறது.//

எந்த நேரங்களில் என்பது எனக்கு தெரியவில்லை.

ஒருவேளை, நான் முன் வைக்கும் மனித நேய கருத்துக்கள், இஸ்லாத்தின் கருத்துக்கு மாறாக இருந்தால், அதனால் உங்களைப்போன்றோருக்கு என்னை ஒரு இஸ்லாமிய விரோதத்தை, இஸ்லாத்தின் மேல் குரோதத்தை வெளிப்படுத்துபவனாக அடையாளம் காட்டுமானால், அது என் தவறு இல்லை.

நேரமிருக்கும் போதே தொடரலாம்.

 
At Wed May 18, 05:09:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

//சகோதரர்கள் நேசகுமார்,நந்தலாலா, ஜோ அனேகமாக நான் பூசி மெழுகவில்லை என்று நம்புகிறேன்.//

எனக்கெதற்கு இப்படியோர் விளக்கம்?

 
At Wed May 18, 05:33:00 PM 2005, Anonymous Anonymous said...

ஐயா வேஷ கொமாரு,

//அதே போன்று மற்ற எந்த மதத்திலும் இல்லாத எதாவது பிற்போக்குத் தனங்கள் இந்து மதத்தில் இருந்தாலும் அவற்றையும் நான் கண்டிப்பதில் எனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது. //

எத்தினி தபா ராசா இப்டிப் பண்ணினே? ஒரு example எடுத்து வுடேன்...

 
At Wed May 18, 07:03:00 PM 2005, Anonymous Anonymous said...

//இதற்கு நான் என்ன பதிலைச் சொல்வது? உங்களுக்கே தெரியும். 3 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என்றால் மட்டும் மனதில் வக்கிரம் வந்து விடுகிறதா? உலகெங்கிலும் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட, 80 வயதுக்குட்பட்ட, பர்தா அணியாத பெண்களெல்லாம் மனதில் வக்கிரத்தைத் தூண்டுகிறார்களா?//

இங்கே குறிப்பிட்டிருப்பதை பார்த்தால் ஏதோ பெண்கள் ஆபாச உடை அணிந்து அது ஆண்களை தூண்டி அதுவே பிரச்சினைக்கு காரணம் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆபாச எண்ணோத்தோடு பார்க்கும் ஆடவர்களை கண்டிக்காமல் பெண்டிரை முழுவதும் போர்த்திக்கொண்டு வா என்பது ஆணாதிக்க சமுதாயத்தின் அசிங்கமான வெளிப்பாடு.

-தெருப்பாடகன்-

 
At Thu May 19, 09:43:00 AM 2005, Blogger நல்லடியார் said...

//நான் அறியாத சரித்திரமாயிருக்கிறது இது, விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்// நேசகுமாருக்கு, இந்திய முஸ்லிம்களின் பாட்டனும் முப்பாட்டனும் ::சூத்திர:: இந்துதான் என்ற வரலாறு தெரிந்திருந்தால் உங்கள் கேள்விக்கு விடை உண்டு.

மூன்றுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட பெண்கள் மட்டும்தான் ::பர்தா:: அணிய வேண்டுமென்றில்லை. மேலும் பர்தா அணியப்பட்ட பெண்களெல்லாம் கற்பழிக்கப் படுவதில்லை என சொல்லவில்லை. ஆண்கள் அந்த அளவுக்கு காமுகர்களா என்ற கேள்விக்கு சொல்லப்பட்ட பதில் அது. எல்லா மதத்திலும் காமுகர்கள் இருக்கிறார்கள். அதற்கு பர்தா ஒரு தடையல்ல.

பெண்களை மட்டும் ::பர்தா:: போடச் சொல்வது ஆணாதிக்க வெளிப்பாடென கண்டிக்கச்சொல்லும் தெருப்பாடகன், பெண்களை பர்தா அணியச் சொல்லும் இஸ்லாம், ஆண்களையும் பார்வைகளை கண்ணியமாக பார்க்கச் சொல்கிறது என்பதை அறியவும்.

தன் சகோதரியோ, மணைவியோ, தாயோ அல்லது மகளோ பிறரின் கிளர்ச்சியை தூண்ட காரணமாக இருந்து விடக்கூடாது என எண்ணுவதுதான் உங்கள் பார்வையில் ஆணாதிக்கம் அல்லது பிற்போக்குத்தனமா?

