Get Nandalaalaa atom feed here!

Saturday, August 13, 2005

சாதி ஒழிப்பில் உச்ச நீதிமன்றம்!

அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளில் இனி மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு முறை ரத்து - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.

நானாவதி அறிக்கை அமளிக்கும், கதிர்காமர் கொலைக்கு புலிகளை காரணமாக்க துடிக்கும் நிகழ்வுகளினூடே, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் வழங்கிய இத்தீர்ப்பு குறைவான கவனத்தையே பெற்றுள்ளது.

இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது - அரசின் உதவிபெறாதவை என்பதால் இவற்றில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவோ, அரசு கோட்டா என இடங்களை ஒதுக்கிக்கொள்ளவோ அரசுக்கு உரிமையில்லை - என்பதாக.

இத்தீர்ப்பின் மூலம் வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டு அரசுக்கு, பொறியியல் கல்லூரிகளின் மொத்த இடங்களான 70,000-ல், 7000 இடங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும். 7000த்தில் 69% இட ஒதுக்கீட்டின் கீழ் 4,830 இடங்கள் மட்டுமே கிடைக்கும். [69% இடஒதுக்கீடு உச்சவரம்பும் இதே சாதிமன்றத்தால் முன்னர் தீர்ப்பாக வழங்கப்பட்டது.] இனி தமிழக மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டின் கீழ் கிடைக்க இருப்பது வெறும் 6.9% இடங்களே!

உச்ச நீதிமன்ற சாதியரசர்களின் மனப்பாங்கு பல கேள்விகளை எழுப்புகின்றது.

ஏற்கனவே 69% என்ற வரையரையை திணித்தது இந்தியாவின் மேன்மையை காத்தது. பின்னர் சமீபத்தில், ஜெயின் மதத்தினர் தங்களை சிறுபான்மையினராக அறிவிக்க கோரிய வழக்கின் தீர்ப்பில், "சிறுபான்மையினராக புதிய பிரிவினரை அறிவிப்பதில் 'தேசிய ஒருமைப்பாடு' பாதிக்கப்படும் எனவும், மாநில சிறுபான்மை கமிஷன்கள் புதிய பிரிவினர்களை சிறுபான்மையினராக அறிவிப்பதை தவிர்க்கவும்" கூறியுள்ளது. மேலும் இதே தீர்ப்பில், சாதிய பாகுபாடுகள் கொண்ட இந்தியாவில் யாருமே பெரும்பான்மையினர் இல்லை என்றும் கூறி இருந்தது. [ஜெயின் சமூகத்தினரும் - இராமகிருஷ்னா மிஷனரிகளும் சிறுபான்மை அந்தஸ்து கோரியது வேறு காரணங்களுக்காக]

சாதீய பாகுபாட்டை தீண்டத்தகாததாக இவர்கள் பார்ப்பதெல்லாம் - ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை கோரும்போது மட்டுமே!

சாதிய கொடுமை இல்லை - இல்லவே இல்லை என வாதிடும் சமத்துவபுர ஜென்டில்மேன்களின்[நன்றி: சுவ? / த.மணி?] மேலான 'பார்வைக்கு'

இப்படிப்பட்ட நிகழ்வுகளும், நீதி(?)மன்ற நிலைப்பாடுகளுமே இனிவரும் காலங்களில் 'இத்தகைய' நிகழ்வுகளை அதிகரிக்க செய்யும்!

ஜெய் ஹிந்த்!

31 Comments:

At Sat Aug 13, 02:25:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

சோதனை

 
At Sat Aug 13, 02:33:00 PM 2005, Blogger Thangamani said...

இது அதிர்ச்சியடைய வைத்த செய்தியாகத்தான் இருந்தது. இதை எதிர்த்து வழக்கு மன்றத்தின் வழியாகவோ அல்லது மக்கள் போராட்டத்தின் மூலமாகவோ போராடவேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது.

