Get Nandalaalaa atom feed here!

Monday, July 25, 2005

நிலநடுக்கம் - புதிய காரணம் கண்டுபிடிப்பு!

சுனாமி ஏற்பட நிலநடுக்கம் காரணம்
நிலநடுக்கம் ஏற்பட - பெண்கள் விடுதலையே!

இப்படி கண்டுபிடித்து கழிந்திருக்கிறது தினமலம்

பெண்களை காட்சிப்பொருளாக்குவது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை.
அதற்கு காரணமான ஆணாதிக்க மற்றும் சந்தைமயமாக்கலை விடுத்து பெண்ணுரிமை மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.

Get Nandalaalaa atom feed here!

Tuesday, July 12, 2005

எருமைகளுக்காக கொல்லப்பட்ட மூன்று தலித்துகள்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டியை தொடர்ந்து, கண்டதேவியிலும் தலித்துகளின் குமுக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியில், தலித்துகளுக்கு எதிரான உச்சகட்ட அநியாயம் ஒன்று நடந்தேறியுள்ளது. அவர்களின் உயிர் வாழும் உரிமையே இப்போது(ம்) கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

எருமை மாடுகளை திருடியதாக குற்றம் சாட்டி, தந்தை இரு மகன்கள் உள்ளிட்ட மூன்று தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், ஹிந்துக்களின் புனித நகரான, கும்பமேலா புகழ் உஜ்ஜைனி மாவட்டத்தின் கிராமமொன்றில் நடந்துள்ளது.

இதை அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு பண உதவி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்செயலை புரிந்தமைக்காக உயர் சாதியினர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

அதே சமயம், அப்பகுதியில் அசம்பாவிதத்தை தவிர்க்க - தலித்துகளின் எதிர்வினையிலிருந்து உயர்சாதியினரை காக்க என வாசிக்கவும்- அதிக அளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலித்துகளுக்கு தனிக்குவளை, சுடுகாடு மட்டுமல்ல, தனி (நடைமுறை) அரசியல் சட்டம், குற்றவியல் சட்டங்களும் உண்டு. ஆனாலும், எல்லோரும் ஹிந்துக்கள், ஹிந்தியர்கள்.

தினமணியில் இச்செய்தி

Get Nandalaalaa atom feed here!

Thursday, July 07, 2005

லண்டன் நகரின் தொடர் குண்டுவெடிப்பு!.

லண்டன் நகரின் பல இடங்களில் இன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

பேருந்து மற்றும் இரயில்களில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் வரை கொல்லப்பட்டும், நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மனித நேயமற்ற இந்த செயல் மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரம், உலக பணக்கார முதலாளித்துவ நாடுகளின் கூட்டமொன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை ஏற்கவிருக்கும் இங்கிலாந்தின் தலை நகரில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளதும் முக்கியத்துவத்தை கூட்டுகிறது.

இக்குண்டுவெடிப்பை தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிரான போர் பலம் பெரும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டோனி பிளய்ர் உள்ளிட்ட ஏனைய நாட்டு தலைவர்களும் இச்சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

இந்த கொடுஞ்செயலுக்கு, அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய, லண்டனில் இயங்கிவரும் ஒரு அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின், ஆப்கானிய மற்றும் இராக்கிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இக்குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

மேற்கத்திய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக இவர்கள் கொண்றுள்ளது யாரை?

காலை நேரத்தில் தங்கள் இல்லங்களிலிருந்து பணியிடங்களுக்கு சென்று கொண்டிருந்த உழைக்கும் வர்க்க பொதுமக்களை. இவர்களில் யாரும் அதிகார மையத்தை சார்ந்தவர்களோ, ஆப்கான், ஈராக் குறித்த மேற்குலகின் கொள்கையை தீர்மானிப்பவர்களோ கிடையாது. இன்னும் கூறப்பபோனால், இவர்களில் பலர் இத்தகைய ஆக்ரமிப்புகளை கண்டிப்பவர்களாக கூட இருந்திருக்கலாம். ஈராக்கின் மீதான படையெடுப்பை கண்டித்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றவர்களாக கூட இருக்கலாம்.

