Get Nandalaalaa atom feed here!

Thursday, May 05, 2005

வேதகால நீதிபதி!

டெல்லி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த ஒரு ஆண் ஊழியர், அங்கே இரவுப்பணியிலிருந்த செவிலியின் கண்ணை தோண்டியெடுத்து, பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை தானே திருமணம் செய்து கொண்டு வாழ்வளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூற, அதை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தை கேட்டுள்ளார்.

அப்பெண் இதை ஏற்க மறுத்துவிட, ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, அப்பெண் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தால், தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்குமா?

இந்திய குற்றவியல் சட்டத்தில் அதற்கு இடமுண்டா?

அவ்வாறு இல்லையெனில், நீதிபதியின் செய்கை சரியா?

இவர் சட்டம் படித்து வந்தவரா, இல்லை வேதம் படித்து நீதிபதியானாரா?

18 Comments:

At Thu May 05, 04:33:00 AM 2005, Blogger Thangamani said...

ஒரு கணவன் எல்லாக் கொடுமைகளும் செய்வதற்கு லைசன்ஸு வழங்கப்பட்டிருப்பது கண்கூடு. கணவனாகப் போகிறவனுக்கும் (விரும்புகிறவனுக்கும்) அவ்வுரிமையை தரவிரும்பினார் போலும்.

 
At Thu May 05, 04:47:00 AM 2005, Blogger Muthu said...

பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் தண்டனையின் அளவைக் குறைக்க முடியும் என நீதிபதி எண்ணியிருக்கலாம், அதற்காக தீர்ப்புக் கூறுவதற்கு முன்னால் அப்பெண்ணின் கருத்தைக் கேட்டிருக்கலாம். நாம் ஏன் இன்னும் கொஞ்சம் நேர்மறையாய் யோசிக்கக் கூடாது.

 
At Thu May 05, 05:00:00 AM 2005, Blogger பத்மா அர்விந்த் said...

எனக்கென்னவோ அந்த பெண்ணின் எதிர்காலத்தை உத்தேசித்து நீதிபதி கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. புலியானாலும், சமூகத்தின் கொடுமைகளைவிட அந்தமிருகத்துடன் வாழ்வது பரவாயில்லையோ என்று நினைத்திருப்பார். இந்துமதியின் பைசா நகரத்துக் கோபுரங்கள் என்ற கதையில் இதுபோல முடிவு வரும்

 
At Thu May 05, 07:52:00 AM 2005, Blogger Moorthi said...

அந்த பொண்ணுக்கு வாழ்வு கெடைக்குமேங்கிற மனிதாபிமானத்தோட பேசி இருக்கிறார் நீதிபதி.

 
At Thu May 05, 11:54:00 AM 2005, Blogger புதியவன் said...

//அந்த பொண்ணுக்கு வாழ்வு கெடைக்குமேங்கிற மனிதாபிமானத்தோட பேசி இருக்கிறார் நீதிபதி.//

இதுவா வழ்வு?
இதுவா மனிதாபிமானம்?

அப்ப கற்பழிப்புக்கு கல்யாணம்தான் தன்டனைனு புதுசா சட்டம் போட்டுவிடலாம்.

 
At Thu May 05, 01:05:00 PM 2005, Anonymous Anonymous said...

the judge should go by the law not by his whims and fancies.there is no provision in law to reduce the punishment even if the woman had agreed to marry him, the accused.even if one accused in a corruption case agrees to return to govt. the money he received or part of his wealth there is no provision to reduce the sentence.
in fact law requests that such assets are seized from a person convicted in corruption cases.the
punishment is given as corruption is a crime against society, not a
dispute between two persons.
there is a huge difference between civil and criminal cases.
law recognises some acts as crimes against society, not just against an individual.so rape is a crime against society.
Hence the views of muthu,thenthuli and murthy are wrong and misleading.if a husband has intercourse forcibly with his wife that is also an offence under law.the husband is not above law.
the judge should have gone ahead
irrespective of the proposal by the accused.it is quite likely indumathi does not know law.perhaps she wanted to give a new twist to story at the end.

wichita

 
At Thu May 05, 01:38:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

ntmani, முத்து, தேன்துளி, மூர்த்தி, புதியவன், wichita உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

பின்னூட்டங்கள் குறித்த என் கருத்தை சற்று நேரத்தில் பதிகிறேன்.
நந்தலாலா

 
At Thu May 05, 02:58:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

தேன் துளி,
//புலியானாலும், சமூகத்தின் கொடுமைகளைவிட அந்தமிருகத்துடன் வாழ்வது பரவாயில்லையோ என்று நினைத்திருப்பார்//

இப்படி நினைப்பது, ஆணதிக்கத்தை மறுப்பின்றி ஏற்றுக்கொண்ட, விழிப்புணர்வு அற்ற, (பெரும்பான்மை) இந்திய பெண்களுக்கு இருக்கக்கூடும். இதுவே ஒரு நீதிபதிக்கு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

//இந்துமதியின் பைசா நகரத்துக் கோபுரங்கள் என்ற கதையில் இதுபோல முடிவு வரும்//

ஒரு கதையில், இந்துமதி அப்படி எழுதியதற்காக, இதை ஒரு புதிய சமூக நீதியாக ஏற்க முடியுமா?