 
At Sat Aug 13, 02:48:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நன்றி தங்கமணி!
இதை நீக்க நீதிமன்றத்தை நாடுவது எவ்வித பலனையும் தராது. ஏற்கன்வே பல தீர்ப்புகளில் இட ஒதுக்கீட்டை தீண்டத்தகாதாக பார்ப்பதை உ.நீதிமன்றம் தொடர்ந்து வருகிறது.

ஒரே வழி, இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்தும் புதிய சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும்.

ஆனால் நடக்குமென நம்பிக்கையில்லை.

 
At Sat Aug 13, 03:23:00 PM 2005, Blogger ROSAVASANTH said...

//இது அதிர்ச்சியடைய வைத்த செய்தியாகத்தான் இருந்தது.//

அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ என்ன இருக்கிறது? 'அனைவரும் அர்ச்சகராகலாம்' என்று கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை காலி செய்த நீதிமன்றத்தின் இந்த மனப்போக்கில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

 
At Sat Aug 13, 03:24:00 PM 2005, Blogger Amar said...

மிக நல்ல தீர்ப்பு.
சாதி அடிப்படையில் இட-ஒதுக்கிடுகள் ஒழிந்து , அவர் அவர் பொறுளாதார நிலை-இன் அடிப்படையில் இட-ஒதுக்கிடுகள் அமல் படுத்த வேண்டும்.

கிராம மானவர்களுக்கு இட-ஒதுக்கிடுகள் செய்து கொடுப்பதும் ஒரு நல்ல யோசனை.

 
At Sat Aug 13, 03:25:00 PM 2005, Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

 
At Sat Aug 13, 05:00:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நன்றி ரோசாவசந்த்! ('-'க்கும் சேர்த்து;-))

//அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ என்ன இருக்கிறது? 'அனைவரும் அர்ச்சகராகலாம்' என்று கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை காலி செய்த நீதிமன்றத்தின் இந்த மனப்போக்கில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?//

மிகச்சரி. சாதிய கொடுமைக்கெதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கத்திற்கு இணையாக நீதித்துறையும் ஒரு தடையாகவே இருந்து வந்துள்ளது. பாப்பாப்பட்டி - கீரிப்பட்டிகள், கண்டதேவி போன்றவற்றில் முற்போக்காய் தீர்பளிப்பது போல் தோன்றினாலும், தீர்ப்புகள், அதிகாரவர்க்கத்தினால் திட்டமிடப்பட்டு, மீறப்படும் போதும் கூட நீதிமன்றங்கள் மவுனம் காத்தே வருகின்றன.

 
At Sat Aug 13, 06:49:00 PM 2005, Anonymous Anonymous said...

intha pathivu athirchi alikkakudiyathaaga ullathu.
Ithai kuriththu alternative law forum member-galil oruvarukku ezhuthukindren. ithu thodarpaana link kodukka mudiyumaa?.
Anbudan
Balaji-paari

 
At Sat Aug 13, 07:29:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நன்றி பாலாஜி-பாரி!

இந்து மற்றும் தினமணி

 
At Sat Aug 13, 08:10:00 PM 2005, Blogger ROSAVASANTH said...

என் நீக்கப்பட்ட பின்னூட்டம் வேறு எதுவும் அல்ல. +க்கு பதில் - குத்திவிட்டேன் - தவறுதலாய். ஒரு உந்துதலாய் இன்னும் பல - குத்தப்பட்டுவிடக்கூடாதே என்று நீக்கிவிட்டேன். இப்போது எந்த கவலை இல்லை.

 
At Mon Aug 15, 04:53:00 AM 2005, Blogger Balaji-Paari said...

நந்தலாலா,
இது குறித்தான ரவி-யின் பதிவுகளை பாருங்கள். (சுட்டிகளுக்கு நன்றி!!). அவரது அவதானம் சரியாக இருந்தாலும், நம்பிக்கை இழக்கச் செய்வதாக உள்ளது.