எப்படி இருப்பினும், இராணுவமோ அல்லது வேறு இயக்கமோ, அப்பாவி பொதுமக்களை கொல்வதை நியாயப்படுத்தும் காரணம் என்று எதுவும் இருக்க முடியாது.

குறிப்பாக, இவர்களால் நடத்தப்பட்ட முந்தய தாக்குதல்கள் - அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதல், இந்தோனேசிய பாலித்தீவு, ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் ஆகிய அனைத்துமே அப்பாவி பொதுமக்களை பலி கொண்ட நியாயப்படுத்த முடியாத செயல் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வார்கள்.

ஈராக்கிலோ, ஆப்கானிலோ கொல்லப்படும் அப்பாவி மக்களின் உயிருக்கு ஈடாக என இச்செயலை முன்னிறுத்த முயல்வார்களே ஆயின், அத்தகைய வாதம் எவ்வித நியாயத்திற்கும் உட்படாத வறட்டு வாதமாக மட்டுமே அமையும். இதை நியாயம் எனக்கொண்டால், ஈராக், ஆப்கான் மீதான அமெரிக்க, பிரித்தானிய அரசுகள் நிகழ்த்தும் படுகொலைகளை கண்டிக்க வழியில்லை.

இத்தகைய கொடூரமான செயல்கள் மூலம், பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான், ஈராக் மக்கள் அடையக்கூடிய பலன் என்பதும் எதிர்மறையாகவே இருக்கும் என்பதிலும் ஐயமில்லை. இந்த இயக்கங்களின் செயல்பாடுகள் இவர்களை, சிறு சுயநலக்குழுக்களாகவே அடயாளம் காட்டுகிறது. இவர்கள் தங்கள் மக்களின் நலனை முன்னிருத்தும் போராட்ட இயக்கமாக இல்லாதிருப்பதுடன், சிலரின் ஏவலுக்காட்பட்ட கூலிப்படைகளை ஒத்த செயல்களை கொண்டிருப்பதும் கவணிக்கத்தக்கது.

தற்போதய நிலையில், இக்குண்டு வெடிப்பு, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுக்கு, தங்களின் ஈராக்கின் மீதான ஆக்ரமிப்பை தொடரவும், இரான் மீதான வன்மத்தை தொடர்ந்து, அந்நாட்டை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதிலும் பின்னர், ஆக்ரமிப்பதிலும் ஏற்படக்கூடிய உள்நாட்டு, சர்வதேச எதிர்ப்பை அடக்க பேருதவி புரிந்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதல், அமெரிக்கா மற்றும் பிரித்தன் படைகள் ஆப்கான், பாகிஸ்தான், ஈராக் முதலிய நாடுகளில் ஊடுருவியதற்கு காரணமாக அமைந்தது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின், எதேச்சதிகார அடக்குமுறைக்கு புதிய நியாயத்தை காட்டியுள்ளதுடன், அவர்களை எதிர்க்கும் நடுநிலை நியாயக்குரல்களின் பலத்தையும், இக்குண்டு வெடிப்பு சப்தங்கள் குலைத்துள்ளன என்றால் அது மிகையல்ல.

Get Nandalaalaa atom feed here!

Tuesday, July 05, 2005

அயோத்தி – தொடரும் தீவிரவாதம்.

பாபர் மசூதி என்று அறியப்பட்ட இடத்தில், பயங்கரவாதத்தை அரங்கேற்றி, 400 ஆண்டுகால பழமையான கட்டிடத்தை இடித்த அநாகரீக சம்பவத்தை நடத்தி, இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட – இன்று வரை இந்திய அரசியல் அமைப்பிற்கு சவாலாக உள்ள இராமர் ஆலயத்தில், பாதுகாப்பு படையினர், இன்று காலை ஐந்து நபர்களை சுட்டுக்கொண்றுள்ளனர்.

