நிலநடுக்கம் - மேலதிக தகவல்
ஹி.பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பி, இராஜஸ்தான் ஆகிய இந்திய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பஞ்சாப், ஹரியானாவில் மின் விநியோகம் பாதிப்புக்குள்ளானது. மக்கள் கலவரத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடி நிற்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் மாணவர்களை உடனடியாக வெளியேற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தன.
இந்தியாவின் பிரதமர் தலைமையில் அமச்சரவை கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 1 இலட்சம் உதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது தவிர மீட்பு பணிகள் குறித்து எவ்வித முடிவும் / செயலும் இல்லை. மீட்பு பணிகள் தேவைகள் குறித்து மாநில அரசிடம் கேட்டுள்ளதாக பிரதமர் அலுவலக் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவம் மையம் கொண்டுள்ள கஷ்மீரில் மீட்பு பணிகளில் இன்னும் இராணுவம் ஈடுபடுத்தப்பட வில்லை என்பது வியப்புக்குறிய செய்தி.

பாதிப்புகளை பார்வையிடும் முஷரப் மற்றும் அஜிஸ்.
பாகிஷ்தான் பகுதியில் இராணுவம் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளாதாக தகவல்கள் கூறுகின்றன். பாகிஷ்தான் அதிபர் முஷரப், பிரதமர் அஜிஸ் இருவருமே பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பணிமேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் பாகிஷ்தான் பிரதமர் அஜிஸ் பாதிப்பு மிக கடுமையானது என்றும், உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கக்கூடுமென்றும், இது நாடு எதிர்கொள்ளும் சவால் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இந்திய அரசு தரப்பில் சேதம் குறித்து குறைவான மதிப்பீடே இதுவரை தரப்பட்டுள்ளது.