 
At Tue Aug 16, 04:59:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

பாலாஜி-பாரி,

ரவி சொல்லியிருப்பது முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே தி.மு.க, பா.ம.க வெல்லாம் சேர்ந்து சட்டமியற்றியிருக்க வேண்டும் என்பதாக.

பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசில் பெரியாரே பங்குபெற்றிருந்தாலும் கூட அது நடந்திருக்காது.

உச்ச நீதி மன்ற பரிந்துரையை மீறி சட்டமியற்ற முடியாதென்பதில்லை. உ.நீதிமன்றம் சட்டத்தை பின்பற்றியே அரசுக்கு பரிந்துரைகளை வழங்கலாமே தவிர, சட்டமியற்றுவது - இந்திய அரசியல் அமைப்பின்படி- நாடாளுமன்றம் தான். இப்போதும் கூட ஒரு சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் வைத்து சட்டமாக்குவதன் மூலம் சமூக நீதியை நிச்சயப்படுத்த முடியும்.

ரவி சொல்வது போல நாடு முழுமைக்கும் ஒரே அளவீடு என்பது இட ஒதுக்கீட்டை எளிமைபடுத்தி வழுவிழக்க செய்யும் ஒன்று. அதைவிட ஒவ்வொரு மாநில அரசிற்கும் இட ஒதுக்கீட்டை நிர்ண்யித்துக்கொள்ளும் உரிமை தரப்பட வேண்டும்.

நேரமின்மையால் பின்னர் விவரமாக எழுதுகிறேன்.

 
At Tue Aug 16, 07:18:00 AM 2005, Blogger dondu(#11168674346665545885) said...

"அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளில் இனி மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு முறை ரத்து - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு"

இதில் என்ன தவறு கண்டீர்கள்? இட ஒதுக்கீடு தனியார் துறையில் கிடையாதுதானே. மேலும் இந்த "இட ஒதுக்கீடு" சம்பந்தப்பட்ட சாதிகளில் வசதியானவரால்தான் அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

மெனக்கெட்டு ஒருவன் பணம் போட்டு கல்லூரி ஆரம்பிக்கிறான். அரசு உதவியும் இல்லை. அவனிடம் போய் இட ஒதுக்கீட்டு என்று அலம்பல் செய்வதைத்தான் நீதிமன்றம் தடை செய்தது.

நம்மையே எடுத்துக் கொள்வோம். நமக்கு கோர்ட் கேஸ் என்று ஏதாவது பிரச்சினை வந்தால் நாம் மிக நல்ல வக்கீலைத்தான் தேடிப் போவோமே தவிர சாதி ஒதுக்கீடு அடிப்படையில் நமக்கு 10 கேஸுகள் இருந்தால் அதில் 6 கேசுகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த வக்கீல்களுக்கா கேசுகளைக் கொடுப்போம்? திருமாவும் க்ரிஷ்ணசாமியும் கூட அவ்வாறுதான் செய்வார்கள்.

அதற்காக முற்போக்கு சாதி என்றும் தேடிப் பிடித்து தர மாட்டோம். திறமைசாலி என்பதுதான் இங்கு பார்க்கப்படும் என்பதையே சொன்னேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

.

 
At Tue Aug 16, 09:24:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

//மேலும் இந்த "இட ஒதுக்கீடு" சம்பந்தப்பட்ட சாதிகளில் வசதியானவரால்தான் அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.//

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டு?

 
At Tue Aug 16, 10:22:00 AM 2005, Blogger dondu(#11168674346665545885) said...

"எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டு?"

கைப்பூணுக்கு கண்ணாடி வேண்டுமா?தெரிந்துதான் கேட்கிறீர்களா அல்லது தெரியாமல் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் சந்தேகத்தின் பலனை இப்போதைக்கு அளித்து பதில் கொடுக்கிறேன்.

இது சம்பந்தமாக நான் வேறு இடத்தில் அளித்தப் பின்னூட்டத்தின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன். பார்க்க:

http://mymeikirthi.blogspot.com/2005/08/blog-post_13.html#comments

"மத்திய பொதுப்பணித் துறையில் 10 வருடம் வேலை செய்தவன் நான். அங்கு இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கூறுவேன்.

