Get Nandalaalaa atom feed here!

Tuesday, May 17, 2005

தினமணி: வாலறுந்த நரியின் ஊளை.

வர்ணாசிரமம் என்பது வெறும் புனைவில்லை. ஒரு "பரிணாம மானுடவியலார்" நூறு ஆண்டுகளுக்கு முன்பே "வியப்பூட்டும்" இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மனித இனம் நான்கு வர்ணங்களாக பிரிந்திருக்கின்றன.
இதற்கு வேத சாஸ்திரமோ, மதமோ காரணமில்லை.

இப்படி சொல்கிறார் ஆஸ்திரிய நாட்டு பரிணாம மானுடவியலார் ஹஸ்கி.

"மனித இனத்தின் பரிணாமப் போக்கின் காரணமாகவும், மரபுக் காரணிகளாலும் அது ஏற்பட்டது" என அறுதியிட்டு கூறி "அந்த பாகுபாட்டை நிலைப்படுத்துவதில் ஜீன்களும் முக்கியமான பங்கு பணியாற்றியுள்ளன" எனவும் உறுதிப்படுத்துகிறார் திரு. கே.என்.ராமச்சந்திரன் என்பவர், தினமணியில் இது பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையில்.

"அந்த நிலை கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது"

600 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பிரிவினை இருந்ததற்கு ஆதரம் உள்ளது போல் போகிறது இந்த கட்டுரை.
"மக்கள் பிற நாடுகளுக்குக் குடிபெயர்வது அதிகமான பிறகே ஜீன் கலப்பும் வர்ணக் கலப்பும் ஏற்பட்டு அந்தப் பிரிவினை கண்ணுக்குப் புலப்படாமல் போய்விட்டது."

பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் மிகப்பெரிய விந்தை இது. அதை யாருமே இதுவரை கண்ணுறாதது அதைவிட மேலான ஒரு விந்தை.

மரபணுவின், வேறு ஏதேனும் ஒரு பண்பு, இதைப்போல வெறும் 600 வருடங்களில் காணாமல் போனதாக ஏதாவது ஒரு நிரூபணம் இருக்கிறதா?
முக்காடில்லா முழுப் பொய்யை, இப்படி ஒரு திரிப்பை எழுத இவரைத் தவிர வேறு யாரால் முடியும்?

"ஆனாலும் சில சமூகங்களின் ஒட்டுமொத்தமான நடத்தைகளையும் குணாதிசயங்களையும் ஆழ்ந்து பரிசீலிக்கிறபோது அந்த வர்ணாசிரமப் பிரிவுகளின் பிறவிப் பண்புகளின் கூறுகளை அடையாளம் காண முடிகிறது என்று ஹஸ்கி கூறுகிறார்."


எந்தெந்த சமூகம்?
என்னவிதமான நடத்தைகள் பரீசிலிக்கப்பட்டன?
ஆழ்ந்து பரிசீலிக்கிறபோது - எப்படி?
எந்த தகவலும் இல்லை!

"ஆனாலும் டார்வினின் பரிணாமக் கொள்கைகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்னால் லாமார்க் என்ற பிரஞ்சு விஞ்ஞானியும் லைசங்கோ என்ற ரஷிய விஞ்ஞானியும் வெளியிட்ட தவறான மரபியல் கருத்துகள் ஓரளவுக்கு ஹஸ்கியின் கருத்துகளை ஆதரிப்பவையாக இருந்தன. மெண்டல் தாவரங்களில் மரபு மாற்றங்களை ஏற்படுத்தி உயர் ரகத் தாவரங்களை உருவாக்கியதைப் போல மனிதர்களிலும் அதே போன்ற உத்திகளைப் பயன்படுத்தி உயர்தரமான மனிதர்களை உருவாக்க முடியுமென்று லைசங்கோ வாதித்தார்."