//உங்களின் இந்த கருத்தில், ஆணாதிக்க வெறியும், மத வெறியும் தான் இருக்கிறது//நந்தலாலா, மேலே சொன்னது நீங்கள் எனக்கிட்ட பதிலுரை.

தங்களுக்கு பிடிக்காதகொள்கையிலிருந்து பிடித்த கொள்கையை தேர்ந்தெடுக்கச் சொன்னததற்கும், தன் மத ::வருணாசிரமத்தை:: ஏற்க மறுப்பவர்களை இந்தியாவைவிட்டு வெளியேறச் சொல்லும்
::பரிவாரங்களுக்கும்:: வித்தியாசம் உண்டு.


நேச குமார், உங்களுக்கு எப்போதெல்லாம் இஸ்லாத்தின் மீதான சந்தேகம் ஏற்படுகிறதோ அப்பொதெல்லாம் குர்ஆனையும் ஹதீஸையும் உங்களுக்கு ஏற்ற மொழி பெயர்ப்பில் படித்து உங்கள் கருத்துக்களை ஒப்பீடு செய்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதனோடு சம்பந்தப் பட்ட வரலாற்றையும் படித்து பாருங்கள். Internet Search ல் தேடிப்பார்த்தால் கிடைப்பதெல்லாம் உண்மையாகி விடும் என எப்படி முடிவுக்கு வந்தீர்?

இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணமாக இருக்கிறது. அதற்கு தோதான தேடல்களாகத் தான் உங்கள் தேடல்கள் உள்ளன.

நீங்கள் சொல்லும் மூடப் பழக்க வழக்கங்கள்::கட்டுமான பர்தா:: முஸ்லிம்களிடத்தில் இருந்தால் அதற்கு அவர்களின் அறியாமைதான் காரணமன்றி, அது இஸ்லாத்தின் குறை அல்ல.

//இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எந்தெந்த கூறுகளை நான் கண்டிக்கின்றேனோ, அதே கூறுகள் இந்து மதத்தில் இருந்தாலும், வேறெந்த மதத்தில் இருந்தாலும் கண்டிக்கிறேன் என்பதை அறிக//

தங்களின் பதிவுகளில் அத்தகைய கண்டனங்களை காண முடியவில்லை. பெரும்பாலும் இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம்தான் உங்கள் பார்வையில் விமரிசிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் உங்கள் மதம் ::மறுமலர்ச்சியை:: நோக்கி சென்று கொண்டிருப்பதாக நம்புபவர்களில் ஒருவராக நீங்களே அடையாளப் படுத்திக் கொண்டுள்ளீர்.

 
At Thu May 19, 02:30:00 PM 2005, Blogger நல்லடியார் said...

நேசகுமார், தங்களைப்பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ::சகோதரர்:: என்ற கண்ணியமான வார்த்தையையே பெரும்பாலும் உபயோகித்திருக்கிறேன். எனினும் நீங்கள் ::மதவறியன்:: என்ற சொற்பிரயோகம் செய்துள்ளீர். இது உங்கள் குதர்க்க கருத்துக்களுக்கு இஸ்லாத்தின் நிலையை தெளிவுபடுத்த முயல்பவருக்கு சகிப்புத் தன்மையற்றவர்கள் சூட்டும் அடைமொழி. வருணாசிரம தத்துவத்தை தாங்கி பிடிக்கும் உங்களுக்கு என்ன வெறியன் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

குற்றம் என சொல்லிவிட்டு அதன் மீதான தீர்ப்பையும் நீங்களே சொல்ல முயல்வது அல்லது விளக்கமளிப்பவரை வேரு கருத்தை சொல்லி திசை திருப்புவது என்பதே உங்கள் எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. எந்த விளக்கம் சொன்னாலும் உங்களால் ஏற்கும் மனநிலையில் இல்லை. ஏனெனில் சொன்ன கருத்தை சரி என காட்டுவதிலேயே நீங்கள் எழுதி வருகிறீர்கள்.

நீங்கள் பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். அவற்றிற்கெல்லாம் என்னிடம் பதில் சொல்லும் அளவுக்கு என் வேலைபழு அனுமதிக்கவில்லை. எனவே புறமுதுகிட்டு ஓடி விட்டதாக நினைத்து விடாதீர்கள்.