யு.பி.எஸ்.சி.யில் தேர்வு பெற்று ஒரு பொறியாளர் கஜட்டெட் அதிகாரியாக, உதவி கோட்டகப் பொறியாளராக நியமிக்கப்பட முடியும். இதில் இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்டு. இதில் பிரச்சினையில்லை. ஆனால் அவ்வாறு இட ஒதுக்கீடு பெற்று முன்னேறிவிடுபவர் தலைமைப் பொறியாளர் வரைக்கும் பதவி உயர்வு பெற தனி லிஸ்டே உண்டு. ஒன்றாக நியமிக்கப்படும் இருவரில் இட ஒதுக்கீடு பெறுபவர் தலைமைப் பொறியாளராக (CE) நல்ல வாய்ப்பு. இன்னொருவரோ மேற்பார்வைப் பொறியாளருக்கு (SE) மேல் உயர்வது கடினம். (AEE, EE, SE, Dy.CE, CE)

அது மட்டும் இல்லை. அவ்வாறு பதவி உயர்வு பெறும் ஒருவரின் பிள்ளைகளுக்கு எல்லா இடத்திலும் இட ஒதுக்கீடு உண்டு. இப்போது 3-4 தலைமுறைக்கு இட ஒதுக்கீடு பெறும் ஒரே குடும்பத்தினர் அனேகம் உண்டு.

இது பழைய நிலை. 1990-க்குப் பிறகு மண்டல் கமிஷன் உபயத்தால் இட ஒதுக்கீடு பின்தங்கிய வகுப்பினருக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது நிலைமை இன்னும் மோசம். மந்திரிகளின் குழந்தைகள், பேரர்கள் கூட இட ஒதுக்கீடு பெறும் நிலை."

கல்வியிலும் அதே நிலைதான். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தா கலெக்டரின் பசங்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் எல்லோரும்தான் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Tue Aug 16, 04:32:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

டோண்டு,
ஆதாரம் கேட்டால் - அவதாரங்களை விவரிக்கும் புராணிகளை போல உங்கள் சொந்த சரக்கை தருகிறீர்கள்?

தாழ்த்தப்பட்டவர்களில் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் சென்றடைய வெண்டிய வழி வகையே ஆராயப்பட வேண்டியது. மாறாக அதையே ஒழிக்க நினைப்பது கயமைத்தனம் அல்லாது வேறில்லை.

அரசு அளித்த சுடுகாட்டில் கூட எதிர் மறை இட ஒதுக்கீட்டை அமல் படுத்தி அலம்பல் செய்யும் ஒரு அமைப்பில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதும் குமுக நீதியி அடிப்படையில் நியாமான ஒன்றே.

1. இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்ட இந்திய / அதன் மாநில அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இடம் பெற்று வரும் தாழ்த்தப்பட்டவர் / பிற்படுத்த பட்டவர் / மிகவும் பிற்படுத்தப்பட்டவர் / மேல் சாதியினர் எத்துனை சதவீதம் ?

2. இந்த விகிதாச்சார அடிப்படையில் அத்துறைகளின் திறம் எவ்வாறு, பிறவித்திறன் மிக்க மேல் சாதியினரின எண்ணிக்கை குறைபாட்டால் - குறைந்து வந்துள்ளது?

இதற்கு தகுந்த - ஆதாரங்களுடன் பதிலிட்டால் மேற்கொண்டு இதுபற்றி உங்களுடன் விவாதிக்க முடியும்!

மிக்க நன்றி,
நந்தலாலா.

 
At Tue Aug 16, 05:47:00 PM 2005, Blogger dondu(#11168674346665545885) said...

இட ஒதுக்கீட்டால் முன்னுக்கு வந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கே தலை முறை தலைமுறையாக சலுகைகள் கிடைக்கின்றன என்பதையும் எழுதியிருந்தேனே. அதுதான் துஷ் பிரயோகம் என்றேன். அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே நீங்கள்?