புல்லரிக்கவில்லை உங்களுக்கு?
லாமார்க் மற்றும் லைசங்கோவின் தவறான மரபியல் கருத்துக்களை, அதுவும் ஓரளவே ஒத்துப்பொனதை வைத்து ஹஸ்கியால் புனையப்பட்ட ஒரு கற்பனைக்கு, இவர்கள் புது விளக்கம் ஒன்றை இப்போது தருவதேன்?

"ஜெர்மனியில் நாஜி கட்சியினர் மற்ற மனித இனங்களை விட ஜெர்மானியர்கள் உயர்தரமானவர்கள் என்று பிரசாரம் செய்து இனத்துவேஷ நச்சைப் பரப்பியதற்கும் ஹஸ்கியின் கொள்கையும் ஓரளவுக்குக் காரணமாய் அமைந்தது."


600 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து போன ஒன்று, எப்படி சென்ற நூற்றாண்டில், மறுபடி திடுமென தலைக்காட்டியது? இப்படி கேட்டால் அது பசப்பு பகுத்தறிவாதமாக இவர்களுக்கு தோன்றும்.

இனத்துவேஷ நச்சை பரப்ப உதவிய கொள்கையென்று இதை ஒப்புக்கொள்ளும் ஒன்றை, மீண்டும் இவர் கட்டியெழுப்ப காரணமென்ன? கொஞ்சமாய் புரிகிறதா? பனிக்கட்டி முனை தான் இது.

சரி ஹஸ்கியின் நால் வர்ணம் என்பது என்ன?
அதை அடுத்து விளக்குகிறார்.

[முதல் வர்ணம்:]
"ஹஸ்கியின் கருத்துப்படி கிரீஸ், மெசபடோமியா, கங்கைச் சமவெளி, பாபிலோன் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பில் வசித்த மக்கள் கல்வி கேள்விகளிலும் நுண்கலைகளிலும் சிறந்தவர்களாயும் மூளைத் திறனும், சிந்தனைத் திறனும், நுண் மாண் நுழைபுலனும் மிக்கவர்களாயுமிருந்தனர். உலகின் முதன்மையான மதங்களும் சித்தாந்தங்களும் தத்துவ விசாரணைகளும் அறிவியல் கருத்துகளும் அப்பகுதியில் தான் உருவாயின. அப்பகுதி மக்கள் உலகின் ஆசிரியர்களாகவும் நெறியாளர்களாகவும் இலக்கியப் படைப்பாளிகளாகவும் விளங்கினார்கள். அவர்களைப் பேரறிவாளர்கள் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார்."


[இரண்டாம் வர்ணம்]
"மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வசித்த நார்மன்களும் ஆங்கிலோ சாக்சன்களும் வைக்கிங்குகளும் தென் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்த மங்கோலியர்களும் போர்க்குணமும் முரட்டுத்தனமும் மிக்கவர்கள். சதாசர்வ காலமும் பிற நாடுகளின் மேல் படையெடுப்பதும் கொள்ளையடிப்பதுமே அவர்களுடைய வாழ்வியல் நெறி. அவர்களை ஹஸ்கி கொள்ளையர்கள் எனக் குறிப்பிடுகிறார்."


[மூன்றாவது வர்ணம்]
"கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சீனா, கொரியா, இந்தோசைனா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் வசித்த மக்கள் விவசாயம், வர்த்தகம், கைவினைத் தொழில்கள் ஆகியவற்றில் முனைப்புடனிருந்தார்கள். இன்றளவும் கூட அப்பகுதிகள் விவசாய உற்பத்தியிலும் கைவினைப் பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகின்றன. அவர்களை ஹஸ்கி உற்பத்தியாளர்கள் என வகைப்படுத்துகிறார்."