என் சக இந்து நண்பர்கள் புண்படக் கூடாது என்பதாலும் தங்கள் விதண்டாவதங்களுக்கு பதில் சொல்லும் அளவுக்கு என் இஸ்லாமிய ஞானம் குறைவு என்பதாலும், மேற்கொண்டு உங்களிடம் விவாதம் செய்வதை நிறுத்த விரும்புகிறேன். என் பதிவுகளில் உங்களைப் புண்படுத்தும் சொற்பிரயோகம் இருந்தால் தெரிவிக்கவும் அவற்றை தவிர்த்து விடுகிறேன்.

::உங்கள் மார்க்கம் உங்களோடு, என் மார்க்கம் என்னோடு:: என்ற நபி மொழிக்கு ஏற்ப என் விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

 
At Fri May 20, 05:44:00 PM 2005, Blogger நல்லடியார் said...

நேசகுமார், மத வெறியன், பெண்ணடிமைவாதி என முத்திரை குத்தி பதில் என் கருத்திலுள்ள நியாயத்தை கூட ஏற்காமல் துவேசம் பேசும் உங்களிடம் விவாதிக்க வேண்டாம் என விலக நினைத்தேன். எனினும் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திய பின், நான் ஒதுங்குவது நீங்கள் சொல்வதை ஆமோத்தித்தாகி விடும் என்பதால் தொடர்கிறேன்.

கடவுள் இருக்கிறது என்பனிடம் எந்த கடவுள் சொல்வது சரி என வாதிடலாம். கடவுளே இல்லை அல்லது தேவை இல்லை என பகுத்தறிவு பேசும் உங்களிடம் எதைக் கொண்டும் வாதிட முடியாது.

“உண்டு” என சொல்வதற்குத்தான் தாரங்களை காட்ட வேண்டும். “இல்லை” என்பதற்கு அதை மறுப்பது மட்டும் போதும். அதற்கு பெயர்தான் பகுத்தரிவு என்றால் அதை என்ன வென்று சொல்வது?

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதை ஒப்புக்கொள்ள முடியும் பகுத்தறிவுவாதியால் இறைவனால் படைக்கப்பட்டான் என்பதை ஏற்க மறுப்பது குதர்க்கம் அல்லாமல் வேறு என்ன? பார்த்துதான் நம்பிக்கை கொள்வேன் என்பது எப்படி பகுத்தறிவாகும்? பகுத்தறிவுக்கும் ஒரு எல்லை உண்டு. ஓரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மனிதனின் சிந்தனை நின்று விடுகிறது. கண்களால் பார்த்து அதுதான் கடைசி என நம்பும்போது அவனின் சிந்தனை முற்றுப்பெறுகிறது. மேற்கொண்டு சிந்தித்தால் அவனுக்கு வேறு பெயர்.

பகுத்தறிவுவாதிகள் தங்களுக்கு தனி அடையாளம் வைத்துக் கொள்வதில்லை. உங்களை அழைப்பதாக இருந்தால் நேச குமார் என்றுதான் அழைக்க முடியும் அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த புணை பெயரால் அழைக்கப் படுவீர்கள். ஏனெனில் உங்களுக்கு ஒரு அடையாளம் உள்ளது. இன்னாரின் மகன் என்றோ அல்லது தந்தை என்றோ அல்லது வேறு ஏதாவது உறவுமுறையில் நீங்கள் அறியப் படுவீர்கள். அது போல்தான் மதமும். மனிதனுக்கு மதம் ஒரு அடையாளமே. கடவுளை நம்புபவன் இந்து, முசுலிம், கிறித்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு பர்தாவும் ஆணுக்கு தலாக் முறையும் இல்லாவிட்டல் உங்கள் இசுலாமிய எதிர்ப்பு ஓய்ந்து விடப் போவதில்லை. 1400 வருடங்களுக்கு முன் சொல்லப் பட்டது தற்காலத்திற்கு எப்படி பொறுந்தும் என வாதிடுவது எந்த வகை பகுத்தரிவு? நீங்கள் பேசும் பகுத்தரிவும் 1400 வருடங்கழித்து விமரிசிக்கப் படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

மதங்களின் பெயரால் சண்டை போடுவதை விமரிசியுங்கள். மனிதனை ஜாதியின் பெயராலும் குலத்தின் பெயராலும் கூறுபோடுவதை எதிர்த்து கூக்குரலிடுங்கள். மனிதனை மனிதனாக மதிப்பது எந்த மதம் என விவாதியுங்கள். மனித உரிமையை பேணுவது எந்த மதம் என பட்டி மன்றம் வையுங்கள். விடுத்து மதமும் வேண்டாம் கடவுளும் தேவையில்லை என பகுத்தறிவு என்ற போர்வையில் ஒதுங்கிக் கொள்ளாதீர்கள்.