இப்போது கூறுங்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆனால் இட ஒதுக்கீடு காரணமாக உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கிறார். அப்பிள்ளைகளுக்கு மேலும் இட ஒதுக்கீடு, வெறும் சாதி காரணமாக. ஏன்? இதற்கு நீங்கள் பதில் சொல்லாதவரை நம் விவாதம் பலனளிக்காது என்று நானும் கருதுகிறேன்.

அதே போல சீனியரிட்டி லிஸ்டையும் தலைமைப் பதவி வரைக்கும் சாதி அடிப்படையில் வைத்திருப்பது என்ன நியாயம்?

"தாழ்த்தப்பட்டவர்களில் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் சென்றடைய வேண்டிய வழி வகையே ஆராயப்பட வேண்டியது. மாறாக அதையே ஒழிக்க நினைப்பது கயமைத்தனம் அல்லாது வேறில்லை."
ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஆனால் முன்னேறிவிட்டக் குடும்பங்களை அந்த லிஸ்டில் இருந்து எடுத்தால்தானே அதே தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்ற பிள்ளைகளும் முன்னுக்கு வர முடியும்? இதில் என்னக் குழப்பம் உங்களுக்கு?

இவ்வாறு செய்ய எம்.ஜி.ஆர். அவர்கள் முயன்றார். ஆனால் சலுகைகளை தலைமுறை தலைமுறையாய் அனுபவித்து வரும் சில vested interests அவரை அவ்வாறு செய்ய விடவில்லை.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Tue Aug 16, 07:50:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

டோண்டு,
//இட ஒதுக்கீட்டால் முன்னுக்கு வந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கே தலை முறை தலைமுறையாக சலுகைகள் கிடைக்கின்றன என்பதையும் எழுதியிருந்தேனே. அதுதான் துஷ் பிரயோகம் என்றேன். அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே நீங்கள்?//
என கேட்டுவிட்டு நீங்களே அடுத்து
//"தாழ்த்தப்பட்டவர்களில் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் சென்றடைய வேண்டிய வழி வகையே ஆராயப்பட வேண்டியது. மாறாக அதையே ஒழிக்க நினைப்பது கயமைத்தனம் அல்லாது வேறில்லை."
ஆயிரத்தில் ஒரு வார்த்தை.// என்று சுட்டியுள்ளீர்கள்.

அந்த *ஆயிரத்தில் ஒரு வார்த்தை* யில் உங்கள் கேள்விக்கான பதில் இல்லையா? குழப்பம் எதுவும் எனக்கில்லை.

வேறு தளங்களில் உள்ள சில //vested interests// கள் தான் இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்ட, அது அறிமுகப்படுத்தப்பட்ட காலம்ந்தொட்டே முயன்று வருகின்றனர்.

அத்தகைய //vested interests// களுக்கு இடம்தரக்கூடாது என்பதாலேயே, இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தம் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதையும் - அது தேவைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் என் போன்றோர்கள் உள்ளீடாக - இட ஒதுக்கீட்டின் மொத்த பயனர்களும் அதில் சீர்திருத்தம் வேண்டும் வரை அமைதி காப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம்.
நனறி,
டோண்டு.

 
At Tue Aug 16, 09:01:00 PM 2005, Blogger dondu(#11168674346665545885) said...

அத்தகைய //vested interests// களுக்கு இடம்தரக்கூடாது என்பதாலேயே, இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தம் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை...

அப்படிக் கூறிக்கொண்டே எவ்வளவு நாள்தான் காத்திருப்பது? முன்னேறியக் குடும்பங்கள் லிஸ்டிலிருந்து வெளிவர வேண்டியது உடனே நடக்க வேண்டிய சீர்திருத்தம் ஆகும்.

