Get Nandalaalaa atom feed here!

Tuesday, July 05, 2005

அயோத்தி – தொடரும் தீவிரவாதம்.

பாபர் மசூதி என்று அறியப்பட்ட இடத்தில், பயங்கரவாதத்தை அரங்கேற்றி, 400 ஆண்டுகால பழமையான கட்டிடத்தை இடித்த அநாகரீக சம்பவத்தை நடத்தி, இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட – இன்று வரை இந்திய அரசியல் அமைப்பிற்கு சவாலாக உள்ள இராமர் ஆலயத்தில், பாதுகாப்பு படையினர், இன்று காலை ஐந்து நபர்களை சுட்டுக்கொண்றுள்ளனர்.

அந்த ஐந்து பேரும் ஆயுதங்கள் தாங்கியிருந்ததாகவும், கையெறி குண்டுகளை வீசியதாகவும், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு அத்துமீறி கட்டப்பட்ட ஆலயத்ததினுள், அத்துமீறி நுழைந்து அதை தகர்க்க முற்பட்டதாகவும், அதை தடுக்கும் முயற்சியிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் டெல்லி அரசின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதுமுள்ள, இந்து உயர் சாதியினரின் சமஸ்கிருத வழி பாட்டு இடங்கள் அரச பாதுகாப்பை பெற்றுள்ளன.

இனி விசாரணை என்ற பெயரில் ஏதாவது (நாடாளுமன்ற கட்டிடத்தில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பழிசுமத்தப்பட்ட பேராசிரியர் போன்ற) ஒரு நபர் அல்லது ஒரு அமைப்பின் மீது அரச பயங்கரவதம் பாய்ந்து, தன்னிருப்பை உறுதி செய்து கொள்வதுடன், ‘பொடா’ போன்ற கொடும் சட்டமொன்றும் இயற்றப்படலாம்.

இவையணைத்துமே இதுவரை டெல்லி அரசின் வரையரைக் குட்பட்ட இடத்தில் தொடர்ந்து நடந்து வருபவையே. இதில் எதுவுமே சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆனால், இதில் முக்கிய முரண்நகை என்பது இந்நிகழ்வை முன்னிருத்தி நாடு தழுவிய போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக சங்கப்பரிவாரங்கள் அறிவித்துள்ளது தான். இப்போராட்டம் பயங்கர வாதத்தை கண்டித்தும், அதை எதிர்த்தும் என்பதாக அவர்கள் கூறியுள்ளதே முரணின் உச்சகட்டம்.

இந்நாட்டில் இதுவரை நடைபெற்றன வற்றிலேயே மிகப்பெரிய பங்கரவாதத்தை, குறிப்பிட்ட அதே இடத்தில் அரங்கேற்றிய அமைப்புகள் இவைதாம் என்பதும், தாங்கள் ‘பக்தி’ கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் ஒரு ‘தேசத்தின்’ அரசியல் சட்ட அமைப்புக்கு எதிராக, வன்முறையால் ஒரு இடத்தை ஆக்ரமித்து கொண்டு, நீதி நிர்வாகத்துறை துணையுடன், எவ்வித பாதிப்பும் தங்களுக்கின்றி, சுதந்திரமாக மக்களிடையே நடமாடிவரும் இந்த தீவிரவாதிகள் – தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதாக சொலலிக்கொள்வது – வன்முறை மற்றும் தீவிரவாதத்தை கையாளும் உரிமை தங்களுக்கு மாத்திரமே உரித்தானது என உரிமை கொண்டாடுவதாக அறியமுடிகிறதே தவிர, மனிதம் காப்பதற்காக அல்ல என்பதும் தெளிவாகின்றது.

இன்றைய நிகழ்வை நியாயப்படுத்த முடியாதென்ற போதும் இதை, முந்தைய (1991) நிகழ்வின் தொடர்ந்த எதிர்வினையாகவோ அல்லது நாடாளுமன்ற – கோத்ரா போல ஒரு அரங்கேற்றப்பட்ட – வருங்கால வன்முறைக்கு நியாயம் / காரணம் கற்பிப்பதற்காக – நடத்தப்பட்ட ஒரு நாடகமா எனற சந்தேகமும் எழாமலில்லை.

இதுபோன்ற சம்பவங்களில், ஜனகனநாயக அரசும், வரியேய்ப்பு விளமபர வருமான தாக கருத்துசார்பு சுதந்திர பெரு ஊடகங்களும், வழமைபோல ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையான உண்மைகள் என்பது ஒருபோதும் வெளிவராமல் காக்க முனையும் என்பதிலும்் ஐயமில்லை.

14 Comments:

At Wed Jul 06, 12:02:00 AM 2005, Anonymous Anonymous said...

test

 
At Wed Jul 06, 03:37:00 AM 2005, Anonymous Anonymous said...

ஓ, இந்தியாவிலே பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்குதா?

ஒரு செய்தியை இப்படியும் (எப்படியும்) எழுதலாம் என்பதற்கு இதுவே சாட்சி.

- நொந்தலாலா

 
At Wed Jul 06, 04:31:00 AM 2005, Anonymous Anonymous said...