அளவற்ற அருளாலன் அல்லாஹ¤வுக்கு பெண்ணின் ஆடையை பற்றிய கவலை ஏன் என குதர்க்கம் பேசாதீர்கள். ஒரு கொள்கை என்றால் அது எல்லோருக்கும் எப்போதும் பொறுந்த வேண்டும். அவ்வாறு சொல்லப்பட்ட சட்ட திட்டங்களில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு இது சரியா என வாதிடுவது எப்படி பகுத்தறிவாகும்?

1400 வருடங்களுக்கு முந்தைய சம்பவங்கள் எக்காலத்திற்கும் ஏற்ற குர்ஆனில் சொல்லப் பட்டிருப்பது ஏன் என்பது விதண்டாவதம் அல்லாமல் வேறு என்ன? தொழு நோயால் அவதிப்பட்ட ஒரு அடியான், கோபத்தில் தன் மணைவியை 100 முறை அடிப்பதாக சொல்லிவிட்டான். அதற்கு நூறு புற்களைக் கொண்ட கட்டால் ஒரு முறை அடித்து உன் சத்தியத்தை நிறைவேற்று என்று சொல்வதில் எங்கே பெண்ணுரிமை மீறப்பட்டது? இதில் சமார்த்தியமாக நீங்கள் ஒரு பகுதி சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இது சரியா தவறா என வாதிடுவதில்தான் உங்கள் குதர்க்கம் எட்டிப் பார்க்கிறது.

பர்தா பெண்ணுக்கு தேவை இல்லை என வாதிடும் நீங்கள் ஏன் பெண்ணுக்கு ஆடையே தேவை இல்லை என வாதிட முடிவதில்லை? ஏனெனில் அது உங்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாது.

வேண்டாத மணைவியை மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தலாக் சொல்லி விவாக விடுதலை பெறுவதை விட வேறு என்னதான் தீர்வு வைத்திருக்கிறீர்கள். ஆணுக்காவது மூன்று தவனையாக விவாகரத்து செய்ய வேண்டும். னால் தனக்கு பிடிக்காத கணவணை ஒரே தவணையில் “குழா” எனும் விவாகரத்து செய்யும் உரிமையை வழங்கிய இசுலாம் ஏன் உங்கள் பெண்ணுரிமை கண்ணுக்குப் படவில்லை?

மனிதர்களில் நல்லவனும் உண்டு கெட்டவனும் உண்டு. அவனுக்கு மதம் ஒரு முகமூடிதான். பர்தா அணிந்து விட்டால் அவள் கற்பழிக்கப் படுவதில்லை என யாரும் பகுத்தரிவு பேசவில்லை. ஆணின் கிளர்ச்சிக்கு காரணமாக வேண்டாம் என்ற முன்னேற்பாடுதான் பர்தா.

உங்கள் அமெரிக்க நண்பர்களுக்கு பர்தா அணியாத பெண்களை விட பர்தா அணிந்தவர்கள்தான் கிளர்சியை தூண்டுகிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். இங்குதான் உங்கள் பெண்ணுரிமைக்கூப்பாடு பல் இளிக்கிறது.

Trail Marriage, Contractual Marriage, Limited period Marriage, Dating, Indecent Proposal என பெண்ணுரிமை விபச்சார மயமாக்கப்படும் அமெரிக்க நண்பருக்கு, பர்தா அணிந்த பெண் மட்டுமல்ல சகோதரியே கூட கிளர்ச்சியை தூண்டுவாள். (நான் அன¨த்து அமெரிக்கர்களையும் சொல்லவில்லை)

மண்ணிக்கவும், நேசகுமார் உங்களிடம் முற்போக்கு எண்ணமும் இல்லை, பெண்ணுரிமையும் இல்லை. உங்களைப் பொறுத்தவறை பெண்ணுரிமையோ மனித நேயமோ முக்கியமல்ல. இசுலாத்தின் மீது மாசு கற்பிப்பதே உங்கள் தலையாய நோக்கம். அதற்காகத்தான் Islamic info என்ற பெயரில் திசை திருப்பி வருகிறீர்கள்

 
At Fri May 20, 06:01:00 PM 2005, Anonymous Anonymous said...

//மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதை ஒப்புக்கொள்ள முடியும் பகுத்தறிவுவாதியால் இறைவனால் படைக்கப்பட்டான் என்பதை ஏற்க மறுப்பது குதர்க்கம் அல்லாமல் வேறு என்ன?//
முன்னதுக்கு ஆதாரம் இருக்கு.
சரி பின்னதுக்கு ஆதரம் இல்லேன்னாலும் நம்பறோம்னு வெச்சுகிடுங்க - அது எந்த கடவுள்னு எப்டி நம்புறது? பிரியலியே நைனா.

 
At Sat May 21, 09:53:00 AM 2005, Blogger நல்லடியார் said...

ஆதாரம் இருக்கு என்று எப்படி சொல்கிறீர் Mr.Anonymous.? எனில், இன்றும் சில குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை? அவற்றை தடுத்தது எது?

 
At Sun May 22, 12:35:00 PM 2005, Anonymous Anonymous said...

நல்லடியார்,

நீங்கள் நேசகுமாருக்கு விளக்கம் கொடுப்பது வீண் வேலை என்றாலும் மற்ற நடுநிலை சிந்தனை கொண்ட சகோதரர்களுக்காகவாவது விவாதத்தை தொடர வேண்டும்..

'பர்தா' வைக்குறித்து எதிர்மறை எண்ண்ம் கொண்டுள்ள சகோதரர்களுக்கு, 'பர்தா என்பது கறுப்பு அங்கி அன்று. முகம் மற்றும் கைகள் தவிர மற்ற உறுப்புகள் அனைத்தையும் மறைக்கும் (இறுக்கமில்லாத) ஆடை தான் 'பர்தா' அல்லது 'ஹிஜாப்'.

//.."பர்தா என்பது ஆண்களின் பார்வையிலிருந்து பாலுணர்வு தூண்டும் அங்கங்களை மறைப்பதற்கான விஷேச ஆடை என்றால் ,3 வயது சிறுமியும் ,85 வயது மூதாட்டியும் எதற்காக அணியவேண்டும் ..ஆண்கள் அவ்வளவு வக்கிரமானவர்களா?"..என்ற என் கேள்விக்கு உங்களின் கருத்து என்ன? //

எல்லா அண்களும் வக்கிரமானவர்கள் இல்லை தான். ஒரு சிறு ஒப்புமையுடன் விளக்குகிறேன்...

நண்பர்கள் ஜோ, நேசகுமார் தாங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது தயவு செய்து உங்கள் வீட்டைப் பூட்டாதீர்கள். ஒருவேளை நீங்கள் அவ்வாறு பூட்டினால், உங்கள் தெருவில் குடியிருப்போர், அண்டை வீட்டார் அனைவரும் திருடர்கள் என்று தானே பொருள்?

இப்பொழுது புரிகிறதா இஸ்லாம் ஏன் கண்ணியமான உடை அணியச் சொல்கிறது என்று?

 
At Sun May 22, 04:58:00 PM 2005, Blogger சுட்டுவிரல் said...

அன்புள்ள ஜோ

முதலில் உடனுக்குடன் பதிலிட அனுமதிக்காத என் சூழலுக்காக என் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு..........

எனக்கும் உங்களுக்கும் அது போல நந்தலாலாவுக்கும் வாய்ஸ் ஆன் விங்ஸ்_க்கும் இடையே புரிதலுக்கான ஒரு சில இழைகளே மீதமிருக்கிற நிலையில்

இஸ்லாத்தின் மீது (மட்டும்) வெறுப்பை மட்டுமே உமிழ்கிற ‘நேசங்’களும் உணர்ச்சி வசப்பட்ட அடியார்களுமாக விவாதத்தை தாம் விரும்பும் திசைக்கு கடத்திச் சென்று விட - ஒரு சுமுகமான விவாதம் ஈகோ சுழலில் சிக்கிக் கொண்டது.