[நான்காம் வர்ணம்]
"கறுப்பின மக்களும் ஜிப்சிகளும் நான்காவது வர்க்கம் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார். அவர்களுக்குக் குறைவான மூளைத்திறனும் செயல்திறனும் அமைந்துள்ளன. அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதில் தவறேயில்லை. உண்மையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பும் நன்மையும் அளிப்பதுதான். ஆப்பிரிக்கர்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்து அமெரிக்காவில் அடிமைகளாக விற்றுக் கொண்டிருந்த அரபுகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அது சாதகமான கருத்து. விலங்கு நிலையில் இருந்த கறுப்பர்களை மேம்படுத்தி மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய வைப்பது மத சம்மதமுள்ளதே என்று அவர்கள் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டார்கள். அமெரிக்க ஜனநாயக வாதிகள்கூட கருப்பர்களை அடிமைகளாக வைத்திருப்பதிலும் அவர்களை ஆடு மாடுகளைப்போல விற்பதிலும் வாங்குவதிலும் குற்ற உணர்வு கொள்ளவில்லை. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஷாக்லி கூடக் கறுப்பர்களுக்கு மந்த புத்தி எனவும் அவர்களுக்குப் படிப்போ, தொழில் நுட்பப் பயிற்சியோ அளிப்பது வீண் என்றும் சொன்னார்."


இந்த நான்கு பிரிவுகளிலும், இந்திய துணைக்கண்டம் பற்றி ஒரு இடத்தில் வெளிப்படையாக வருகிறது. அது கங்கை சமவெளியில் வாழ்ந்தவர்கள் பற்றி. அவர்களை முதல் வர்ணம் என்றும், அங்கே "வசித்த மக்கள் கல்வி கேள்விகளிலும் நுண்கலைகளிலும் சிறந்தவர்களாயும் மூளைத் திறனும், சிந்தனைத் திறனும், நுண் மாண் நுழைபுலனும் மிக்கவர்களாயுமிருந்தனர். உலகின் முதன்மையான மதங்களும் சித்தாந்தங்களும் தத்துவ விசாரணைகளும் அறிவியல் கருத்துகளும் அப்பகுதியில் தான் உருவாயின." என்றும் எழுதியாயிற்றா?

இந்தியாவின் மற்ற பகுதிகள்?
அவை அனைத்தையும் நான்காவது வர்ணத்தில் சேர்க்கிறார்.
கறுப்பின மக்களும் ஜிப்சிகளும் நான்காவது வர்க்கம் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார்
இந்தியாவின் மற்றவர்கள்? கருப்பர்களும், ஆதிவாசிகளும்.
இவர்களின் குணமாக கூறப்படுவது:
அவர்களுக்குக் குறைவான மூளைத்திறனும் செயல்திறனும் அமைந்துள்ளன

இவர்களை என்ன செய்வது என்றும் கூறுகிறார்:
அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதில் தவறேயில்லை. உண்மையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பும் நன்மையும் அளிப்பதுதான்.

இவர்களை அடிமைப்படுத்தி மலம் அள்ள வைப்பதில் என்ன தவறிருக்க முடியும்?
அது தானய்யா அவர்களுக்கு பாதுகாப்பு என்கிறார்.
பனிக்கட்டி பாதி தெரிகிறதா இப்போது?

"ஜனநாயக வாதிகள்கூட கருப்பர்களை அடிமைகளாக வைத்திருப்பதிலும் அவர்களை ஆடு மாடுகளைப்போல விற்பதிலும் வாங்குவதிலும் குற்ற உணர்வு கொள்ளவில்லை"

இப்படி காலங்காலமாய் நடந்தேறிய வன் கொடுமையை, நடத்திய கூட்டத்துக்கு எந்த குற்ற உணர்வும் தேவையில்லை. அப்படி குற்ற உணர்வு இல்லாவிட்டால் தானே, மேலும் மேலும் அடிமைப்படுத்தி மலம் தின்ன வைக்க முடியும்.

அதுவும் மலத்தை தன் கையால் தொடுவதா?
மலத்தை திணிக்க ஒரு சாதி, திண்ண ஒரு சாதி.
இவர்களுக்கு தனித் தனி வீதி.

போதுமா?
பனிக்கட்டி மனுவின் கொள்கைகளாக வெளிப்பட்டு விட்டனவா?
இதை மத வாதி சொன்னால் தானே எதிர்ப்பீர்கள்?

"டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஷாக்லி கூடக் கறுப்பர்களுக்கு மந்த புத்தி எனவும் அவர்களுக்குப் படிப்போ, தொழில் நுட்பப் பயிற்சியோ அளிப்பது வீண் என்றும் சொன்னார்."

ஷாக்லி கண்டுபிடித்தது டிரான்சிஸ்டர். அவர் ஒரு மின்னணுவியல் விஞ்ஞானி. நோபெல் பரிசு பெற்றவர் தான். அதனால் அவரின், தன் துறை சம்பந்தப்படாத "பரிணாம மானுடவியல்" குறித்த உளரல்கள் எல்லாம் விஞ்ஞான அந்தஸ்தை பெற்று விடுமா?

நிற்க. இங்கே மேற்படி குலக்கல்வி திட்டமே அதிகப்படிதான் என்பதை இப்போதாவது ஒப்புக்கொள்வீரா?

இது சந்தேகமற நிருவப் பட்ட விஞ்ஞான உண்மைபோல் இவர் கூறும் இந்த கருத்துக்கு ஆதாரம் தான் என்ன?

இந்த ஹஸ்கியின் ஆராய்ச்சிகள் எந்தளவு நிரூபனம் ஆகியுள்ளன?

அதை புரட்டுரையாளர் தன் இறுதி பத்தியில் கூறுகிறார்: "ஹஸ்கிக்கு ஜீன்களை பற்றி முழுமையான அறிவு இல்லை. பிறவிக்குணங்களுக்கு மரபுக்காரணிகள் காரணமாவதை அவரால் உறுதியாக நிரூபிக்க முடியவில்லை."

உறுதி படுத்த முடியாததை தான் இந்த புரட்டுரையாளர் முதலில் "மனித இனத்தின் பரிணாமப் போக்கின் காரணமாகவும், மரபுக் காரணிகளாலும் அது ஏற்பட்டது" என எழுதுகிறார். தினமணியும் அதை அப்படியே பிரசுரிக்கிறது.

"ஆனால் ஹஸ்கியின் கருத்துகள் மற்ற அறிஞர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. கடுமையான பரிசோதனைகள் மூலம் அவற்றைச் சரிபார்க்க முடியாததே அதற்குக் காரணம்."

ஆகா என்னே ஒரு நேர்மை?
ஆரம்பத்தில் ஒன்றை சொல்லி, இறுதியில் அதையே மறுத்து எழுதி தன் நேர்மையை மறு நிர்மானம் செய்ய முயலுகிறார்.

இடையில் முழுமையான விஷ விதைப்பையும் நடத்தி விடுகிறார். என்ன அந்த விஷ விதைப்பு?
அது தான் பனிக்கட்டியின் முழு வடிவம்.
அதற்கு முன்:

நிரூபனமாகாத, மறுக்கப்பட்ட கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட ஒரு அவதூற்றை, உளரலை, விஞ்ஞான உண்மை போல எழுத வேண்டிய கட்டாயம், இந்த புரட்டுரையாளருக்கு இருக்கலாம்.

இதை பிரசுரிக்க வேண்டிய அரிப்பு தினமணிக்கும் இருப்பதும் இப்போது மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.

இந்த புரட்டுரையின் இறுதி கருத்து என்ன தெரியுமா?
அது தான், இவர்களின் கட்டாயம், அரிப்புக்கான சொறிதல், எல்லாம்.

>2000 ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற இனத்தவர்களால் அடக்கி ஒடுக்கிக் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகும் யூதர்கள் தமது பேரறிவுத் திறனை இழந்து விடவில்லை. பெரும் எழுத்தாளர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளும் யூத இனத்தில் அதிகமாகத் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் உடலுழைப்பை விட அதிக அளவில் அறிவுத் திறனையே பயன்படுத்தி மேநிலைக்கு உயர்வார்கள்.


மேலே உள்ளவற்றில் யூதர்கள் என்பதை எடுத்துவிட்டு வேறொன்றை வைத்து பாருங்கள். புரிகிறதா?