// ஓ, இந்தியாவிலே பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்குதா? //
அதானே, நன்னா கேட்டேள் நொந்தலாலா.
இப்டித்தான் பாருங்கோ, பாபர் மசூதி இடிச்சப்போ, காந்திய கொன்னப்பல்லாம் பா.ஜ.க வா ஆட்சியில இருந்தது?
இப்டி இவா திரிக்கிறத நம்மளவா மட்டுந்தான்னா சரியா புரிஞ்சுண்டு நொந்துக்க முடியும். என்ன சொல்றேள்?

 
At Wed Jul 06, 09:29:00 AM 2005, Anonymous Anonymous said...

நடந்தது சகிக்க முடியாது எனினும், தீவிரவாதிகளின் உள்ளாடையை விலக்கிப் பார்த்து, லஸ்கரேதொய்பா என்று அடையாளம்! கண்ட நமது பாதுகாப்புப் படையின் திறமையை பாராட்டித்தான் ஆகவேண்டும்!

//இப்போராட்டம் பயங்கர வாதத்தை கண்டித்தும், அதை எதிர்த்தும் என்பதாக அவர்கள் கூறியுள்ளதே முரணின் உச்சகட்டம்//

திருடனை மக்கள் விரட்டிக் கொண்டு ஓடும்போது, முன்னால் ஓடும் திருடனும் "திருடன்" "திருடன்" என கத்திக் கொண்டு ஓடினால், உண்மையான திருடன் தப்ப வாய்ப்புண்டு.

(ச்..சே..ஏன் தேவை இல்லாமல் இந்த நினைப்பு வருகிறது!)

 
At Thu Jul 07, 06:14:00 AM 2005, Anonymous கந்தலாலா said...

//திருடனை மக்கள் விரட்டிக் கொண்டு ஓடும்போது, முன்னால் ஓடும் திருடனும் "திருடன்" "திருடன்" என கத்திக் கொண்டு ஓடினால், உண்மையான திருடன் தப்ப வாய்ப்புண்டு. (ச்..சே..ஏன் தேவை இல்லாமல் இந்த நினைப்பு வருகிறது!) //

சரியா சொன்னீங்க. இந்தப் பதிவை படிக்கும் எல்லாருக்கும் அதே நெனப்பு தான்

- கந்தலாலா

 
At Thu Jul 07, 08:33:00 AM 2005, Blogger மாமன்னன் said...

காங்கிரஸ் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிஆர்பிஎஃப் என்ற மத்திய அரசுப்படையை பாஜக இங்கு பயன்படுத்தி ஏதோ வழிப்போக்கராக வந்த ஐந்து பேரை கொன்றுவிட்டதா என்று தெரியவில்லை.

அல்லது அந்த ஐந்து பேர்களும் முஸ்லீம்கள் மீது பழி போடுவதற்காக வந்த இந்து தற்கொலைப் படையினரா என்றும் அவர் விளக்கவில்லை.

இருக்கும். நந்தலாலாவுக்கு ஏதோ தெரியும் போல இருக்கிறது.

உலகத்தில் முஸ்லீம்கள் பெயரில் நடக்கும் எந்த ஒரு பயங்கரவாதச் செயலும் முஸ்லீம்கள் செய்வதல்ல என்பதும், அது முஸ்லீம்கள் மீது பழி போட யூதர்கள், கிரிஸ்துவர்கள் அல்லது இந்துக்கள் செய்யும் சதிவேலை என்பது எல்லா முஸ்லீம் பத்திரிக்கை இணையதளங்களில் பேசப்படும் விஷயம்.

இது போன்ற மட்டரகமான சப்பைக்கட்டுதல்களையும் உதவாக்கரை ஆராய்ச்சிகளையும் படிக்கும்போது உமட்டுகிறது. இந்துக்களுக்கும் இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்றே தோன்றுகிறது.

முஸ்லீம்கள் எழுதுவது ஆச்சரியமான விஷயம் அல்ல. சமீபகாலம் வரைக்கும் இஸ்ரேலின் உளவுப்படைதான் வோர்ல்ட் டிரேட் செண்டரை அழித்தது என்று உறுதியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் உசாமா பின் லாடனுக்கு ஆதரவாக ஊர்வலங்களும் போனார்கள். வோர்ல்ட் டிரேட் செண்டரை இஸ்ரேல் உளவுப்படைதான் அழித்தது என்றால் உசாமா பின் லாடனுக்கு ஏன் ஊர்வலம்? என்று யாரேனும் கேட்டிருப்பார்களா? உசாமா பின் லாடன் நான்தான் வோர்ல்ட் டிரேட் செண்டரை அழித்தேன் என்று பேசிய டேப் வந்ததும் கொஞ்சம் அந்த பேச்சை விட்டார்கள். ஆனால் உசாமாவுக்கு ஊர்வலம் போவது இன்னும் பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய சொர்க்கங்களில் நடக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் " இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்ற அபத்த பிரச்சாரத்தை மட்டும் விடாமல் செய்துகொண்டிருப்பார்கள். தமிழர்களுக்கு காதில் பூந்தோட்டமே போட்டிருக்கிறார்கள்.