(இஸ்லாத்தின் மீது (மட்டும்) வெறுப்பை உமிழ்கிற ‘நேசங்’களும் என்கிற என் வார்த்தையை உணர சம்பந்தப்பட்ட சகோதரரின் இஸ்லாம் பற்றிய பதிவுகளையும் அதற்கான எதிர்வினையாக முஸ்லிம் சகோதரர்கள் பதிந்த பதிவுகளையும் சாவகாசமாக படித்துப்பார்த்து விளங்கலாம்.
என் ஒரு பதிவும் உதவலாம்: ‘(உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்)’’ .

மேலும் தன் பின்னூட்டத்திலும் நைட்டி அண்டார்டிகா என்றெல்லாம் தன் உள் மன எரிச்சலை கொட்டித்தீர்த்துள்ளார்.
பிற மதங்களையும் தான் விமர்சித்ததாக கூறுகிற அவர் பொய்யைத் தோலுரிக்க ஒரே ஒரு உதாரணம் கேட்ட அநாநிமஸ{க்கும் அந்நபர் இன்றுவரை பதிலளித்ததாகத் தெரியவில்லை).

நீங்களும் கூட ‘பர்தா’ வின் கண்ணியம் என்பதை முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் நந்தலாலா ‘பர்தாவின் கண்ணியம்?’ என்று கிண்டலடித்தவுடன் ‘அவ்வாறு முஸ்லிம்கள் கூறுவதாக’ பல்டியடித்துள்ளீர்கள். பரவாயில்லை.

என் சில கேள்விகளுக்கு தயவுசெய்து விளக்கம் தாருங்கள்:

1). மிகப்பெரும்பான்மையான ஆண்கள் (ஜார்ஜ் புஷ் தொடங்கி பின் லேடன் வரை) கண்ணியமாகவே ஆடை அணிந்திருக்க அதேபோன்ற கண்ணியத்துடன் பெண்கள் ஆடை அணிவதை (அ) அத்தகைய ஒரு போதனையை ‘ஆணாதிக்கம்’ என்பது சரியா?
எனில் பெண்ணியவாதிகளின் பார்வையில் அரைகுறை ஆடை தான் கண்ணியமா?

2) அடிமைச்சின்னங்களான தாலிக்கும் மெட்டிக்கும் எதிராக வரிந்துக்கட்டாத அறிவுஜீவிகள் பர்தாவுக்கு எதிராக மட்டும் வரிந்துக்கட்டுவதேன்? அதை போதிப்பது இஸ்லாம் என்பதாலா?

3) சம்பந்தமேயில்லாமல் பிளேடு விளம்பரத்துக்கும் - ஆணின் அந்தரங்க ஆடை விளம்பரத்துக்கும் கவர்ச்சியாகவும் கட்டாயமாகவும் ஒரு பெண் தேவைப்படுவது ஆணாதிக்கத்தின் அழுத்தமான பதிவு இல்லையா..? பெண்கள் கண்ணியமாக உடுத்துவதன் மூலம் இம்மனபோக்கை முடிந்தளவு மாற்ற முடியாதா...?

4) 3 வயது குழந்தையும் 85 வயது பாட்டியும் பர்தா அணிய வேண்டிய அவசியமென்ன என்று கேட்டவரே! - இது- சாரி, கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா..? 85 வயது பாட்டியாவது பழக்க தோஷத்தில் அணிந்திருக்கலாம். 3 வயது குழந்தையும் அணிந்திருப்பதை எங்கு கண்டீர்கள்? அப்படியே ஒரு சில கண்டிருந்தாலும் அவையும் இஸ்லாம் போதித்ததே என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? (இன்னமும் திருநெல்வேலி பக்கங்களிலும் - பெரு நகரங்களிலும் தத்தம் சேலைத் தலைப்பையே முக்காடாக க்கொண்டு தானே பர்தா பின்பற்றப்படுகிறது.)

5) சிறு வயதிலிருந்தே நல்ல விஷயங்களை நிர்ப்பந்தமாகவேனும் சொல்லித்தருவது நல்லது தானே.