அந்த ஐந்து பேரும் ஆயுதங்கள் தாங்கியிருந்ததாகவும், கையெறி குண்டுகளை வீசியதாகவும், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு அத்துமீறி கட்டப்பட்ட ஆலயத்ததினுள், அத்துமீறி நுழைந்து அதை தகர்க்க முற்பட்டதாகவும், அதை தடுக்கும் முயற்சியிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் டெல்லி அரசின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதுமுள்ள, இந்து உயர் சாதியினரின் சமஸ்கிருத வழி பாட்டு இடங்கள் அரச பாதுகாப்பை பெற்றுள்ளன.

இனி விசாரணை என்ற பெயரில் ஏதாவது (நாடாளுமன்ற கட்டிடத்தில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பழிசுமத்தப்பட்ட பேராசிரியர் போன்ற) ஒரு நபர் அல்லது ஒரு அமைப்பின் மீது அரச பயங்கரவதம் பாய்ந்து, தன்னிருப்பை உறுதி செய்து கொள்வதுடன், ‘பொடா’ போன்ற கொடும் சட்டமொன்றும் இயற்றப்படலாம்.

இவையணைத்துமே இதுவரை டெல்லி அரசின் வரையரைக் குட்பட்ட இடத்தில் தொடர்ந்து நடந்து வருபவையே. இதில் எதுவுமே சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆனால், இதில் முக்கிய முரண்நகை என்பது இந்நிகழ்வை முன்னிருத்தி நாடு தழுவிய போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக சங்கப்பரிவாரங்கள் அறிவித்துள்ளது தான். இப்போராட்டம் பயங்கர வாதத்தை கண்டித்தும், அதை எதிர்த்தும் என்பதாக அவர்கள் கூறியுள்ளதே முரணின் உச்சகட்டம்.

இந்நாட்டில் இதுவரை நடைபெற்றன வற்றிலேயே மிகப்பெரிய பங்கரவாதத்தை, குறிப்பிட்ட அதே இடத்தில் அரங்கேற்றிய அமைப்புகள் இவைதாம் என்பதும், தாங்கள் ‘பக்தி’ கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் ஒரு ‘தேசத்தின்’ அரசியல் சட்ட அமைப்புக்கு எதிராக, வன்முறையால் ஒரு இடத்தை ஆக்ரமித்து கொண்டு, நீதி நிர்வாகத்துறை துணையுடன், எவ்வித பாதிப்பும் தங்களுக்கின்றி, சுதந்திரமாக மக்களிடையே நடமாடிவரும் இந்த தீவிரவாதிகள் – தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதாக சொலலிக்கொள்வது – வன்முறை மற்றும் தீவிரவாதத்தை கையாளும் உரிமை தங்களுக்கு மாத்திரமே உரித்தானது என உரிமை கொண்டாடுவதாக அறியமுடிகிறதே தவிர, மனிதம் காப்பதற்காக அல்ல என்பதும் தெளிவாகின்றது.

இன்றைய நிகழ்வை நியாயப்படுத்த முடியாதென்ற போதும் இதை, முந்தைய (1991) நிகழ்வின் தொடர்ந்த எதிர்வினையாகவோ அல்லது நாடாளுமன்ற – கோத்ரா போல ஒரு அரங்கேற்றப்பட்ட – வருங்கால வன்முறைக்கு நியாயம் / காரணம் கற்பிப்பதற்காக – நடத்தப்பட்ட ஒரு நாடகமா எனற சந்தேகமும் எழாமலில்லை.

இதுபோன்ற சம்பவங்களில், ஜனகனநாயக அரசும், வரியேய்ப்பு விளமபர வருமான தாக கருத்துசார்பு சுதந்திர பெரு ஊடகங்களும், வழமைபோல ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையான உண்மைகள் என்பது ஒருபோதும் வெளிவராமல் காக்க முனையும் என்பதிலும்் ஐயமில்லை.