நந்தலாலா எழுதியிருப்பதை படிக்கும்போது ...... தமிழர்கள் தங்கள் காதில் போட்டிருக்கும் பூந்தோட்டத்தை பெருமையாக எல்லோருக்கும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் .

 
At Thu Jul 07, 09:50:00 AM 2005, Anonymous Anonymous said...

இந்த தாக்குதல் நடந்த மறுநாள் உத்திரப்பிரதேச ராய் பரேலி நீதிமன்றம், பாபர் மசூதி இடித்த வழக்கிலிருந்து அத்வானி மற்றும் இந்து தீவிரவாதிகளை CBI விடுவித்தது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

எங்கோ இடிக்கிறதே?

 
At Thu Jul 07, 10:03:00 AM 2005, Anonymous Anonymous said...

அதாவது, அத்வானி வகையறாக்கள் மீதான கிரிமினல் வழக்கை திசை திருப்பி, தேச பக்தர்களை ஒருங்கிணைக்க போடப்பட்ட திட்டம்!!! என்பதே
நிஜம்...!நிஜம்..!!...நிஜம்!!!

 
At Thu Jul 07, 05:12:00 PM 2005, Anonymous ஸ்ரீ பிரேமானந்தா சுவாமிகள் said...

கேடு கெட்ட இந்து மதவெறியன் ஆரோக்கியம் எங்கு போனாலும் பார்ப்பானின் குடுமி ஆடுவது போல அறிவுப்பூர்வமான விவாதம் நடக்கும் இடங்களிலெல்லாம் தேவையில்லாமல் துவேஷமாக எழுதி, இந்து மதத்தை வளர்க்கப் போவதில்லை. கொடுக்கும் காணிக்கைக்கு இவ்வாறு எழுதி தன் வாளை ஆட்டிக் கொள்கிறான்.சமய நல்லிணக்கதுக்கு பெயர் போன தமிழ் நாட்டில், இவன் போன்ற கொடிய விஷ ஜந்துக்களால்தான் அமைதி கெடுகிறது என்பதை யார் உணர்த்தப் போகிறார்களோ?

 
At Fri Jul 08, 04:42:00 AM 2005, Anonymous Ashwin said...

The issue of islamic terrorism is a clear and present danger to the entire humanity, including Muslims. If one can kill or harm others, just to prove one side of an argument ,the whole world will become bloody. 'An eye for an eye will make the whole world blind-Mahatma Gandhi '.
It is worth pondering , why Muslims always feel persecuted ( Unless they r in power, ofcourse), through out the world and why they always choose violence as the only recourse to their issues. If Pakistan can orchestrate terror attacks in India, because it has a 'just' cause in Kashmir, Why cant India attack Pakistan for all these acts of terrorism?
Muslims must understand that they cannot bite the hand that feeds them.They must come out in the open to condemn such attacks decisively. And Hindu Terrorism is equally dangerous and must be strongly condemned too. The only hope for such issues is economic prosperity and hope India becomes an economic superpower very soon. Inshallah !!

Ashwin

PS: Just wondering why blogs of Muslims almost always discuss 'Islam' and nothing else? Are all Muslims so Myopic.?

 
At Fri Jul 08, 01:08:00 PM 2005, Anonymous Anonymous said...

Ashwin is so myopic (and ignorant) that he does not (want to)know the blogs of Adhiraikkaran, Sardhar, Asif meeran, Mufti. Abu Umar's blog contains Islamic and general topics. Some of the muslims blogs have to neuralise the wrong info posted by anti islamic bloggers.

Ashwin has to wonder why nesakumar and co is so myopic that they do not know any topic other than anti-islam

 
At Fri Jul 08, 04:49:00 PM 2005, Blogger புலிப்பாண்டி said...

Ashwin,
Its ridiculous talking to this muslims..I bet, you can never get
any words out of a muslim's mouth except the "greatness" of mohammed and
kuran.They are the most backward,impractical and useles people in the universe
and they don't know anything other than violence..But if you ask about violence
they will pretend like all the muslims in this world are suffering that's
why they kickback.we don't need to do anything. the awareness about this dangereous
community is increasing day by day and soon they will be alienated
from others in the world.That will happen very soon in western countries and in fact
started already..It's in the countries like India, because of
politicians, the vote beggers, it may take a long time..the whole community is
in suicidal path now and soon they will extinct..

 
At Sat Jul 09, 03:49:00 PM 2005, Anonymous ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகள் said...

இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் "பாகிஸ்தான்" ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் என அடையாளம் கண்டது, தீவிரவாதிகள் அணிந்திருந்த சூவில் Made in Pakistan என்ற முத்திரை இருந்ததாம்.

நல்லவேலை அவர்கள் Made in Italy என்ற முத்திரையுள்ள சூவை அணியாமல் இருந்தார்கள்!

 
At Sun Feb 21, 09:45:00 AM 2010, Anonymous Anonymous said...

я вот что скажу: отлично! а82ч

 

Post a Comment

<< Home