மூர்த்தி,
//மனிதாபிமானத்தோட பேசி இருக்கிறார் நீதிபதி//

இங்கே மனிதாபிமானம் என்றால் என்னவென்பதும், இதில் எங்கே இருக்கிறது என்பதும் எனக்கு புரியவில்லை.

wichita,
மிக அருமையான பின்னூட்டம். நன்றி.

தனி நபர்களுக்கு இடையேயான சச்சரவையும், சமுதாயத்திற்கு எதிரான கொடுமையையும் பலராலும் எப்படி வேறுபடுத்தி பார்க்க முடியாமல் போகிறது என்பது விந்தையே. முன்னதில் சமரசம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது மட்டுமே.

சமூக குற்றமிழைத்த ஒரு நபருக்கு, ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாய்ப்பை வழங்கிய நீதிபதி, இந்திய நீதித்துறையில் மிகுந்துள்ள களைகளில் ஒருவரே.

இந்த நீதிபதியின் செயல் பெரும்பான்மையால் ஒரு தவறாகவே பார்க்கப்படாது என்றே நினைக்கிறேன்.

இங்கே உள்ள சமூக அமைப்பு, திருமணம் என்பதை, பாலியல் உறவின் தொடக்கமாக முன்னிருத்தியும், அவற்றை புனிதப்படுத்தியும் வைத்திருப்பதின் விளைவாகவே இந்த நிலை என்று தோன்றுகிறது.

இதன் காரணமாகவே, வேலைக்கு செல்லும் பெண்கள், விதவை பெண்கள் குறித்த, கண்டிக்கத்தக்க, கருத்துருவாக்கங்கள் வெளிவருகின்றன.

 
At Fri May 06, 09:48:00 AM 2005, Blogger Badri said...

நந்தலாலா: இன்றைய செய்தி ஒன்றின்படி மும்பையில் நடந்த மற்றுமொரு வன்புணர்வு வழக்கில் நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்க, அவர் வன்புணர்ந்தவர் தன்னை மணந்துகொள்ள சம்மதம் தெரிவித்தால் தான் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூற, வன்புணர்ந்தவரும் அதற்கு ஒப்புக்கொள்ள, அவர் மீதான வழக்கு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.hindu.com/2005/05/06/stories/2005050615281200.htm

விசிதாவின் பின்னூட்டம் உளறல். குற்றங்களில் பலவகைகள் உண்டு. சில குற்றங்களை அரசு/State குற்றம் செய்தவர் மீது சாட்டும் (எ.கா: கொலை, பொதுப்பணத்தைக் கையாடல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், தெச துரோகம்...). மற்றும் சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட தனி நபர்கள் குற்றவாளி என்று தாங்கள் கருதுபவர் மீது குற்றம் சாட்டுவர். இரண்டிலும் குற்றம் சாட்டுபவர் தன் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கேட்டுக்கொண்டால், வழக்கு நிறுத்தப்படும். குற்றம் சாட்டப்படுபவர் குற்றவாளியில்லை என்று அறிவிக்கப்படுவார்.

ஆனால் அரசு கொண்டுவரும் வழக்கை மிகவும் எளிதாகத் திரும்பப் பெற முடியாது. பப்ளிக் பிராசிக்யூட்டர் ஏன் அந்த வழக்கைத் திரும்பப் பெறுகிறார் என்று பலரும் கேள்வி கேட்க முடியும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் வழக்கைத் திரும்பப் பெறும் அதிகாரம் அரசு வழக்கறிஞருக்கும், அரசுக்கும் கூடக் கிடையாது. அந்தச் சலுகை இப்பொழுது நீதிமன்றத்துக்குப் போய்விடும்! இதனால்தான் வைகோ மீதான பொடா வழக்கு திரும்பப் பெறமுடியாத நிலையில் உள்ளது.

ஆனால் தனியார் கொண்டுவரும் வழக்கை எந்நேரத்திலும் திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும்! அதிகபட்சம் நீதிமன்றம் வழக்கைத் திரும்பப்பெற்ற தனியார் மீது அதிருப்தி தெரிவித்து (நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக) அபராதம் போடலாம்.

 
At Fri May 06, 07:54:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

பத்ரி,
இந்த செய்தியை பார்த்த பின் சட்டத்தில் வன்புணர்வு எந்த வகை குற்றத்தின் கீழ் வருகிறது என்பது குறித்த என் குழப்பம் அதிகமாகிறது.

