குருமூர்த்தியின் மதச்சார்பின்மை!
இந்துத்துவ குரலையே இதுவரை ஓங்கி ஒலித்து வந்த குருமூர்த்திக்கு, திடீரென, இந்திய அரசு தனது மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து பிறழ்வது குறித்த கவலை, பிளந்த தூணின் நரசிங்கமாய் அவதரித்துள்ளது.
குருமூர்த்தியின் இந்த மாற்றத்திற்கு காரணமான, இந்திய அ(றிவிலி)திகார மையத்துக்கும், மரணமடைந்த பாப்பரசர் ஜான்பால் II க்கும் நன்றி தெரிவித்து விட்டு மேலே படியுங்கள்.
'லப்-டப் லப்-டப்' என துடிக்கும் 110 கோடி இதயங்களில், ஒரே ஒருவரின் இதயம் மட்டும் 'சுதேசி சுதேசி' என விம்மி வெடிக்கும்.
காலை கடனை, அது வாழை இலையோ, வெறும் மண் தரையோ, அதில் விதேசி என எழுதிவிட்டு, அதன் மேல தான் கழிப்பார் ஒருவர்.
அந்த ஒருவர் தான் 'சுதேசி ஜார்கன் மன்ச்'ஐ நிறுவிய, கலப்படமற்ற, சுத்த 'ஹி'ந்தியன் குருமூர்த்தி.
சரி இனி நடந்ததை பார்ப்போம்.
சுத்த சுதேசியான குருமூர்த்தி, ஒரு நாள் விதேசி இணைய தளமொன்றில் தவறி விழுந்திருக்கின்றார். அது அயர்லாந்து நாட்டினர் கூடும் தளம். அங்கே, அவர்கள் பாப்பரசர் மறைவுக்கு, அயர்லாந்து அரசாங்கம் அரசு முறை துக்கம் கடைபிடிப்பது குறித்து விவாதித்துள்ளனர்.
அரசு முறை துக்கம் கடைபிடிப்பதை அயர்லாந்து மக்கள் விரும்பவில்லை என்பதை அவர்களின் விவாதத்திலிருந்து தெரிந்து கொண்டுள்ளார் மேற்படியார். 92% கத்தோலிக்கர்கள் வாழும் அயர்லாந்து நாட்டிலேயே இப்படியாவென அயர்ந்துபோன அவருக்கு உடலெல்லாம் புல்லரித்துள்ளது.
கூடுதலாக, பிரான்ஸ் அரசின் அரசு முறை துக்க அறிவிப்பை வெளியிடுவதற்கும், அந்நாட்டின் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையும், பாப்பரசரை தொடர்ந்து, தலாய் லாமா, (மறைந்த?) கோமேனி ஆகியோருக்கும் இதே மரியாதை வழங்கப்படுமாவென கேள்வியெழுப்பியதும், அவரது மண்டையில் மணி அடித்திருக்கிறது.
அமெரிக்கா முதலான கிருத்துவர்கள் அதிகம் வாழும் நாடுகளும் அனுதாப அறிவிப்புடன் நின்றுவிட்டதும் அன்னாரது நினைவை குடைந்துள்ளது.
சீன அரசோ பாப்பரசரை தலைவராக பின்பற்றவே அந்நாட்டு கிருத்துவர்களுக்கு தடை விதித்திருந்தது வேறு அவரின் மூலையை பிசைந்துள்ளது.
இவற்றோடு, 98% கத்தோலிக்கர்கள் அல்லாத மக்களை (இதுக்கு மட்டும் 'முகமதியர்'ஐ ஆட்டக்கி சேத்துக்கிட்டாரு) கொண்ட இந்திய அரசு மூன்று நாள் அரசு முறை துக்கம் கடைபிடிப்பது, புனித தேசியக்கொடி அரைகம்பத்தில் பறப்பது எல்லாம், அவரின் நெஞ்சை பாற்கடலாய், கடையோ கடையென கடைந்திருக்கிறது.
புராண கடைசலில் ஆலகால விஷம் திரண்டது போல்,
இணைய கடைசல் குருமூர்த்தியினுள் மதச்சார்பின்மை கொள்கை மேலான பாசமாக திரண்டிருக்கிறது.
அன்று திரண்ட பாய்ஸன் ஆலகாலத்தை உட்கொண்டான் அந்த நீலகண்டன்.
இன்று திரண்ட பாசத்தை, இந்திய அரசின் போலி மதச்சார்பின்மை மேல் காறி துப்பியிருக்கிறார் இந்த குருமூர்த்தி.
இந்த துப்பலில், சாரமில்லை ஈரமில்லை என ஒதுக்கிவிட முடியாது.