(ஆணாகிய எனக்கும் கூட சிறு வயதில் சில ஆடை ஒழுங்குகளை என் பெற்றோர் சொல்லித்தந்துள்ளார்கள்-

அ). கரண்டைக்கு கீழே வரும்படி கைலி அணியக்கூடாது.
ஆ). கால் முட்டி தெரியும்படி எந்த ஆடையும் அணியக்கூடாது….. போன்றவை. அத்தகைய போதனைகளை இன்றளவும் நான் பெருமிதமாக உணர்கிறேன். என் குழந்தைகளுக்கும் ஆண் பெண் பாகுபாடின்றி சொல்லித்தருகிறேன்.
உங்களைப்போன்ற அறிவு ஜீவிகள் ஒருவேளை அவற்றை பெண்ணாதிக்கம் என்று பெயரிடுவீர்களோ..?

மனசாட்சியான பதில்கள் வேண்டும்.

எப்படியாவது இஸ்லாமைத் தாக்கியே ஆக வேண்டும் என்கிற ‘நிர்ப்பந்தம்’ குறைந்த பட்சம் உங்களுக்கேனும் இல்லாதிருக்கும் என்கிற நம்பிக்கையுடனும்
என் கடினச்சூழலில் நான் மீளவும் பின்னூட்டங்களுக்கு வர இயலாமற் போகலாம் எனினும் உங்களின் புரிந்துணர்வை எதிர்பார்த்துக் கொண்டும்…. - சுட்டு விரல்.

 
At Mon May 23, 12:46:00 PM 2005, Blogger நல்லடியார் said...

உணர்ச்சி வசப்பட்ட ::அடியார்:: என என்னைத்தான் ::சுட்டி::க்காட்டினீர்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்மனத்தில் ::தமிழன்:: என்ற உணர்வுடன் அளவலாவிக் கொண்டிருந்த எனக்கு சில ::நேசர்::களின் எழுத்துக்கள் புண்படுத்தின.

இஸ்லாத்தைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலிட்டால், ::மதவெறியன்:: என்றும் பெண்ணுரிமைக்கு இஸ்லாம் எதிரானது என்பதற்கு பதிலிட்டால் :: ஆணாதிக்கவாதி:: என்ற பட்டங்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட தமிழ் சமுதாயம், அதே கருத்தை கடந்த 1400 வருடங்களாக சொல்லி வரும் இஸ்லாத்தை சில ::நேசர்களும்::, ::லாலாக்களும்::அவதூறு சொல்லி திசை திருப்பி கொண்டிருகிறார்கள்.

நானும் பொதுவான தமிழ், தமிழர், இந்தியர் சார்ந்த விஷயங்களை பரஸ்பரம் எழுதி பகிர்ந்து கொள்ள ஆசைதான். எனினும் சாதாரணமாக ::இஸ்லாமியர் அல்லாதவர், மெக்காவிற்கு செல்ல முடியுமா?:: என்ற மயிலாடுதுறை சிவா அவர்களின் நியாயமான கேள்விக்கு கூட முஹம்மது நபி பற்றியும், இஸ்லாம் வன்முறையை போதிப்பதாகவும், பெண்ணுரிமைக்கு எதிரானதாகவும் சொந்த பெயரிலும் புணைப்பெயரிலும் எழுதி வரும் சக பதிவாளர்களுக்கு பதிலிட்டதில் நான் உணர்ச்சி வயப்பட்டது போன்ற தோற்றம் இருப்பின், அது என் எழுத்தின் பிழையன்றி கருத்துபிழையில்லை என நம்புகிறேன் .

நீங்கள் சொன்னதுபோல், ஒரு ஆரோக்கியமான விவாதம் மதச்சாயம் பூசப்பட்டு தவறாக வழி நடத்தப் பட்டதற்கு நானும் காரணமெனில், என் பதி(வி)லில் நியாயங்கள் இருப்பின் அது தவிர்த்து மற்றவற்றிற்கு தமிழ்மனம் வாசகர்கள் மண்ணிக்கவும்.

 
At Fri Apr 17, 10:27:00 AM 2009, Blogger all communities child for india said...

y not allow mixing marriage ur community. tell me u holy book telling kill two lovable to hearts. because my friend Hindu he love one Muslim girl. she mother not accept his love. she cut love. my friend dead. last time he love this girl. y ur community not allow our love. pl replay to me
i think ur god and hindu god like this end

 

Post a Comment

<< Home