கொலை குற்றம் நிறூபிக்கப்பட்டவர் எப்படி தண்டனையிலிருந்து தப்ப முடியாதோ, இதுவும் அப்படித்தான் என நினைத்திருந்தேன். wichita-ம் ஏறக்குறைய அதைத்தான் எழுதியிருந்தார்.

நானறிந்த வரையில் சில அரேபிய நாடுகளின் (ஷரியா)சட்டங்கள் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு, கொலையாளியை மன்னிக்கும் உரிமையை தந்திருக்கின்றன.

மரண தண்டனை, அதிலும் குறிப்பாக பொது இடத்தில் கல்லால் அடித்து கொல்வது, வன்புணர்வுக்கு திருமணத்தை தீர்வாக வைப்பது இதையெல்லாம் காட்டுமிராண்டி வாழ்வின் எச்சமாகவே நான் காண்கிறேன்.

வெறும் குற்றச்சாட்டு என்ற நிலையில், பின் வாங்குவதை அனுமதிப்பது அல்லது அபராதம் விதிப்பது என்பது வேறு.

வன்புணர்வு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அதை ஒரு தனிப்பட்டவருக்கு எதிரான குற்றமாக குறுக்குதல் தவறு என்பதே என் நிலை.

இந்திய குற்றவியல் சட்டத்தின் குருட்டுத்தனத்தை விட்டுவிட்டு, அதை நடைமுறை படுத்திய ஒரு அரசாங்க ஊழியனை போய் கண்டிப்பதால் என்ன பலன் விளையப்போகிறது?

இவ்விதயத்தில் அந்த நீதிபதியை சுட்டியது என் அறியாமையால் விளைந்த தவறு.

சுட்டிக்கும், செய்திக்கும் நன்றி பத்ரி.

நந்தலாலா.

 
At Fri May 06, 11:06:00 PM 2005, Blogger wichita said...

நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை கருத்தில் கொள்ளாமல் ஏதாவது சொல்லிவிட்டு அப்புறம் நான் எழுதியது உளறல் என்று கூறியிருக்கிறார் பத்ரி.அவர் ஒரு செய்தியை சுட்டிக்காண்பிக்கிறார். என் பின்னூட்டம் அச்செய்தி வெளியாகும் முன் இடப்பட்டது. அந்த வழக்கு குறித்த அவரது கருத்து என்னவோ.
ஒருவேளை வன்புணர்ச்சி என்பது இரண்டு தனி நபர்களுக்கிடையே நடந்த விஷயம்.ஆகவே அந்தப் புகாரை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம் என்பது அவர் கருத்தா.

ஒருவேளை வன்புணர்ச்சி என்பது இரண்டு தனி நபர்களுக்கிடையே நடந்த விஷயம்.ஆகவே அந்தப் புகாரை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம் என்பது அவர் கருத்தா. அவர் சுட்டிக்காட்டும் செய்தி அவர் மீதான வழக்கு திரும்பப்பெறப்பட்டது என்று கூறவில்லை. செய்தி முழுமையாக இல்லை.இந்தச் செய்தியைக் கூறியிருப்பவர் பப்ளிக் புராசிகியுட்டார். எனவே இது தனி நபர் புகார் கொடுத்து பின் அதை திரும்பப் பெறும் வழக்கல்ல.i would like to point out that
acquiited is different from case being withdrawn.

 
At Fri May 06, 11:09:00 PM 2005, Blogger wichita said...

http://www.hindu.com/2005/05/05/stories/2005050516731200.htm

 
At Fri May 06, 11:10:00 PM 2005, Blogger wichita said...

http://www.hindu.com/2005/05/05/stories/2005050516731200.htm

 
At Fri May 06, 11:10:00 PM 2005, Anonymous Anonymous said...

http://www.hindu.com/2005/05/05/stories/2005050516731200.htm

 
At Fri May 06, 11:34:00 PM 2005, Anonymous Anonymous said...

.

 
At Fri May 06, 11:54:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

விசிதா, பத்ரி,

//MUMBAI: A Sessions court here has acquitted an accused in a rape case after he agreed to marry the victim.//

//He said the acceptance of such a proposal would set a wrong precedent in society.// என டெல்லி வழக்கறிஞர் கூறியுள்ளதற்கு எதிர்மறையாக ஒரு தீர்ப்பு மும்பை வழக்கில் வெளியாகியுள்ளது.

இதன்படி, //acquitted an accused// இவர் மீதான குற்றம் இதுவரை நிறுபனம் ஆகவில்லை என கொள்வதா? அதனால் விடுவிக்கப்பட்டாரா?

