Get Nandalaalaa atom feed here!

Saturday, October 08, 2005

நிலநடுக்கம் - மேலதிக தகவல்

ஹி.பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பி, இராஜஸ்தான் ஆகிய இந்திய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பஞ்சாப், ஹரியானாவில் மின் விநியோகம் பாதிப்புக்குள்ளானது. மக்கள் கலவரத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடி நிற்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் மாணவர்களை உடனடியாக வெளியேற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தன.

இந்தியாவின் பிரதமர் தலைமையில் அமச்சரவை கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 1 இலட்சம் உதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது தவிர மீட்பு பணிகள் குறித்து எவ்வித முடிவும் / செயலும் இல்லை. மீட்பு பணிகள் தேவைகள் குறித்து மாநில அரசிடம் கேட்டுள்ளதாக பிரதமர் அலுவலக் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவம் மையம் கொண்டுள்ள கஷ்மீரில் மீட்பு பணிகளில் இன்னும் இராணுவம் ஈடுபடுத்தப்பட வில்லை என்பது வியப்புக்குறிய செய்தி.


பாதிப்புகளை பார்வையிடும் முஷரப் மற்றும் அஜிஸ்.

பாகிஷ்தான் பகுதியில் இராணுவம் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளாதாக தகவல்கள் கூறுகின்றன். பாகிஷ்தான் அதிபர் முஷரப், பிரதமர் அஜிஸ் இருவருமே பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பணிமேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் பாகிஷ்தான் பிரதமர் அஜிஸ் பாதிப்பு மிக கடுமையானது என்றும், உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கக்கூடுமென்றும், இது நாடு எதிர்கொள்ளும் சவால் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இந்திய அரசு தரப்பில் சேதம் குறித்து குறைவான மதிப்பீடே இதுவரை தரப்பட்டுள்ளது.

பல்லாயிரம் உயிர்கள் பலி.

சமீபத்திய தகவல்கள்:
பாகிஸ்தான் பகுதி கஷ்மீரின் பூன்ச், பரமுல்லா, குப்வரா மற்றும் தலைநகர் முஜபராபாத் ஆகிய பகுதிகளில் இலட்சக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கிலானோர் உயிரிழந்திருக்க க்கூடுமென அஞ்சப்படுகிறது.

இந்திய - பாக் அதிகார எல்லையோர உரி என்ற நகரின் வணிக அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து சேதக்கடுமைகளை அதிகரித்துள்ளது.

இந்திய கஷ்மீரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமுள்ளது. தற்போது 400 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இம்மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் உயிருக்கு போராடுவொர் குறித்து எந்த தகவலும் இல்லை.

பல சாலைகளில் மண் சரிவின் காரணமாக் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது, உதவிகள் வந்தடைவதை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

செஞ்சிலுவை சங்கம் தனது அமைப்பினரை உடனடியாக களமிறக்கி முடிந்தவற்றை செய்து வருகிறது. செஞ்சிலுவை சங்கம 'உரி' யில் 1000 கூடாரங்கள் வரை அமைத்துள்ளனர் எனினும் இது போதுமானதல்ல எனவும்
மேலும் உதவிகள் தேவை என சர்வதேச தலைமையகத்தை கோரியுள்ளனர்.

ஆனால், இரண்டு நாட்டு அரசுகளுமே முழுமையாக களம் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்பது வருத்தத்திற்குறியது.

-------------------------------------------------

ஆப்கான், பாக், இந்தியா, காஷ்மீர் பகுதிகளில் கடும் நிலநடுக்கம்.
ஆப்கான், பாக், இந்தியா, காஷ்மீர் ஆகிய தெற்காசிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது



இது ரிக்டர் அளவையில் 7.6 என்ற அளவில் கடுமையாதாக இருந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே அதிக கடுமையானது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வட கிழக்கே 80 கி.மீ தொலைவில் நில நடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது. இதற்கு சுமார் 4 மணி நேரம் முன்னதாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவின் அக்சய் மாகாணத்தின் தென் பகுதியில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை பாகிஸ்தானில் 1000 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இஸ்லாமாபாத்தில் மட்டுமே மிகக்கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

இந்திய காஷ்மீர் பகுதியின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இதுவரை வந்த தகவல்கள் 14 இந்திய இராணுவ வீரர்களும், குழந்தைகள் உள்ளிட்ட 20 நபர்கள் வரை இப்பேரிடருக்கு பலியானதாக கூறுகின்றன.

பூன்ச் மாவட்டத்தில் நீதிமன்ற கட்டடம் ஒன்றும், 200 ஆண்டுகால 'மோத்தி மகால்' என்ற கட்டிடமும் தரைமட்டமானதாக தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்:
உயிருக்கு போராட்டம் இடிபாடுகளுக்கிடையே...




------------------------
WILL UPDATE AS MORE INFO COMINGIN - KEEP CHECK.