அதனாலேயே நீதிமன்றத் தீர்ப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Wed Aug 17, 08:35:00 PM 2005, Anonymous Anonymous said...

kalloorigal laaba nokkil nadathapada koodadhaam. indha needhipadhi
endha nootraandil irukkiraar?

satta thiruththam varadha patchathil arase indha kaloorigalai eduthu nadathum endru
jayalalitha arivithirukirar. indha arivippai naan varaverkkiren. samooga poruppu
illamal verum panam mattume kurikoludan nadathapadum kaloorigaluku idhu
dhan sariyana adiyaga irukum. kaloorigal anaithum arasiyalvadhigal,
hero matrum sirippu nadigargal nadathi varugiraargal. idhai seyya koodiya
dhairiyam jayalalithavukku mattume undu.

 
At Thu Aug 18, 12:24:00 AM 2005, Anonymous Anonymous said...

indhiyavukku sudhandhiram kidaithe 2 thalaimuraigal dhan aaginradhu. mandal
vandhu oru thalaimurai kuda aagavillai. thalaimurai thalimurayaga ida odhukeedu
anubavikkirargalam.

ingu ida odhukeedu edhirkkum paarpanargal, velinadugalil tharum scholarship
panam konde padikka mudigiradhu. indhiyavil ulladhu pol panam ullavanukku mattum
vaaipu endru irundhaal, ivargal yaarum angu sendru kuppai kottiyirukka mudiyadhu.

 
At Thu Aug 18, 01:40:00 AM 2005, Anonymous Anonymous said...

in tamil nadu reservation for backward castes is there for about fifty years.since 1980 it is fifty percent. the cream of the so called backward castes enjoy the benefits.supreme court stipulated the exclusion of creamy layer from reservations. but that was not acceptable to the government.why it is all because of vote bank politics.

universities abroad go by merit only and offer scholarships or fellowships.there is no quota for indians, chinese etc.there are many poor students who get the fellowship offers.if you hate
brahmins state that openly.but you are proving that are an idiot who does not know the facts.

 
At Thu Aug 18, 01:41:00 AM 2005, Anonymous Anonymous said...

in tamil nadu reservation for backward castes is there for about fifty years.since 1980 it is fifty percent. the cream of the so called backward castes enjoy the benefits.supreme court stipulated the exclusion of creamy layer from reservations. but that was not acceptable to the government.why it is all because of vote bank politics.

universities abroad go by merit only and offer scholarships or fellowships.there is no quota for indians, chinese etc.there are many poor students who get the fellowship offers.if you hate
brahmins state that openly.but you are proving that you are an idiot who does not know the facts.

if your thinking begins with hating brahmins it is your fault.

 
At Thu Aug 18, 07:15:00 PM 2005, Anonymous Anonymous said...

universities abroad go by merit only and offer scholarships or fellowships.there is no quota for indians, chinese
haha angum ore merit ullavargalil vellayargalai vida mattravargalukku muniramai undu. merit+need adipadayildhan scholarship alika padugiratdhu.
indhiyavil merit ulla panam illadhavargaluku scholarship alika padugiratha? vaaipu alikapadukiratha? harvardil oru vellayar seat vanguvadhai vida oru afriva american elidhaga seat vanga mudiyum.

mattroru naatil indha vaaipugalai anubavipavargalukku adhe vaaipu thangal naatil matravargalukku alipadhu yen pidipadhillai ?

 
At Mon Dec 11, 05:44:00 PM 2006, Blogger தமிழ் அகராதி said...

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

 
At Wed Nov 25, 04:44:00 AM 2009, Anonymous Anonymous said...

nandalaalaa.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading nandalaalaa.blogspot.com every day.
faxless payday loan
canadian payday loans

 
At Tue Apr 20, 09:26:00 PM 2010, Blogger Unknown said...

I recently came across your post and have been reading along. I thought I would leave my first comment. I don't know what to say except that it caught my interest and you've provided informative points. I will visit this blog often.

Thank you,

Small Business Loans

 
At Mon Aug 15, 01:22:00 AM 2011, Anonymous Anonymous said...