"இன்னும் 2000 வருடங்கள் ஆனாலும் நாங்க அடங்க மாட்டொம்டா. யூதனுங்க போலடா நாங்க"ன்னு சொல்ல வர்றது புரியல?
இது தான் பனிக்கட்டியின் முழு வடிவம்.


விஞ்ஞானத்தின் வேரை வேதத்தில் காட்டி முட்டாளடிக்கும், சதியின் அடுத்த கட்டமாக, வேதம் கட்டப்பட்டுள்ள, அதன் அடித்தளமான விஷத்துக்கு விஞ்ஞான விளக்கம் தர முற்பட்டுள்ளன, இந்த வாலறுந்த நரிகள்.

வேதம் தந்த அதி அற்புத வர்ணாசிரம தத்துவ விஷம், விஞ்ஞான நிரூபனம் என்றாகி விட்டால் இதுகளுக்கு வேறு என்ன வேண்டும்?

சங்கர மட அதிபர்களை கைது செய்தும், குமுகாயத்திலிருந்து விரட்டியடிக்கப் பட வேண்டிய ஒரு அடிப்படைவாதியை, களையெடுக்கப்பட வேண்டிய பழமை தீவிரவாதியை "தூக்கில் போடு" என்ற குரல் மக்கள் மத்தியில் ஒலித்ததே தவிர அனுதாபமோ, கோபமோ மக்களிடம் எழவில்லை. மக்களிடம் கோபத்தை எதிர்பார்த்து ஏமந்த கோமாளி கூட்டம் இப்போது அவர்களின் மீது கண்டபடி மலம் அள்ளி வீசுகிறது.

ஐம்பதாண்டு மௌனம் காத்திருந்து, தங்களை யூதர்களாக கற்பனை செய்து, தமிழர்களை இனப்படுகொலை செய்த நாசி-களுடன் ஒப்பிட்டது ஒரு வஞ்சக நரி.

"பீடத்தில் ஞானத்தை அடகு வைத்து, விலையாக விருது பெற்ற" (நன்றி:நெல்லை கண்ணன்) நன்றி கொண்ற அவர்களின் அடிமை கழுதைப்புலி ஒன்று, சோறு போட்ட மக்களையே நாய்கள் என்பதாக சொல்லி, பிணம் தின்னும் தன் புத்தியை காட்டியது.

இப்போது ஊளையிட்டிருப்பது வாலறுந்த நரியா, அல்லது அதன் மற்றொரு அடிமை கழுதைப்புலியா என்பது தெரியவில்லை.

ஆனால் இதை வெளியிட்டு, வாலறுந்த புண்ணை நக்கிக் கொண்டுள்ளது தினமணி.

இடைத்தேர்தல் முடிவு புண்ணுக்கு மருந்தாகும் என எதிர்பார்த்தது நரிகளின் கூட்டம். ஆனால் மக்கள் மிளகாய் பொடியை தூவிவிட, இந்த புரட்டுரையை பிரசுரித்து ஆறுதல் தேடுகின்றன.


பின் குறிப்பு: இது ஒரு அவசர எதிர்வினை. இடைத்தேர்தல் முடிவுகளின் முழு விவரம் அறிய இன்று காலை இணையத்தை மேய்ந்த போது இந்த புரட்டுரை கண்ணில் பட்டு தொலைத்தது.

விபத்தின் பாதிப்பிலிருந்து முழுதும் மீளாத நிலையில், நேற்றிலிருந்து அலுவலகம் செல்ல தொடங்கிவிட்டேன். ஓய்வு எடுத்த காலத்துக்கும் சேர்த்து வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆறு மாதமாக எதிர்பாத்து காத்திருந்த ஒப்பந்தம் ஒன்று வேறு இன்று இறுதி செய்யப்பட்டது. எல்லாம் சேர்ந்து, எனக்கான தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொண்டுள்ளன. உணவு இடைவேளையை பயன் படுத்தி இப்பதிவை எழுதினேன்.(மாலை வலையேற்றிவிடுவேன்)

முன்பை போல அதிக நேரம் தமிழ்மணத்தில் செலவு செய்ய இயலாது என நினைக்கிறேன். முடிந்தளவு வாசிக்கவாவது தினம் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியுமா தெரியவில்லை.