மதத்தலைவர் மறைவுக்கு மூன்று நாள் துக்கமென்றால், இலட்சக்கணக்கில் மதத்தலைவர்களை கொண்ட ஞான பூமியாம் இந்தியாவில், வருடத்தில் மூன்று நாளாவது துக்கமின்றி கழியுமா?
'நல்லரசு' ஆவது அப்புறம் இருக்கட்டும், முதலில் 'வல்லரசு' ஆகும் என பார்த்தால், முடிவில் 'துக்கரசு' ஆகி, தினம் மூக்கை சிந்தி சிந்தி, மூக்கற்ற 'மூலியரசு' ஆகும் அபாயத்துக்கு இந்தியா ஆளாவதை யாரால் தான் தாங்க முடியும்?
இந்நிலையில், கத்தோலிக்க மத தலைவருக்கு இந்திய அரசின் துக்க அறிவிப்பா என கேள்வி எழுந்த பின் தான் தடுக்கி விழுந்த சொரணையே வந்து, அவசர அவசரமாய், 'பாப்பரசர் வாடிகனின் தலைவர் என்ற முறையிலேயே இந்த துக்கம்' என சோகம் வடிய மேலே ஒட்டியிருந்த தூசியை துடைத்துக்கொண்டது இந்திய நடுவனரசு.
பின்னர் தான் நாசியை அடைத்தது, தூசியை துடைத்த 'கை'யிலிருந்த அசிங்கம் - இந்திய அரசாங்க உடலெல்லாம் ஒட்டிக்கொண்டு.
அந்த அசிங்கத்தை, "பாப்பரசர் வாடிகனின் தலைவர் என்றால், அவரை தேர்ந்தெடுக்க மூன்று பேராயர்கள் இந்தியாவிலிருந்து சென்று வாக்களித்தனரே, அவர்கள் சுதேசிகளா அல்லது வாடிகன் பிரஜைகளா?" என, சுட்டிக்காட்டியு(கேட்டு)ள்ளார் குருமூர்த்தி.
எப்படியோ,
குருமூர்த்தி கோத்திரங்கள் மனித உரிமை பற்றி பேச வைக்க ஒரு மட தலைவர் காராகிருகம் செல்ல வேண்டியிருந்தது - அப்போது.
அவர்கள் மதச்சார்பின்மை பற்றி குரல் கொடுக்க வைக்க ஒரு மத தலைவர் தேவலோகம் செல்ல வேண்டியிருந்தது - இப்போது.
இப்படியே, பெண்ணுரிமை, சாதி மறுப்பு, சமத்துவம் பற்றியும் இவர்களை பேசவைக்கும் ஏதோவொன்று விரைவில் நடக்க, யாராவது யாகம் வளர்த்து, வேள்வி நடத்தி, சமஸ்கிருத மந்திரம் முழங்கியபடியே அதனுள் குதித்தால், அவர்களை நாம் பாராட்டலாம்.
9 Comments:
Test for Thamizmanam
//குருமூர்த்தி கோத்திரங்கள் மனித உரிமை பற்றி பேச வைக்க ஒரு மட தலைவர் காராகிருகம் செல்ல வேண்டியிருந்தது - அப்போது.
அவர்கள் மதச்சார்பின்மை பற்றி குரல் கொடுக்க வைக்க ஒரு மத தலைவர் தேவலோகம் செல்ல வேண்டியிருந்தது -இப்போது.//
கலக்கலான பதிவு. இந்த மாதிரியான ஆட்கள சுட்டி எழுதுவது மிக முக்கியம். நன்றிகள்.
//யாராவது யாகம் வளர்த்து, வேள்வி நடத்தி, சமஸ்கிருத மந்திரம் முழங்கியபடியே அதனுள் குதித்தால், அவர்களை நாம் பாராட்டலாம்.//
:-) அப்படியே தன்னை நக்கிக் கொள்ளாமல் ஒரு கும்பலையே நக்கும் நாயல்லாததையும் அந்த யாகத்தில் தூக்கிப் போட்டு விடலாம் ;-)
Superb! Need of D hour ;)))
//அது வாழை இலையோ, வெறும் மண் தரையோ// :-)))
குருமூர்த்தியெல்லாம் படிக்கையில் உங்களுக்கு அப்படியே சிலிர்த்துக்காதா?
பாலாஜி-பாரி, புதியவன், சுதர்சன், ntmani, Anonymousகள், வாசித்து, பராட்டியமைக்கு, வந்து வாசித்த மற்ற அனைவருக்கும் நன்றி!
நந்தலாலா
Nice
//சுத்த 'ஹி'ந்தியன் குருமூர்த்தி// ???
Post a Comment
<< Home