Will a GTX 580 work in a DX58SO motherboard given 600W power supply?find websites to print tickets?How do I put applets in Yola?How do i connect my xbox to the internet i have a router buh no computer? ps3 jailbreak patch How do I get my list of favorites on my homepage?read a each line in txt using a batch file?Do I need to upgrade my Acer desktop graphics card? ps3 jailbreak gt5 jailbreak ps3 ps3 jailbreak chip I was wondering how people on tumblr got so many followers?!?how to block non-friends from facebook?Why does this thing pop up randomly saying you are not running genuine windows??!?!?!?I need help with facebook and my droid x? ps3 jailbreak usb download How can I look up old forum posts?For Those Running Parallel on MAC?Is There a Game making Tutorial or Guide for Blender? ps3 sharpshooter [url=http://ps3jailbreak24.blogspot.com]ps3 jailbreak[/url] Sandisk Cruzer Micro 16gb USB Malfunctioning?I can't figure out how to fix the screen size on a game I have downloaded.?I know how to make barcodes from excel and access, make id cards, but how do i use that to take roll?How can you stop the green dots from appearing in Paint Tool SAI? ps3 jailbreak patch Video playback is choppy on youtube and netflix! Help!?activate my facebook account?HTML Countdown form with user input time redirect to custom url? usb ps3 jailbreak Screen Resolution Problem? HELP!?How to play WMV. files on goole CR-48 laptop?Laptop question >compaq or acer or HP?what should I do to sell on my website( read details plz)?Would someone please invite me to Demonoid?

 
At Sun Aug 21, 11:05:00 AM 2011, Anonymous Anonymous said...

A encyclopaedic fitness program tailored to an individual wishes unquestionably core on harmonious or more definitive skills, and on age-[3] or health-related needs such as bone health.[4] Innumerable sources[citation needed] also cite loony, societal and heartfelt fettle as an important purposes of whole fitness. This is often presented in textbooks as a triangle made up of three points, which show true, poignant, and mental fitness. Material seemliness can also prevent or act towards many long-lived salubrity conditions brought on by way of unhealthy lifestyle or aging.[5] Working out can also serve people forty winks better. To delay robust it is important to agree in physical activity.
Training

Certain or task-oriented [url=http://www.pella.pl]fitness[/url] is a living soul's ability to complete in a determined activity with a sound expertness: after example, sports or military service. Specific training prepares athletes to respond fully in their sports.

Examples are:

400 m sprint: in a sprint the athlete necessity be trained to master-work anaerobically all the way through the race.
Marathon: in this wrapper the athlete requirement be trained to production aerobically and their endurance requisite be built-up to a maximum.
Multifarious run a risk fighters and constabulary officers sustain unvarying good physical condition testing to draw if they are qualified of the physically demanding tasks required of the job.
Members of the Partnership States Army and Army Native Look after necessity be masterly to pass the Army Palpable Good shape Try out (APFT).

 
At Thu Mar 14, 01:49:00 PM 2013, Anonymous Anonymous said...

MnvTjdKmsDdl [url=http://nikeshoes45765.seesaa.net/]ナイキ[/url]
CrgYdnKrdRxk [url=http://xn--ecks9fz911c.seesaa.net/]nike シューズ[/url]
BxlCdoTsgKed [url=http://adidas73.webnode.jp/]アディダス スニーカー[/url]GcfQtpHpgKjq [url=http://adidas353.webnode.jp/]アディダス[/url] NzwBtzElmLwl [url=http://adidas31.webnode.jp/]adidas スニーカー[/url] PvnKywWldJsl [url=http://adidas76.webnode.jp/]アディダス スニーカー[/url]UfrFbnQrgAaf [url=http://adidas2459.webnode.jp/]adidas[/url]NxgQqqTvzZqg [url=http://nikemenshoes.blog.fc2.com/]ナイキシューズ[/url]

 
At Tue Jul 07, 10:45:00 PM 2015, Blogger Unknown said...

reservation endru oliyomo andru than india orupadum thiramai saligalikku work and study kudungal,

 

Post a Comment

<< Home