தலாக் குறித்த பதிவிற்கு வந்த கருத்துக்களுக்கும், தனி பதிவுக்கும் பதிலளிக்க சிறிது காலமாகலாம். அதற்காக நண்பர்கள் மன்னிக்கவும்.
திண்ணை தலாக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. http://www.thinnai.com/pl0513057.html. அதில் வாசித்தவர்களும் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்பி வருகின்றனர். அனைத்துக்குமாக சேர்த்து என் கருத்தை பிறகு தெரிவிக்கிறேன்.


இந்தப்பதிவில் நான் சாடியுள்ளது வர்ணாசிரமத்தை, வர்க்க பேதத்தை, அதை நிரந்திரமாக்கிட துடிக்கும் கயவர்களையே அல்லாது எந்த ஒரு வர்ணமாகவும்/வர்க்கமாகவும் பிறரால், பிறப்பினால் அடையாளம் காட்டப்படுபவர்களை அல்ல. அப்படி பிறப்பை மட்டும் வைத்து, அவர்களின் தனி நபர் நிலைப்பாட்டை கருத்திலெடுக்காமல் ஒருவரை/இனத்தை முழுவதும் சுட்டினால், அதுவும் ஒரு வர்க்கபேதம் பாராட்டுதலே/ வர்ணசிரம அடியொற்றுதலே என்ற புரிதல் எனக்கு உண்டு. எனவே நண்பர்கள் அந்த தெளிவுடன் இதை வாசிக்கவும். நன்றி.



நன்றி http://www.suratha.com எழுத்துரு மாற்றி.
தினமணியில் கே.என்.ராமச்சந்திரன் கட்டுரை:

16 Comments:

At Tue May 17, 02:23:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

This comment has been removed by a blog administrator.

 
At Tue May 17, 03:29:00 PM 2005, Blogger Sri Rangan said...

நந்தலாலா,வணக்கம்!
மிக அற்புதமான பதிவு.
இதன் விஞ்ஞானத் தன்மைதாம் இதன்பலம்.உண்மையில் மிகக்கவனமாக அணுகப்பட்ட பதிவு.டார்வினது பரிணாமக் கொள்கையை மிக நேர்த்தியாக ஆய்வு செய்த உயிரியில்-விலங்கியல் பேராசிரியர் தோமஸ் வேபர் எனும் ஜெர்மனிய விஞ்ஞானி டார்வினை அண்மித்த அரியபல கருத்துக்களைத் தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளார்.அவரது நிறுவல் ஜெர்மனிய அரசினால் அங்கீகரக்கப்பட்டு புதிய பாடமாக ஏற்கப்பட்டுள்ளவேளையில் தங்கள் கருத்து இதனோடு அண்மிக்கிறது.நிச்சியமாக இந்த ஆய்வை(தோமஸின் ஆய்வை) எல்லோரும் கற்கவேண்டும்.எனவே அவரது நூல்களுக்கான-பதிப்பகத்தார் சுட்டியை இங்கே தருகிறேன்:www.fischer-kompakt.de இதில் பல்வகை ஆய்வுக்குரிய விவாதங்களை ஜெர்மனிய மொழியில் காணலாம்.அவரது ஆய்வைப் படிப்பதற்குDarwinismus-Thomas P.Weber-ISBN:3-596-15367-0, எனும் சர்வதேசக் குறியீட்டெண்ணில் கண்டுகொள்ளலாம்.Etienne Geoffroy St.Hilaire(1772-1844) கருத்து முதல்வாதியல்ல.இவர் லாமார்க்கை'பயங்கரவாதியென்றும் அவரது தத்துவத்தைக் பயங்கர கருத்துமுதல் வாதம்'என்றும் கூறினார்.எனினும் இவரும் ஆய்வுகளில் தவறிழைத்தபோது டார்வினே உரியமாதிரியான ஆய்வை முன்வைத்ததை தோமஸ் மிகநேர்த்தியாக முன்வைத்துள்ளார்.பிரான்சுக்கு வெளியில் லாமார்க் பயங்கரவாதியாகவே உணரப்படுகிறார். தங்கள் கட்டுரைக்குத் தோதான அறிவுக் குறிப்புகளுக்கு என்னிடம் ஆதாரத்தோடான உயிரியல் விஞ்ஞானத்தின் புதிய-பிரமிக்கத்தக்க ஆய்வுத் தரவுகளுண்டு.