டெல்லி வழக்கில், குற்றம் நிறூபிக்கப்பட்டதாக கூறி, தீர்ப்பை தள்ளி வைத்த நிலையில் தான், குற்றவாளி திருமணம் செய்து கொள்வது பற்றி தெரிவித்து இருக்கிறார். முதலில் அதை பரசீலிக்க வாய்ப்பளித்த நீதிபதி, அந்த பெண் மறுத்தவுடன், தனது தீர்ப்பில் இது குற்றவாளியின் தப்பிக்கும் நோக்கமே, நேர்மையானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்திலிருந்து தப்பவேண்டிய நோக்கம் என்று தெரிந்த பின்னும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கிய காரணமென்ன?

ஒரு வேளை சட்டப்படி நீதிபதி அதை தான் செய்ய வேண்டுமா?

குழப்பம் கூடுதலாகிறது.

 
At Sat May 07, 07:47:00 AM 2005, Blogger Badri said...

சில விளக்கங்கள்:

இங்கு இரண்டு வழக்குகள் பற்றிப் பேசுகிறோம். இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றிய என் கருத்து வேறு. சட்டம், அதன் நடைமுறை பற்றிய என் கருத்துகள் வேறு. பிறர் கொடுத்த பின்னூட்டங்கள் பற்றிய என் கருத்து வேறு. இதைப் புரிந்துகொண்டு விவாதத்துக்குள் சென்றால் நன்றாக இருக்கும்.

மாடர்ன் கேர்ல் என்றொரு அனானிமஸ் முண்டம் தன் பதிவில் ஏதோ உளறித் தொலைத்திருக்கிறது.

====

முதலில் நான் மேற்கோள் காட்டிய தி ஹிந்து செய்தி எதற்கு என்றால் நீதிபதிகள் வன்புணர்வு வழக்குகளில் பெண் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள் என்பதே. அதாவது அப்படிக் கேட்பதே தவறு என்றும், முதல் வழக்கின் (கண் தோண்டிய வழக்கு) நீதிபதி மட்டும் அப்படி நடந்துகொண்டார் என்பது போலவும் எழுதியுள்ளதற்காக நான் இதைக் கவனத்தில் கொண்டுவந்தேன்.

அடுத்தது - இரண்டு வழக்குகளும் ஒன்று போலத் தெரியவில்லை. வன்புணர்வுக் குற்றங்கள், ஒருவன் மற்றவளை அடிப்பது, உடலுக்குத் தீங்கு விளைவிப்பது போன்றவை அரசால்தான் கையாளப்படுகின்றன.

இரண்டாவது வழக்கில் அதுபோன்று எதுவும் நிகழவில்லை. சொல்லப்போனால் அந்தப்பெண் இவன் தன்னை மணந்துகொள்ளப்போகிறான் என்றே நினைத்திருக்கிறாள். உடலுறவுக்குப் பின்னர் அவன் ரூ. 500ஐக் கொடுத்து கழட்டிக்கொள்ளப் பார்த்திருக்கிறான். அப்பொழுதுதான் அவளுக்குத் தான் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்துள்ளது. அவன் தன்னை 'வன்புணர்ந்தான்' என்று அவள் வழக்கு பதிவு செய்துள்ளாள் என்று தோன்றுகிறது.

ஆக இது சரியான வன்புணர்வுக் குற்றமாக இருக்குமா என்றே சந்தேகமாக இருக்கிறது. "ஏமாற்றி உடலுறவு கொள்வது" என்பதும் ஒருவேளை இந்தியாவில் வன்புணர்வுக் குற்றங்களுக்குள் வரலாம். இதே நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்திருந்தால் இதற்கு எந்தவித தண்டனையும் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

அதனால் இந்த வழக்கு தனியான இரண்டுபேர் விவகாரம். ஆனால் வன்புணர்வுக் குற்றமாகப் பதிவு செய்துள்ளதால் அரசுதான் எடுத்து தன் வழக்கறிஞர் மூலம் நடத்தியிருக்க்கும். ஆனாலும் இங்கு வழக்கு முழுமையாக அந்தப் பெண்ணின் சட்சியத்தில் பேரிலும், விருப்பத்தின் பேரிலும்தான் இருக்கிறது.

இங்கு அரசின் பிரதான சாட்சியான பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பம் அந்த ஆணுடன் திருமணம் செய்துகொள்வதுதான். அதை அவர் விரும்பிக்கேட்டதும், அதற்கு அந்த ஆண் ஒப்புக்கொண்டதும், நீதிபதி வழக்கை நிச்சயமாக இழுத்து மூடிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.

 
At Sat May 07, 01:40:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

விளக்கத்துக்கு நன்றி பத்ரி.
இப்படியானதொரு சட்ட நடை முறை அனைவராலும் கண்டிக்கப்படும் என்றே நினைக்கிறேன்.

 

Post a Comment

<< Home