 
At Tue May 17, 05:15:00 PM 2005, Blogger சுந்தரவடிவேல் said...

நல்ல பதிவு. 600 ஆண்டுகளுக்குள் மரபுப் பண்புகளெல்லாம் கலந்து காணாமல் போய்விட்டன என்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை. அந்த ஆசிரியரைப் (கே.என்.ஆர். ராவ் என்பவரா?)பற்றிச் சில தகவல்களைத் தேடிப் பின் விரிவான மறுமொழி அளிக்கிறேன்.

 
At Tue May 17, 05:42:00 PM 2005, Anonymous Anonymous said...

K. N. Ramachandran - All India General Secretary (CPIM - Red Flag)
Dr. K. N. Ramachandran, formerly an analyst of IDSA, has written articles on a wide range of issues which include Mao and "Maoism", Globalization, Revisionism and Social Democracy and Disinvestment. A firm believer of Communism, the knowledge of this man knows no bounds.
(http://gymkhana.iitb.ac.in/~ecell/avenues/main.php?pg=events/tug)

நீங்கள் சொல்லும் கெ.என்.இராமச்சந்திரனும் மேலே சொல்லப்பட்டுள்ள K.N ன்னும் ஒருவரே என்றால் நீங்கள் அவசரப்பட்டு திட்டிவிட்டீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 
At Tue May 17, 10:16:00 PM 2005, Anonymous Anonymous said...

//ஒருவரே என்றால் நீங்கள் அவசரப்பட்டு திட்டிவிட்டீர்களோ//
அதானே., குலம் கோதரமெல்லாம் பத்தில்ல திட்டணும். அவசரப்பட்டு நம்மாளையே திட்டிடீங்களே.

 
At Wed May 18, 02:44:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

சிரீரங்கன்,
நன்றி.
தாங்கள் கொடுத்திருக்கும் தொடுப்பு, ஜெர்மானிய மொழியில் உள்ளதால் என்னால் வாசிக்க முடியவில்லை.
மற்ற தகவல்களுக்கும் நன்றி.
நந்தலாலா

 
At Wed May 18, 02:49:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

சுந்தரவடிவேல்,
வந்து வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.
நந்தலாலா

 
At Wed May 18, 02:58:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

Anonymous,
(இது சுந்தரமூர்த்தியா?)
இந்த கே.என்.ஆர்.ராவ் தான் இக்கட்டுரையாளர் என்பதாக தெரியவில்லை.
ஒருவேளை, தினமணி அவரின் கட்டுரையை தணிக்கை, மாற்றங்களுக்கு உட்படுத்தியதா என்பதும் தெரியாது.
மற்றபடி, பிரசுரிக்கப்பட்டதற்கு தான் என்னுடைய எதிர்வினை என்பதை அறிக.
ஒரு வேளை தினமணி கட்டுரையின் கருத்தில் கை வைத்திருக்குமானால், அதை எழுதியவர்தான் அவ்வுண்மையை வெளிக்கொணர முடியும்.
நன்றி,
நந்தலாலா

 
At Wed May 18, 03:52:00 AM 2005, Blogger Sri Rangan said...

நந்தலாலா,நான் சிறீரங்கன்.சிரீ ரங்கன் அல்ல!
அடுத்து, கே.என்.இராமச்சந்திரன் சுமார் 35 வருடங்களாக அறிவியற் கட்டுரைகளை தினமணியில் எழுதிவருபவர்.இவரொரு இயற்பியல் பேராசிரியர்.அரியலூர் அரச கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.இவரது கட்டுரைகள் தொகுப்பாகவும் வந்திருக்கிறது.வானத்து அதிசயங்களெனும் தலைப்பில் இவரது கட்டுரைத் தொகுப்பை வானதிப் பதிப்பகம் 86 இல் வெளியிட்டது

 
At Wed May 18, 06:11:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

சிறீரங்கன்,
அவசர தட்டலினால் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறேன்.
கட்டுரையாளர் குறித்த மேலதிக தகவலுக்கு நன்றிகள்.
இவரின் எழுத்துக்கள் ஏதேனும் இணையத்தில் உள்ளதா?
நந்தலாலா

 
At Wed May 18, 06:42:00 AM 2005, Blogger Sri Rangan said...

என்.கே.இராமச்சந்திரன் அவர்கள் இணையத்தில் எழுதுவதில்லை.அவர் தினமணியில் மட்டுமே எழுதுபவர்.

 
At Wed May 18, 09:53:00 AM 2005, Blogger Thangamani said...

அவர்கள் இப்படி அவ்வப்போது கடைவிரிப்பார்கள். கொஞ்சம் மக்கள் விழிப்பாய் இல்லாவிட்டால் அறிவியலில் இருந்து அத்வைதம் வரை அவ்ர்கள் தான் ஆள (வாழப்) பிறந்தவர்கள் என்று அறிவிப்பதை அறிவியல் பூர்வமாகவும், ஆன்மிகப்பூர்வமாகவும் அறிவிப்பார்கள். இதை எல்லா தளங்களிலும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். மொழியியலில், தொல்லியலில் (ராஜாராம் சிந்ந்து சமவெளி எருதை குதிரையாக்கி, ஆரிய நாகரீகமாக்க முயன்று, அவரது புரட்டு வெளிப்படுத்தப்பட்டது), கல்வியில் (அதற்கு முரளி மனோகர் ஜோஷி இருந்தார்) இப்படி பல தளங்களிலும் சங்பரிவாரின் ஆட்கள் பி.ஜே.பியில் உள்ளே நுழைக்கப்பட்டு மும்முரமாக வேலை செய்தார்கள், செய்கிறார்கள்.

இதற்கு ஜெயகாந்தன் மாதிரி ஆணவக்கொடுக்குகள் வேறு!

பதிவுக்கு நன்றிகள்

 
At Wed May 18, 11:41:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

சிறீரங்கன்,
தகவலுக்கு நன்றி.

 
At Wed May 18, 11:50:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

ntmani,
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

ஆண்டாண்டு காலமாய் தொடரும் இக்கருத்து வன்முறையின் விளைவாய், பொய்கள் பலவற்றை மக்கள் உண்மையென ஏற்றுக்கொண்டாகி விட்டனர்.
இல்லையெனில், தன்னையே கேவலப்படுத்தும், வழிபாட்டுமுறையை இன்னமும் கடைபிடிப்பார்களா?
பெரு ஊடகங்கள் பலவும் இதை தொடர்ந்து செய்து வருவதை தடுப்பதற்கான வழியை யோசிக்க வேண்டும்.

 
At Wed May 18, 03:28:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

இதை வாசிக்கும் தமிழ்நாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தினமணியின் அச்சுப்பதிப்பில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளதா? என்பதை கூற முடியமா? ஒரு தகவலுக்காக கேட்கிறேன்.

 
At Mon May 23, 05:00:00 PM 2005, Blogger G.Ragavan said...

எதை வேண்டுமானாலும் துணைக்கழையுங்கள். ஆனால் வர்ணபேதங்களை நியாயப் படுத்தாதீர்கள். எதை வேண்டுமானாலும் துணைக்கழையுங்கள். ஆனால் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லாதீர்கள். எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் ஓர் நிறை. எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

அன்புடன்,
கோ.இராகவன்

 

Post a Comment

<< Home